Tuesday, October 21, 2008

ஆதாமா? ஏவாளா?

ஆதாம் ஏவாள் தான் முதல் மனித பிறவிகள் என்று ஒரு மதம் சொல்லுது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் வேற எந்த மதத்திலயும் முதல் மனித குறிப்பு எதுவும் இல்லை என்பதால் என்னோட பதிவுக்காக இவங்க ரெண்டு பேரையும் கடன் வாங்கிருக்கேன்.

சரி. பதிவோட விஷயத்துக்கு வருவோம். யாரு ரொம்ப தைரியசாலி ; யாரு ரொம்ப creative? பொண்ணுங்க தான்னு நான் அடிச்சு சொல்லுவேன்.
நான் என்ன நினைக்குறேன்னா ...ஏவாள் -ல இருந்து ஆரம்பிச்சு பொண்ணுங்க தான் இப்பவும் புது மனமும், தைரிய குணமும் நிறைந்தவர்கள். ஏவாள் is an explorer. அட உடனே டோரா த எக்ஸ்ப்லோறேர்-நு டயலாக் விட கூடாது .
அந்த தொடகூடாத ஆப்பிள் தொட்டா என்ன ஆகும். அப்டி அதுல என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்குற ஒரு ஆர்வம் ஏவாள் கிட்ட இருந்துருக்கு...


படத்தில் இருக்கும் வசனம் : "Well your mother ate the apple from the forbidden tree, so now we have to pay taxes"

அப்போவும் ஆதாம் எனக்கென்ன -னு தலைய சொறிஞ்சுகிட்டு உக்காந்திருக்க கூடும்னு கொஞ்சம் நம்மள சுத்தி கண்ணோட்டம் விட்டோம்ன ஆதார பூர்வமான அடையாளங்கள் நிறைய கிடைக்குது. யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய.?.......ஹ்ம்ம்ம்ம்


படத்தில் இருக்கும் வசனம் : "You created Adam first?.....Now I'll never get him straightened out !"

ஒரு பெரிய ஆப்பிள் மரம் குடுத்து அதுல இருந்து ஒரே ஒரு ஆப்பிள் மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கணும்? ஏதோ எங்கயோ இடிக்கல? கடவுள் நினச்சு இருந்தா அந்த ஆப்பிள்-எ ஏவாள் கண்ணுல இருந்து மறச்சு வச்சுருக்கலமே ? ஏன் செய்யல?
படத்தில் இருக்கும் வசனம் : "Uh Oh....Maybe we shouldnt have put the poison IVY so close to the fig leaves"
கடவுள் தானே நம்மை ஆட்டுவிக்கும் கருவி. நீ கடவுளின் ஒரு அங்கம் அல்லது கடவுள் உன்னுள் தான் இருக்கிறார். அல்லது நீயே தான் கடவுள்.

அப்போ இது கடவுளின் தப்பா? இல்லை ஏவாளின் தப்பா? இது இயக்குவதர்க்காகவே எழுதப்பட்ட கதை. கடவுள் தான் இயக்குனர். ஏவாள் தான் அழகான கதா நாயகி. அவள் தூண்டி விட பட்டிருக்கிறாள் . [ "விதி" பட வசனம் மாதிரி இருக்கோ?]

சின்ன வயசுல இந்த கதை சொன்னவங்க இன்னொரு விஷயமும் சொன்னாக. தொட கூடாத பழத்தை சாப்பிட்டதால் தான் இன்றும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் அப்டின்னு...என்ன மாதிரி இன்னல்கள் தெரியுமா? பிரசவ வேதனை!!; பத்து மாதம் குழந்தையை சுமப்பது !!!!! ஹ்ம்ம்....சொன்னது யாருன்னு எனக்கு ந்யபகம் இல்ல..ஆனால் ஒரு பிள்ளையை சுமந்து பெற்றெடுத்த அனுபவத்தில் சொல்றேன் இது பாவத்தின் பரிகாரம் என்றால் அந்த பாவத்தை பல முறை செய்ய நான் தயார்.

இது எழுதி கொண்டு இருக்கும் பொது விபரீதமான ஒரு எண்ணம். ஒரு வேலை அவள் அந்த பழத்தை சாப்பிடாமல் விட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும். ஆஹா......அறை குறை ஆடையுடன் .............அதை எழுதவும் வேண்டுமா?

உடனே எங்க இருந்தோ ஒரு விதி விளக்கு பொன்னை காமிச்சு அந்த பொண்ணு காலைல பத்து மணிக்கு தான் கண் முழிப்பா. சாப்பிட்ட தட்டு கூட கழுவ மாட்டாள் -னு ஆரம்பிச்சுட கூடாது . உங்கள் இல்லத்தரசிகள் சுலபமாக கையாளும் எத்தனை விஷயங்கள் உங்களுக்கு இன்னும் புரியாத புதிர்? குழந்தைகளை அவர்கள் கையாளும் விதம் எத்தனை பேருக்கு அத்துப்படி? கிண்ணம் நிறைய சோறை என்றாவது முழுவதுமாக ஊட்ட முடிந்திருக்கிறதா?அதுவும் முகம் சுளிக்காமல்.?

சரி என்ன தான் பொன்னாத்தா சொல்ல வர்றன்னு கேக்குறேங்களா? கடவுளுக்கு அன்னிக்கே தெரிஞ்சுருக்கு. பெண்கள் திடமான மனதும் வலுவான உடலும்,தாய்மை எண்ணமும் கொண்டவர்கள்ன்னு .என்ன நான் சொல்றது சரி தானே?

இதுக்கு மேல அந்த புண்ணியவதிக்கு என்ன பரிசு வங்கி குடுக்கலாம்னு யோசிக்குது உங்க கவலை. ஹி ஹி .....

சிரிப்போம் சிந்திப்போம்
பொன்னாத்தா =)

6 comments:

Anonymous said...

நல்ல பதிவு சண்டைகோழி!

ஒரு அருமையான விவாதத்திற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை, ஆணா பெண்ணா என்பது எல்லாம் சும்மா. ஆணும் பெண்ணும் சமம் என்று நினைப்பவன் நான். இருந்த போதும் ஒரு சில சமயங்களில் குடும்பங்களில் ஒரு சில விஷயங்களில் ஆணாதிக்கம் இருந்ததை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே... வாழ்வதும் பெண்ணாலே, தாழ்வதும் பெண்ணாலே என்று யாரோ கூறியிருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்களோ?

தங்களை போலவே எல்லா பெண்களும் அந்த பாவத்தை (என்னை பொறுத்த வரை அது கண்டிப்பாக பாவம் கிடையாது. தாய்மை என்பது ஒரு அற்புதமான விஷயம். அதை உணர்ந்தவர்கள் மட்டுமே அதன் அருமை பெருமைகளை அறிவர்.) திரும்ப திரும்ப செய்ய நினைப்பதால் தான் நம் நாட்டில் மக்கள் தொகை எங்கோ போய் கொண்டு இருக்கிறதோ?

இன்னும் விவாதத்தை தொடருவேன்...

- Who Am I.

Arasi Raj said...

//"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே... வாழ்வதும் பெண்ணாலே, தாழ்வதும் பெண்ணாலே என்று யாரோ கூறியிருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்களோ?"//

ithukku porul..."nallavai aavathum pennale; kettavai aZhivathum pennale" -nnu than naan padichurukken. Antha "thaalvathum, vazhvathum " patri enakku theriyala 'who am I'.

Pathivukku muthal aala varugai thanthathukku nandriiiiiii

Anonymous said...

கடவுளின் ஒவ்வொரு படைப்புக்கும் கண்டிப்பாக ஒரு அர்த்தம் இருக்கும் என்று திடமாக நம்புபவன் நான். அதன் படி உதாரணமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி தனி குணாதிசயங்களை படைத்திருக்கிறான் என்பதை கொள்ளலாம்.

வெறும் குணாதிசயங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆணா, பெண்ணா என்பதற்கு விடை காண இயலுவது கண்டிப்பாக தவறான வழி. ஆண்களுக்கு வலுவான தோள்கள், பெண்களுக்கு நளினமான இடை. என் தாத்தா எனது சிறு வயதில் என்னை தோள்களில் சுமந்து செல்வார். இதை எப்படி நான் என் பாட்டியிடம் எதிர் பார்க்க முடியும். ஒரு சில ஆண்கள் குழந்தைகளை இடுப்பில் (பெண்களைப் போல்) சுமந்து செல்வர். ஆனால் அவர்களுக்கு சமூகம் வைத்த பெயரோ ???. இது மாதிரி தான் நீங்கள் சொன்ன சோறு ஊட்டும் விஷயமும் என்பது எனது கருத்து.

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி தனி குணாதிசயங்கள் இருக்கும் வரை தான் அவர்கள் ஆண், பெண். இரண்டும் கலந்தால் அவர்கள் திருநங்கை.

வெறுமனே சும்மா குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளாமல் அவர்களுக்கு தாய்மை உணர்வை படைத்தானே கடவுள். அந்த தாய்மை உணர்வு இல்லா விட்டால்??? (சமீபத்தில் ஒரு பெண் மைக்ரோ வேவ் அவன்-இல் ஒரு பச்சை குழந்தையை வைத்தாளே? அது தாய்மை உணர்வு இல்லாததால் தானே?)...

மறுபடியும் சொல்கிறேன் - எனது பார்வையில் ஆணும் பெண்ணும் சமம்.

Who Am I.

Arasi Raj said...

aahaa. naan yaar usaththi yaru thazhthi-nu pesaliye......yarukku thariyam porumai, creativity jasthi-nu thane sonnen....

college-la ennai oru thadavai ragging sonnappo, intha topic vachu than ragging pannanga.....ungaloda pathil than ennoda pathilavum irunthuchu......aanukku valimai epdi iru kunamo, athe pola than pennukku menmai-nnu...

kandippa intha kalaththula illa..antha kaalathula irunthu aanum pennum samam.. Eppovume aangal peyar than kudumba peyara irukkumnu nama ninachomnu athu thappu. Aaditya's nu peyar vanthathu avargaloda thai "aditi" vachu than.
neenga solrathu than nanum solren...aangalum pengalum samam than. aanal aangal ippovum elitha katru kolla mudiyum pala vishayangalaiyum saakku pokku solli thatti kazhikkuranga......


"thaayumana" thnthaiyargal niraya peru irukka than seyranga....aanal ennikkai miga kuraivu.

Anonymous said...

ரெண்டு பேரும் ஒண்ணே தாங்க சொல்லறோம்.

நீங்கள் சொல்லியபடியே தாயுமான தந்தைகள் பலர் உள்ளனர். ஆனால் எண்ணிக்கை தான் மிக மிக குறைவு.

தீபாவளி பண்டிகை பிஸி-யில் பிளாக் பக்கம் வர முடியாது போய் விட்டது. தீபாவளி பண்டிகை எல்லாம் நன்றாக கொண்டாடினீர்கள் தானே? உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் எங்களது சற்று தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள்.

-Who Am I.

Anonymous said...

Amiable fill someone in on and this fill someone in on helped me alot in my college assignement. Thanks you as your information.