இது நம்ம சகோதரி சந்தன முல்லை அவர்களின் பதிவில் இருந்து எடுக்கப்பட்ட வரி...
//யாராவது நமது பிள்ளைகள் அரசியலுக்குப் போகிறேன் என்றால், நாம் முதலில் செய்வது அட்வைஸ். படிச்சு, நல்ல வேலைக்கு போகிற வழியைப் பாரு!//
நான் இந்த கோஷ்டி இல்லேங்க...என்னோட பொண்ணு ஒரு பெரிய அரசியல்வாதி ஆகனும்குறது தான் என்னோட ஆசை......எனக்கு இந்திய அரசியல் பிடிக்காது...ஆனா, உலகத்துல இருக்குற பல பெண் அரசியல்வாதிகள் பார்த்து ஆச்சர்ய பட்ருக்கேன்.
நம்ம தாய் நாட்டுக்கு இருக்குற ஒரே குறை, படித்த சுய நலம் இல்லாத அரசியல்வாதிகள். நாமலே அந்த விதை போட மறுத்தோம்னா நம்ம தாய் மண்ணை வேற யார் காப்பாத்துவா?
வரலாறு, புவியியல் -நு ஏன் தான் நம்ம பிள்ளைங்களை தேவை இல்லாத பாடங்களை படிக்க வைக்குறாங்கன்னு நிறைய பெற்றோர்கள் புலம்புவதை கேட்டு இருக்குறேன்/ ...என்னோட வரலாறு ஆசிரியை தான் எனக்கு புரிய வச்சாங்க.....பின்னாடி காலத்ததுல ஒருத்தர் கணித மேதையா வரலாம். இன்னொருத்தர் அறிவியல் மேதையா வரலாம். தமிழ் அறிஞரா வரலாம்/ யாரு என்னவாக போறங்கன்னு தெரியாது...அதுனால தான் எல்லாருக்கும் எல்லாமே சொல்லித் தர்ராங்கன்னு///
வாஸ்தவமான பேச்சு தானே?
நம்மல்ல பாதி பேருக்கு கணக்குன்னா கஷாயம் குடிக்குற மாதிரி தான். ஆனா நம்ம பள்ளிக்கொடத்துல காலைல 8 மணிக்கு வாய்ப்பாடு படிச்துனால தானா இன்னிக்கும் 8 x 9 எவ்ளோ-நு கேட்டா 72-நு யோசிக்காம சொல்ல முடியுது......[ தலைமை ஆசிரியர் கிட்ட என் பக்கத்துல உக்காந்து இருந்த பையன் பிரம்படி வாங்கினது இன்னும் வாய்ப்பாடு போலவே பசுமையா ஞாபகம் இருக்கு ...] :(
எனக்குள்ளும் ஒரு அறை குறை கவிதை வித்து இருக்குன்னு 12-ம வகுப்பில தான் எனக்கே தெரியும்.......தமிழ் பரிச்சைக்கு கதை அல்லது கவிதை எழுதனும்.....வகுப்பில் முதல் ஆளா பேப்பர் குடுத்துட்டு வெளிய வரணும்னா கவிதை தான் சுலபம்,....அப்போ கிறுக்க ஆரம்பிச்சது தான் என்னோட கவிதை ....உங்களுக்கு என் கவிதைகள் பிடிக்குதோ இல்லியோ, அதுக்கு நான் இந்திய அரசியல் திட்டத்தை பாராட்டிக்கிட்டு தான் இருக்கிறேன் ....
எல்லாமே சொல்லித் தர்ற நம்ம இந்திய பாடத் திட்டத்துல ஏன் அரசியல் ஒரு பாடமா இல்ல....அரசியல் நுணுக்கங்கள் ஏன் சொல்லி தர படுறது இல்லை....
ஏனென்றால், இந்தியால அரசியல் பண்றதுக்கு உனக்கு எந்த ஒரு தகுதியும் தேவை இல்லை.......
-கல்லூரி போயி பட்டம் வாங்கின அரசியல்வாதிகள் எத்தனை பேர்?
-ஒரு தாரம் ; ஒரே ஒரு வீடு- எத்தனை அரசியல்வாதிகள் ?
-எத்தனை பேருக்கு தேசிய மொழியான ஹிந்தி தெரியும்?இவங்க எல்லாம் பார்லிமென்ட் போயி என்னத்த பேசி கிழிக்குறாங்க? நாமளும் இவங்களை நம்ம பிரதிநிதியா வரிப்பணம் கட்டி முதல் வகுப்பு கோச்-ல அனுப்பி வைக்குறோம்.
தேசிய மொழியை நம்ம மாநிலதுக்குள்ள அனுமதிக்க மாட்டோம்னு சொன்னதே பெரிய முட்டாள் தனம்....தமிழ் நாடு விட்டு வெளிய வந்த தமிழன் மட்டும்தாங்க தேமேன்னு முழிச்சுட்டு நிக்குறான். உலக மொழி ஆங்கிலம் ...அது மட்டும் அனுமதிப்பாங்களா?
இதை எல்லாம் குறை சொல்லி எழுதுற எத்தனை பேர் அந்த தப்பை சரி செய்ய முன் வருகிறோம்......நம்ம பிள்ளைங்க அரசியல் படிக்கலைன்னா இருக்குற கேன கிறுக்கு அரசியல் வாதிகளின் வாரிசுகள் தான் நாளைக்கு நம்ம தலையை ஆட்டுவிக்கும்.
இது மன்னர் ஆட்சி அல்ல.....மக்கள் ஆட்சி....நம் வாரிசுகள் சுயம் நலம் இல்லாமல்,2020-ல் இந்தியாவை உயர்த்த முன் வந்தால் தயவு செய்து தட்டி குடுங்க.....
அரசியல்வாதிகளுக்கு என்ன தகுதி இருக்கணும்?
-ஒரு வருட காலம் இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்
-தாய் மொழி, தேசிய மொழி, உலக மொழி மூன்றிலும் எழுத படிக்க தெரிந்துருக்க வேண்டும்
-சொத்து விவரங்கள் ஆட்சிக்கு முன்பும் பின்பும் அதிக வித்தியாசம் இல்லாமல் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரிய வந்தால், தூக்கு தண்டனைக்கு சம்மதிக்குறேன்னு கையொப்பம் இட தயாராக இருக்க வேண்டும்
இதை எல்லாம் நான் 20 சினிமாவில பண்ணிருக்கேன்னு சொன்னா என்னங்க பண்றது இவங்களை யெல்லாம்
அய்யா சாமி திருந்துங்கையா....நீங்களும் நல்ல இருப்பேங்க...எங்க பிள்ளை குட்டிகளும் நல்ல இருக்கும்...
அய்யா சாமி.....நல்ல அரசியல்வாதிகள் இருந்தா பிச்சை போடுங்கையா
பொன்னாத்தா கேட்குறேன்...தயவு செஞ்சு போடுங்கையா