Sunday, August 24, 2008

பொருள் வழி பிரிந்து....

நீ.....
சொல்லிச் சென்ற காதல் ......
தீண்டிச் சென்ற ஸ்பரிசம்........
தந்து சென்ற முத்தம் .........
எட்டிப் பார்த்த நாணம் ...
கட்டவிழ்ந்த பெண்மை ...
பூட்டி பார்த்த பொன் நகை .....
என்னுள் பசுமையயிருக்க
பசலையால் வாடுகிறேன்.

உன் மடியில் தலை வைத்து....
ஓஅரயிரம் கதைகள் பேசி .....

என் சிணுங்கல் நீ ரசித்து
அண்மையால்
ஆனந்த கண்ணீர் சொரிந்து ...


ஆருயிரே,
உன்னுடன்
உறவு சேர காத்திருக்கின்றேன்...

வெட்கம் பார்க்க,
வெறுமை போக்க ,
வேட்கை தணிக்க
வருவாயா?

வந்தால்...
இம்முறையாவது
உன்னுயிரை,
உன்னுருவை,
உன் நினைவை
என்னுள்
கருவாக்கிச்
செல்வாயா?

இப்படிக்கு
பசலையால் வாடும்
உன் அன்பு மனைவி .

Long back there was an article about the families , where the cheif of the family [son or the husband] works for the Army or abroad [like Muscat or Dubai.] Most of the cases the husbands come home once a year or twice a year.

2 comments:

Vidhya said...

அன்பு தோழி பொன்ஸ்க்கு... உனக்கு கவிதை எழுத தெரியும் என்று இன்று தான் தெரியும்... மிகவும் ரசித்து எழுதியிருக்கிறாய்.. அழகாக உள்ளது

Arasi Raj said...

nandri di Vidhhhhya. =)