Saturday, October 25, 2008

இன்று பௌர்ணமி!!

இன்று அக்டோபர் 25

என் பிறை நிலவு
முழு மதி ஆனது
ஆம்!
அவளுக்கு வயது
12 மாதங்கள்!!

41 வாரங்களாய்
என் கருவறையை
ஆக்கிரமித்த மகரந்தம்

52 வாரங்களாய்
என் வாழ்வை
புரட்டி போட்ட பூங்கொத்து


சிணுங்கும் மததாப்பு;

சிரிக்கும் வளையோசை ;

கொஞ்சிக் குலாவிடும்

வெள்ளை நீரோடை .

நொடிக்கொரு

அவதாரம் காட்டும் பட்டாம்பூச்சி .

இமைத் துடிப்பின் நடுவினிலே
ஆச்சர்யமூட்டும் மின்னல் கீற்று.

அந்த பளிங்கு பௌர்ணமி
பல்லாண்டு பல ஆண்டு
பல கோடி நூறாண்டு
பேரோடும் புகழோடும்

புன்னகை மறையாமல்

புவியாழ வேண்டுமென்று
வாழ்த்திடலாம் வருவீரே!!!

Tuesday, October 21, 2008

ஆதாமா? ஏவாளா?

ஆதாம் ஏவாள் தான் முதல் மனித பிறவிகள் என்று ஒரு மதம் சொல்லுது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் வேற எந்த மதத்திலயும் முதல் மனித குறிப்பு எதுவும் இல்லை என்பதால் என்னோட பதிவுக்காக இவங்க ரெண்டு பேரையும் கடன் வாங்கிருக்கேன்.

சரி. பதிவோட விஷயத்துக்கு வருவோம். யாரு ரொம்ப தைரியசாலி ; யாரு ரொம்ப creative? பொண்ணுங்க தான்னு நான் அடிச்சு சொல்லுவேன்.
நான் என்ன நினைக்குறேன்னா ...ஏவாள் -ல இருந்து ஆரம்பிச்சு பொண்ணுங்க தான் இப்பவும் புது மனமும், தைரிய குணமும் நிறைந்தவர்கள். ஏவாள் is an explorer. அட உடனே டோரா த எக்ஸ்ப்லோறேர்-நு டயலாக் விட கூடாது .
அந்த தொடகூடாத ஆப்பிள் தொட்டா என்ன ஆகும். அப்டி அதுல என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்குற ஒரு ஆர்வம் ஏவாள் கிட்ட இருந்துருக்கு...


படத்தில் இருக்கும் வசனம் : "Well your mother ate the apple from the forbidden tree, so now we have to pay taxes"

அப்போவும் ஆதாம் எனக்கென்ன -னு தலைய சொறிஞ்சுகிட்டு உக்காந்திருக்க கூடும்னு கொஞ்சம் நம்மள சுத்தி கண்ணோட்டம் விட்டோம்ன ஆதார பூர்வமான அடையாளங்கள் நிறைய கிடைக்குது. யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய.?.......ஹ்ம்ம்ம்ம்


படத்தில் இருக்கும் வசனம் : "You created Adam first?.....Now I'll never get him straightened out !"

ஒரு பெரிய ஆப்பிள் மரம் குடுத்து அதுல இருந்து ஒரே ஒரு ஆப்பிள் மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கணும்? ஏதோ எங்கயோ இடிக்கல? கடவுள் நினச்சு இருந்தா அந்த ஆப்பிள்-எ ஏவாள் கண்ணுல இருந்து மறச்சு வச்சுருக்கலமே ? ஏன் செய்யல?
படத்தில் இருக்கும் வசனம் : "Uh Oh....Maybe we shouldnt have put the poison IVY so close to the fig leaves"
கடவுள் தானே நம்மை ஆட்டுவிக்கும் கருவி. நீ கடவுளின் ஒரு அங்கம் அல்லது கடவுள் உன்னுள் தான் இருக்கிறார். அல்லது நீயே தான் கடவுள்.

அப்போ இது கடவுளின் தப்பா? இல்லை ஏவாளின் தப்பா? இது இயக்குவதர்க்காகவே எழுதப்பட்ட கதை. கடவுள் தான் இயக்குனர். ஏவாள் தான் அழகான கதா நாயகி. அவள் தூண்டி விட பட்டிருக்கிறாள் . [ "விதி" பட வசனம் மாதிரி இருக்கோ?]

சின்ன வயசுல இந்த கதை சொன்னவங்க இன்னொரு விஷயமும் சொன்னாக. தொட கூடாத பழத்தை சாப்பிட்டதால் தான் இன்றும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் அப்டின்னு...என்ன மாதிரி இன்னல்கள் தெரியுமா? பிரசவ வேதனை!!; பத்து மாதம் குழந்தையை சுமப்பது !!!!! ஹ்ம்ம்....சொன்னது யாருன்னு எனக்கு ந்யபகம் இல்ல..ஆனால் ஒரு பிள்ளையை சுமந்து பெற்றெடுத்த அனுபவத்தில் சொல்றேன் இது பாவத்தின் பரிகாரம் என்றால் அந்த பாவத்தை பல முறை செய்ய நான் தயார்.

இது எழுதி கொண்டு இருக்கும் பொது விபரீதமான ஒரு எண்ணம். ஒரு வேலை அவள் அந்த பழத்தை சாப்பிடாமல் விட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும். ஆஹா......அறை குறை ஆடையுடன் .............அதை எழுதவும் வேண்டுமா?

உடனே எங்க இருந்தோ ஒரு விதி விளக்கு பொன்னை காமிச்சு அந்த பொண்ணு காலைல பத்து மணிக்கு தான் கண் முழிப்பா. சாப்பிட்ட தட்டு கூட கழுவ மாட்டாள் -னு ஆரம்பிச்சுட கூடாது . உங்கள் இல்லத்தரசிகள் சுலபமாக கையாளும் எத்தனை விஷயங்கள் உங்களுக்கு இன்னும் புரியாத புதிர்? குழந்தைகளை அவர்கள் கையாளும் விதம் எத்தனை பேருக்கு அத்துப்படி? கிண்ணம் நிறைய சோறை என்றாவது முழுவதுமாக ஊட்ட முடிந்திருக்கிறதா?அதுவும் முகம் சுளிக்காமல்.?

சரி என்ன தான் பொன்னாத்தா சொல்ல வர்றன்னு கேக்குறேங்களா? கடவுளுக்கு அன்னிக்கே தெரிஞ்சுருக்கு. பெண்கள் திடமான மனதும் வலுவான உடலும்,தாய்மை எண்ணமும் கொண்டவர்கள்ன்னு .என்ன நான் சொல்றது சரி தானே?

இதுக்கு மேல அந்த புண்ணியவதிக்கு என்ன பரிசு வங்கி குடுக்கலாம்னு யோசிக்குது உங்க கவலை. ஹி ஹி .....

சிரிப்போம் சிந்திப்போம்
பொன்னாத்தா =)