Wednesday, February 25, 2009

தொடர் பதிவு- வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

இதுக்கு பேரு தான் பழிக்கு பழி வாங்குறது...


நான் ஒரு தொடர் பதிவுல இழுத்தேங்குறதுக்காக மருத்துவர் மறுபடி என்னை ஒரு தொடருக்கு இழுத்துட்டார்.....இருந்தாலும் சந்தோசம் தான் ..ஏன்னா இது தங்க தமிழ் பற்றிய பதிவாச்சே

வழக்கொழிந்த சொற்கள் என்ன எல்லாம்..?

அப்டியே இந்த தொடரை தொடர்ந்து போயி பார்த்ததுல அப்டி இப்டின்னு நம்ம பதிவர் உலகம் மறந்து தொலைந்து...தொலைய போகுற எல்லா வார்த்தைகளையும் இழுத்து புடிச்சுடுச்சுன்னு தான் தோனுது.

தொலஞ்சு போன விஷயத்தை தேடுறதுக்கு பதிலா ஏன் தொலஞ்சு போன காரணத்தை தேட கூடாது?

ஆகா நான் இத்தனை வார்த்தைகளை தொலைச்சுட்டேன்னு சொல்றதுக்கு பதிலாக .....இனிமே இந்த வார்த்தைகளை தொலைக்க மாட்டேன்னு தான் நான் முடிவு எடுத்துருக்கேன்

ஏன் தொலையுது..எப்டி தொலையுது...நம்மளோட வினைகளுக்கும் நம்ம சுற்றி இருக்குற வினைகளுக்கும் நாம தாங்க காரணம்.

புள்ளைய பள்ளிக்கூடத்துல சேர்த்தா கேள்வி கேப்பாங்களேன்னு முதல்ல இருந்து வார நாட்களை திங்கள், செவ்வாய்னு சொல்லாம மன்டே, ட்யுஸ்டே ன்னு சொல்லித் தர்றோம் ....ஒன்னு, ரெண்டுன்னு சொல்றதுக்கு பதிலா ஒன், டூ ???

எத்தனை பேர் வழக்கு தமிழுக்கு பதிலா ஆங்கில உபயோகம் பெருமைன்னு நினைக்குறோம்

என் கிட்ட தமிழ் தெரிஞ்சவாங்க யாராது ஆங்கிலத்துல பேசின அப்டியே கேப்பேன்...ஏன் தேவை இல்லாம ஆங்கிலத்துல பேசுறீந்கன்னு...

என்னை நினைக்குறேங்க --".What do you think?....

"அப்டின்னு தான் நான் நினைக்குறேன்.... ".ya I think so... "..

பல்லு தேச்சுட்டு வரேன் - Brush pannittu varen

என் மனைவி- My wife

என் கணவர்- My husband

என் பொண்ணு- my daughter/ my kid

என் பையன் - my son/ my kid


தமிழ்ல தான் சொல்றேங்குரவங்க கை தூக்குங்க பார்க்கலாம் ..1, 2,...??...அவ்ளோ தானா?

ஒரு தடவை நடிகர் மாதவன் பேட்டி பார்க்கும் பொது அவரோட மனைவியயிம் மகனையும் குறிப்புட்டு சொல்லும் பொது அழகா என் மனைவி, என் மகன்னு அவர் சொனனது எனக்கு சந்தோஷமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்துச்சு....

எப்போவுமே நிறை குடம் தளும்பாது, குறை குடம் கூத்தாடும்குறது உண்மையா தான் போகுது....

ஏன் ஆஸ்கர் மேடையில ரஹ்மான் தமிழ்ல பேசனும்குறது கட்டாயமா....இல்லியே... மனுஷன் அழுறதுக்கும் சந்தோஷத்துக்கும் எப்டி அம்மா மடி தேடுறானோ அது மாதிரி தான் சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் தாய் மொழி..

என் அலுவலகத்த்தில கூட ரஹ்மானை சிலர் தூற்ற தான் செஞ்சாங்க....ஏன் ஹிந்தி-ல பேசிருக்கலாமேன்னு....மேல சொன்னது தான் என்னோட பதிலா இருந்துச்சு...

முதலில் நான் ஒரு தமிழன் அப்புறம் தான் இந்தியன்...

இங்க வெளி நாடுகள்ல இரு மாதிரியான குழப்பம்..

1. ஒன்னு, பிள்ளைக்கு வீட்ல தமிழ் சொல்லி குடுத்தா பள்ளிக்கூடம் போனதும் கஷ்டப்படுவாங்களே....அப்படின்னா வீட்ல ஆங்கிலம் பேசுவதா?

2. இன்னொன்று , சிறு பிள்ளைங்க எப்டியும் நெருப்பு மாதிரி புடிசுக்குவாங்க......அதுனால பள்ளிக்கூடம் போறப்போ ஆங்கிலம் கத்துகிட்டா போதும் .... இப்போ தமிழ் சொல்லி தரலைன்னா ஊர்ல இருந்து தாத்தா பாட்டி தொலை பேசில பேசினா கூட புரியாம தெரியாம முழிப்பாங்க....அப்புறம் குடும்பம்னா என்னன்னே மறந்து போயிடும்.....என்ன எல்லாம் பிரச்னை பாருங்க

மக்களே...எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? ஒவ்வொரு நாளும் படுக்க போகும் போது இன்னிக்கு எத்தனை ஆங்கில வார்த்தைகள் உபயோகிச்சோம்..அதுல எதை தவிர்த்து தமிழ் வார்த்தைகள் உபயோகம் செய்திருக்கலாம்...அப்டி செஞ்சா தமிழ் வழக்கொழிந்து போகாமல் இருக்குமான்னு ஒரு கணம் யோசிப்பீங்களா? தயவு செஞ்சு முயற்சி பண்ணுங்க...


என்னோட இரண்டு நயா பைசாக்கள் : [ My 2 cents !!]

வெள்ளணை = விடியல் காலை

வானவெளி = வீட்டின் பின்னால் இருக்கும் சிறிய பகுதி...சூரிய வெளிச்சம் படும் படியாக இருக்கும்.....கூரை இருக்காது


என்ன ? பொன்னாத்தா சொல்றது சரி தானே?

நான் வம்புக்கு இழுக்குறது ..

கண்ட நாள் முதலாய் Truth

என்றும் சேலையை வரிஞ்சு கட்டிக்கிட்டு !!

பொன்னத்தா

20 comments:

Truth said...

ஆழத்தப் பத்தி கொஞ்சம் கூட கவலைப் படாம கால் விட்டிருக்கீங்க. விளைவு கூடிய சீக்கிரம் தெரிய வரும். :-)

Nilavum Ammavum said...

நான் தயார்...ஆழம் பார்க்க ....ரொம்ப முட்டி முட்டி யோசிக்குறிங்க போல இருக்கே ..நீங்க தயாரா ?

நட்புடன் ஜமால் said...

நல்ல முறையில சொல்லியிருக்கீங்க

thevanmayam said...

இதுக்கு பேரு தான் பழிக்கு பழி வாங்குறது..///

ஆமா விடுவோமா?

thevanmayam said...

நான் ஒரு தொடர் பதிவுல இழுத்தேங்குறதுக்காக மருத்துவர் மறுபடி என்னை ஒரு தொடருக்கு இழுத்துட்டார்.///

இது ஒரு தொடர்கதைதானே

thevanmayam said...

அப்டியே இந்த தொடரை தொடர்ந்து போயி பார்த்ததுல அப்டி இப்டின்னு நம்ம பதிவர் உலகம் மறந்து தொலைந்து...தொலைய போகுற எல்லா வார்த்தைகளையும் இழுத்து புடிச்சுடுச்சுன்னு தான் தோனுது.//

பரவாயில்லையே!
சிந்திச்சீங்களா/

thevanmayam said...

தொலஞ்சு போன விஷயத்தை தேடுறதுக்கு பதிலா ஏன் தொலஞ்சு போன காரணத்தை தேட கூடாது?//

புல்லரிக்குது

thevanmayam said...

ஆகா நான் இத்தனை வார்த்தைகளை தொலைச்சுட்டேன்னு சொல்றதுக்கு பதிலாக .....இனிமே இந்த வார்த்தைகளை தொலைக்க மாட்டேன்னு தான் நான் முடிவு எடுத்துருக்கேன்///

மேடை முழக்கம்! போல இருக்கே!!

thevanmayam said...

தலைவி வாழ்க!!

thevanmayam said...

இப்படியே மெதுவா

அமெரிக்காவின் ஆட்சிமொழியில் ஒன்னா தமிழை சேர்க்க ஏற்பாடு செய்க..

வேத்தியன் said...

வித்யாசமா யோசிச்சிருக்கீங்க போல???
படிச்சுட்டு வரேங்க...

வேத்தியன் said...

தொலஞ்சு போன விஷயத்தை தேடுறதுக்கு பதிலா ஏன் தொலஞ்சு போன காரணத்தை தேட கூடாது?//

அட, கலக்கல்...

வேத்தியன் said...

இனிமே இந்த வார்த்தைகளை தொலைக்க மாட்டேன்னு தான் நான் முடிவு எடுத்துருக்கேன்//

நல்ல முடிவு தான்...
:-)

வேத்தியன் said...

வழக்கொழிந்த சொற்களை போடுறதுக்கு பதிலா வழக்கொழிவதற்கான காரணம் பத்தி அலசியிருக்கீங்க...
நல்ல முயற்சி...
வாழ்த்துகள்...

அன்புமணி said...

வித்யாசமான முயற்சி.வாழ்த்துகள்!

Nilavum Ammavum said...

அப்பாட..முதல் முதல்லா நிலாவை விட அதிகமான பின்னூட்டம் வங்கிட்ட்டேன்...ஹி ஹி..

நன்றி மக்களே..நன்றி....தமிழ் பத்தி பேசினா எப்போவுமே இப்டி தான் கொஞ்சம் மேடை ஏறிடுவேன்....

கண்டிப்பா முயற்சி செஞ்சுட்டு தான் இருக்குறேன்..இப்போவும் குழாயில தண்ணி வருதான்னு கேட்டா என் வீட்டுக்காரர் என்னை கிண்டல் செய்ய தான் செய்கிறார்...எனக்கு தப்ப தெரியல...pipe--நு சொல்லனுமாம்....

-------------
அன்பு மணி வாங்க.....பொன்னாத்தா ஏரியாக்கு தெரியாம நுழைஞ்சுட்டீங்க...பாவம்......

Devi An said...

ஆத்தா,..பொன்னாத்தா...கலக்குறீங்களே...
ரொம்ப அழகான வார்த்தைகள தேர்ந்தெடுத்து இருக்கீங்க...

பழமைபேசி said...

//வெள்ளணை = விடியல் காலை//

வெள்ளி மீன் தெரியும் காலம்..... பெரும்பாலும் அது விடியற்காலம்.


//வானவெளி = வீட்டின் பின்னால் இருக்கும் சிறிய பகுதி...சூரிய வெளிச்சம் படும் படியாக இருக்கும்.....கூரை இருக்காது//

வானவெளி vāṉa-veḷi
, n. < id. +. Open quadrangle in a house; திறந்த வெளியாயிருக்கும் வீட்டின் உள்முற்றம். Loc.

Nilavum Ammavum said...

பழமைபேசி ....
இருங்க...எங்க ஆச்சியை நாலு வசவு வந்சுட்டு வரேன் எனக்கு தப்பு தப்ப தமிழ் சொல்லி குடுத்ததுக்கு....ஹா ஹா...

செட்டிநாடு பக்கம் தானே வீட்டுக்குள்ள வான வெளி இருக்கும்....எங்க வீடுல கடைசியா இருக்குறது தான் வான வேலின்னு சொல்லுவோம்...

RAD MADHAV said...

'வழக்கொழிந்த தமிழ் பழமொழிகள்' என்ற தொடர் பதிவை தொடருமாறு நான் உங்களை இரு கரம் கூப்பி அன்போடு அழைக்கின்றேன்.****