
ஜீவன் அவளருகில் போய் மெதுவாய் அவள் தலையைக் கோதவும், திடுக்கிட்டு திரும்பிய அவள், அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு மீண்டும் கனிப்பொறியை பார்த்து திரும்பினாள்.
ஜீவனுக்கு சற்றே வித்தியாசமான அனுபவம் இது. இவன் மாலையில் வீடு வந்து சேரும் முன் எப்படியும் பத்து முறையாவது இவனது செல் பெசி பிறையின் புகைப்படத்துடன் அதிர்ந்து விடும். வேலை அதிகம் இல்லாவிடில் இவனும் தவறாமல் அவளுடன் பேசி விடுவான்.
கடந்த சில நாட்களாக அதிகம் போன் செய்வது இல்லை.வீட்டுக்கும் வந்தாலும் பிறை அதிகம் பேசாமல் எதையோ யோசித்தபடியே இருந்தது ஜீவனுக்கு வேறுபட்டுத் தெரிய வில்லை.
ஜீவன் வந்ததும் விழுந்து விழுந்து கவனிக்கும் இவள் இன்று முகம் கூட குடுத்துப் பேசாதது ஜீவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் குடுத்தது.
அவள் கையைப் பிடித்து இழுத்து வரவெற்பறைக்கு கூட்டி வந்தான்.
பொதுவான குசலம் விசாரிப்பு நடந்தது.
ஜீவன் வரும் வாரம் அலுவலுக்காக வெளியூர் செல்ல வேண்டிய தகவலையும் சொன்னான்.
அதன் பின் நடந்த உரையாடல்....
ஜீவன்: அப்புறம், உங்கம்மா கிட்ட பேசினியா ?
பிறை: இல்லீங்க..எனக்கு நேரம் கிடைக்கல...[ நேரம் கிடைக்கலயா...அம்மா கூட 2 மணி நேரம் பேசுவதைத் தவிர இவளுக்கு வேறு வேலை கிடயாதே..மத்த வேலை எல்லாம் வேலைக்காரி தானே செய்வா]

ஜீவன் : ஏன்? சரோஜா வரலியா?
பிறை: வந்தாளே...சாயந்தரம் இருந்து பாத்திரம் கழுவிட்டு போறென்னு சொன்னா....நான் தான் மதியமே போக சொல்லிட்டேன்.[தனியா வீட்ல இருந்தா பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்குன்னு சொன்னதுனால தான் அதிகமா சம்பளம் குடுத்து சரோஜாவை சாயந்திரம் வரை இருக்க வைத்தான்]
இவன் யோசிச்சுட்டு இருக்கும் போதே பிறை தொடர்ந்தாள்
பிறை: ஏங்க என்னை இப்போ 4 பேரு ஃபாலோவ் பன்றாங்கங்க...
ஜீவன்: என்னது....4 பேரு ஃபலோவ் பன்றாங்களா?.என்ன தங்கம் சொல்ற? எங்க போன? தனியா போனியா?யாரு அவங்க?சுத்தி யாரும் இல்லியா? என்ன ஆச்சு..எனக்கு ஏன் போன் பன்னலை ?
பிறை:நான் எங்க போறது? நீங்க இல்லாம நான் எங்க போயிருக்கேன்...எங்கயும் போகலீங்க
ஜீவன்:அப்புறம் உன்னை யாரு எங்க ஃபாலோவ் பன்னாங்க?
பிறை: அட இருங்க....சொல்லி முடிச்சுக்கறேன்....இது வரைக்கும் யாருமே கன்டுக்கவே இல்லியா....எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.....இப்போ தான் ஃஃபாலோவ் பன்றாங்க.....எனக்கு என்னமோ பெரிசா சாதிச்ச மாதிரி இருக்குங்க
ஜீவன் முடிவே செஞ்சுட்டான்....தனியா இருக்குற பிறைக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு..
தொடர்ந்தாள் பிறை...
பிறை : அந்த 4 பேரும் தினம் வந்துடுறாங்கங்க....நான் ஏதொ சொல்ல அவங்க ஏதொ சொல்ல என்னைச் சுத்தி சுத்தி கும்மி அடிக்குறாங்க...
ஜீவனுக்கு நிஜமாகவே தலை சுத்தியது....
இவள் சொல்வதையெல்லாம் ஜீவன் ஆர்வமாய் கேப்பதாய் எண்ணிக் கொண்டு பிறை தொடர்ந்தாள்
பிறை: முகம் தெரியாத ஆளுங்க நம்மளை பாராட்டும் போது சந்தோஷமா இருக்குங்க...அவங்க சொல்ற கமென்ட் எல்லாம் நிறைய ஊக்கம் குடுக்குது...

ஜீவன்: என்னது கமென்ட்டா ?
பிறை: ஆமாங்க...சிலர் நல்லாருக்குன்னு சொல்லுவாங்க...சிலர்..அது கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும்னு சுட்டிக் காட்டுவாங்க....அதுனால நானும் இப்போ மத்தவங்க எல்லாம் என்ன பன்றாங்க...நான் எப்டி இன்னும் நல்லா பண்ணலாம்னு இன்டெர்னெட்ல நிறைய படிக்குறேங்க...
முடியலம்மா?....நினைத்துக் கொண்ட ஜீவன்..
ஜீவன்: பிறை... நீ சொல்றது எதுவுமே எனக்கு விளங்கலை...கொஞ்சம் தெளிவா சொல்லு கண்ணு....
பிறை....ஏங்க...இது கூடவா புரியல...நான் கொஞ்ச நாளா பதிவு எழுதுறென்ல.... "என் ஜீவன்" அப்படீன்னு....அது தாங்க.. நான் எழுதுறது நல்லா இருக்குன்னு 4 பேரு ஃபாலோவ் பன்றாங்க....கமென்ட் மாத்தி கமென்ட் போடுறாங்க பதிவுக்கு....நிறைய கமென்ட் போடுறதுக்கு பேரு தான் கும்மி அடிக்குறது....
ஜீவன்: அடியே..என் செல்லக் கிறுக்கச்சி ,,,இதை தெளிவா சொல்ல மாட்டியா, வர வர என் கூட பேசாம எப்போ பார்த்தாலும் கம்ப்யுட்டரைக் கட்டிக்குட்டு அழுதுட்டு இருக்கியே...பைத்தியம் பிடிச்சு போச்சு,,,,கீழ்ப்பாக்கத்துல வீடு பார்க்கனுமோன்னு நினைச்சேன்...
பிறை:..ம்க்க்ம்...நான் புதுசா எதுவும் பண்ணிட்டா பொறுக்காதே ..
சில வாரங்கள் கழித்து....
பிறை அவளுடைய பதிவுக்கு வந்த கமென்ட் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். தன்னையே சுற்றி வந்த ஆசை மனைவிக்கு வெறொரு விஷயத்திலும் ஆர்வம் வந்ததைப் பொறுக்க முடிய வில்லை ஜீவனால்..
ஜீவன்: பிறை,....உனக்கு ஒரு செய்தி தெரியுமா?....லன்டன்ல ஒருத்தன் அவனோட மனைவி பொழுதன்னிக்கும் "Face Book" பார்த்தாங்குறதுக்காக அவளை விவாகரத்து பன்னிட்டானாம்....
பிறை:...அதுக்கு என்னவாம் இப்போ? விவாகரத்து பன்னனும்னு நினச்சுட்டா அதுக்கு காரணம் தேவையா?.....
ஜீவன்: ஆமா....இப்போ உன்னை எடுத்துக்கோ...முன்ன எல்லாம் நான் வர முன்னாடி வாசல்ல வந்து காத்து இருப்ப....இப்போ நான் வந்த பிறகும் கூட கண்டுக்காம கம்ப்யுட்டர்ல தான் கண்ணா இருக்க..
பிறைக்கு புரிந்தது....கணவனுக்கு சவலை பாஞ்சுடுச்சுன்னு.....
[ சவலை: இரன்டாவது குழந்தைக்கு அதிக கவனம் செலுத்தினால் முதல் குழந்தை ஏங்கி மெலிந்து விடும்...]
பொன்னாத்தா கதை எழுதிட்டா....பொன்னாத்தா கதை எழுதிட்டா
சவலை பாய்ந்த பிள்ளையை தாலாட்டியபடி
பொன்னாத்தா