-*-
எங்கிருந்து வந்தாயடி..
என்னுயிரில் கலந்தாயடி...
-*-
இமைத் துடிப்பின் நடுவினிலே -
உன் உயிர்த்துடிப்பை உணர்கின்றேன்.
-*-
உயிர்த் துடிப்பாய் இருந்திட்டாய்-நீ
குருதியையும் பங்கிட்டாய்.
-*-
குருதியையும் பங்கிட்டேன்-என்
வாழ்வின் பொருள் உணர்ந்திட்டேன்.
-*-
வாழ்வின் பொருள் உணர்த்திட்டாய் - நீ
வாழ வைத்த தெய்வமன்றோ.
-*-
என் கருவறையில் -உன்னை
கரு என்பதா
கடவுள் என்பதா
சிசு என்பதா -அழகுச்
சிலை என்பதா?
-*-
பொன்னகை தான்
மின்னிடுமோ உன்
புன்னைகை முன்னாலே.
-*-
தென்றலும் தான்
தவித்திடுமோ -உன்
தேகம் தனை தீண்டிடவே .
-*-
பகலவனும் துணிவானோ-உன்
பட்டு மேனி சுடுவதற்கு?
-*-
வெண்ணிலவும்
தேய்ந்ததுவே உன்
பால் கண்கள் கண்டதினால்.
-*-
உயிரே
உறவே
கருவே
திருவே
சிசுவே
சிலையே
எங்கிருந்து வந்தாயடி
என்னுயிரில் கலந்தாயடி
-*-
நிலாவுக்காக ரொம்ப நாள் முயற்சி செஞ்சு கவிதை எதுவுமே உருப்ப்பா வரல...இது கொஞ்சம் பரவ்யில்லாமல் வந்துச்சுன்னு சில மாதங்களுக்கு முன்னாள் பதிவிட்டுருந்தேன்... இப்போ மறுபடியும் எல்லோர் பார்வைக்காகவும்.
கடவுளை உச்சி முகர்ந்தபடி ,,
பொன்னாத்தா
28 comments:
நிஜமாவே அருமையா இருக்கு.
\\இமைத் துடிப்பின் நடுவினிலே -
உன் உயிர்த்துடிப்பை உணர்கின்றேன். \\
சிறந்த-தாய்
சிறந்ததாய் ...
ரொம்ப நல்லா இருக்குங்க...
உயிரே
உறவே
கருவே
திருவே
சிசுவே
சிலையே
எங்கிருந்து வந்தாயடி
என்னுயிரில் கலந்தாயடி....
konnuttinga
ரொம்ப யோசிச்சு இருக்கிங்கள போல இந்த பதிவை எழுத .....
நல்ல இருக்கு
-*-
என் கருவறையில் -உன்னை
கரு என்பதா
கடவுள் என்பதா
சிசு என்பதா -அழகுச்
சிலை என்பதா?
arumai miga arumai
ஆஹா... பின்னூட்ட முறைய மாத்திப்போட்டீங்களா!!!
உங்கள் குழந்தை கொடுத்து வைத்தவர்....
உங்கள் அன்பு வழிந்து வழிந்து மீண்டும் நிரம்பும் ஒரு நீர்த்தொட்டியைப் போல..!!!! இக்கவிதையில் வழிகிறது!!!
வரிகளை விமர்சித்து இம்சிக்கவில்லை!!! ஏனெனில் அன்பை விமர்சிக்க அன்பொன்றே போதும்!!
அன்புடன்
ஆதவா
(உங்க பின்னூட்ட முறை மிகவும் சிரமமாக இருக்கிறது!)
nice post
உங்க பின்னூட்ட முறை மிகவும் சிரமமாக இருக்கிறது!)
கவிதை சூப்பரா இருக்கு நிலா அம்மா.
//உயிரே
உறவே
கருவே
திருவே
சிசுவே
சிலையே
எங்கிருந்து வந்தாயடி
என்னுயிரில் கலந்தாயடி//
WOW கலக்கீட்டீங்க! வாழ்த்துக்கள்...
Pahalavanum thunivano un pattu meni suduvatharku-varihal unmai Nlia amma,Nilavukku vazhthukkal.
நல்லா இருக்குங்க...
தாய்மை எமக்கு புரியாது! ஆனால் அதுதான் இந்த கவிதை இவ்வளவு மென்மையாயும் இனிமையாயும் இருக்க காரணம் எ ன்று மட்டும் புரிகிறது.. :)
வாழ்த்துக்கள்... :)
அழகான கவிதை....
//எங்கிருந்து வந்தாயடி..
என்னுயிரில் கலந்தாயடி... //
கவிதையின் மொத்த அர்த்தத்தையும் அள்ளிச் சென்ற வரிகள் இவை.
நல்லா இருக்குங்க...
நன்றி ஜமால்
நன்றி வேத்தியன்
நன்றி இவிங்கோபி
நன்றி மேவீ
நன்றி சக்தி
நன்றி ஆதவா
நன்றி ஆனந்த்
நன்றி யாழினி
நன்றி முனி சார்
நன்றி அன்பு
நன்றி புல்லட்டு
நன்றி சசி
நன்றி நஸ்
அன்புத் தாயின் தாலாட்டுக் கவிதையாய்.நிலா அம்மா கலக்கிட்டீங்க.
ஓய்வு முடிஞ்சு வந்திருக்கேன்.அதான் லேட் பின்னூட்டம்.
சூப்பர் அருமையா இருக்கு என்னங்க என்னோட பதிவுக்கு வர மாட்டிங்கிறிங்க
சிரிப்பும் இருக்கு .. சிந்தனையும் இருக்கு.. நேரம் இருக்கும் போது வாங்க
தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.html
அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...
http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html
வாங்க ஹேமா, நலமா
வாங்க சுரேஷ் ..கண்டிப்பா வரேன்
கவிதை சூப்பரா இருக்கு நிலா அம்மா.
//உயிரே
உறவே
கருவே
திருவே
சிசுவே
சிலையே
எங்கிருந்து வந்தாயடி
என்னுயிரில் கலந்தாயடி//
வாழ்த்துக்கள்!!
தேவா.
நிலா சுகமா?
தாய்மாமன் கேட்டதா சொல்லுங்க!
//என் கருவறையில் -உன்னை
கரு என்பதா
கடவுள் என்பதா
சிசு என்பதா -அழகுச்
சிலை என்பதா?//
தாய்மையின் உணர்வுகள் வரிகளில்...அருமை...
///
என் கருவறையில் -உன்னை
கரு என்பதா
கடவுள் என்பதா
சிசு என்பதா -அழகுச்
சிலை என்பதா?
////
வர்ணிக்க இயாலாதுங்க
வாங்க புதியவன்...நன்றி
வாங்க பிரபு தம்பி....
//என் கருவறையில் -உன்னை கரு என்பதா கடவுள் என்பதா சிசு என்பதா -அழகுச் சிலை என்பதா?//
ரொம்ப ரசிச்சேன்!
//கடவுளை உச்சி முகர்ந்தபடி ,,
பொன்னாத்தா//
இதையும்..ரொம்ப ரொம்ப ரசிச்சேன்!
என் கருவறையில் -உன்னை
கரு என்பதா
கடவுள் என்பதா
சிசு என்பதா -அழகுச்
சிலை என்பதா?
இதைவிட அழகாகச் சொல்லிவிட முடியுமா?
இவிங்கோபி illai
இவிNகோபி naan....
Post a Comment