Wednesday, June 24, 2009

வாய் சொல்லில் வீரரடி...


"அவன் நல்லாவே இருக்க மாட்டான்.." இப்படி நீங்க யாரையாவது திட்டி இருக்கீங்களா?..நான் திட்டினேன்..

ஊருக்கு போயி ரெண்டு வாரமும் எந்த ஒரு தொல்லையும் இல்லாம சந்தோஷமா தான் போச்சு. எல்லாருக்கும் ஒரு வருஷம் கழிச்சு பார்ப்போம்னு கண்ணீரும் கம்பலையுமா TATA சொல்லிட்டு பெங்களூரு விமான நிலையத்துக்கும் பிரச்சனை இல்லாம வந்து சேர்ந்தாச்சு..

பயண சீட்டு வாங்கும் போது, சரி.... யாருக்கோ போக போற காசு இந்திய அரசாங்கத்துக்கு போகட்டுமேன்னு "AirInida -ல வாங்கினோம்.
.இந்தியாவில போயி இறங்கி .மும்பை விமான நிலையத்து பார்த்ததும் ஆஹா என்னடா இது மீன் சந்தை மாதிரி இருக்கே..தப்பு பண்ணிட்டோமோன்னு இருந்துச்சு ..

திரும்பி போகும் பொது எனக்கும் கணவருக்கும் என்னமோ தப்பு நடக்க போகுதுன்னு தோணிட்டே இருந்துச்சு///

எங்களுக்கு பெங்களூருல இருந்து மும்பை போயி சேர்ர விமானத்துக்கும் நியுயார்க் கிளம்புற விமானத்துக்கும் நடுவில மிக குறைந்த நேரமே இருந்துச்சு...சரி நம்ம ஆளுங்க ஜமய்ச்சுடுவாங்க..நம்மளை நேரா கொண்டு போயி உக்கார வச்சுடுவாங்கன்னு பெரிய நம்பிக்கைல மும்பைல போயி இறங்கினோம்..

இறங்கினதும் நியுயார்க் போற பயணிகள்னு பெரிய பெயர் பலகை வச்சுகிட்டு நின்னாங்க..அட..இங்க பாருடா வரவேற்ப்பைன்னு நினச்சுகிட்டு "WE are flying to NY"-நு பீட்டர் விட்டேன்..

Oh நீங்க தான அது..உங்க விமானம் கிளம்பிடுச்சு..அதுனால நீங்க நாளைக்கு தான் போக முடியும்னு அந்த குண்டு அம்மணி தினாவட்டா சொல்லுச்சு..

எனக்கு சொல்லியா குடுக்கனும....விர்ர்னு ஏறுச்சு...இது என்ன கொஞ்ச கூட பொறுப்பு இல்லாம ரொம்ப ஈசியா சொல்ற...இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு ..எனக்கு தெரியாது..என்னை எப்டியோ கொண்டு போயி சேருன்னு சொன்னேன்.

என்னாச்சுன்னா ...சென்னை அல்லது பெங்களூர்ல இருந்து போகும் பொது உங்களை ஒன்னு Domestic இல்லன்ன International விமான தளத்துக்கு கொண்டு போவாங்க.....நாங்க பயண சீட்டு வாங்கும் போதே 78 தடவை கேட்டோம்...எங்க போகுதுன்னு....எல்லாவனும் சொல்லிக் குடுத்த மாதிரி உங்க விமானம் International தான் போகுதுன்னு சொன்னானுங்க...

இதுக்கு மேல நான் என்ன துப்பு துலக்குற ஏஜென்சி வச்ச விசாரிக்க முடியும்.நம்ம பெய புள்ளைக மேல நம்பிக்கைய போட்டு வந்து பார்த்தா துபாய்ன்னு சொல்லி கேரளாக்கு கொண்டு போன மாதிரி International சொலி Domestic-ல கொண்டு வந்து விட்டாங்க...

சரி இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு ..எப்டியாவது போயிடலாம்னு சொல்லி பஸ்ல ஏறி உக்காந்தோம்...எனக்கு இருந்த லோ பிரஷர் எல்லாம் அன்னிக்கு சரியா போச்சு..அந்த பஸ்காரன் Domestic-ல இருக்குற எல்லா பயணிகளையும் நலம் விசாரிச்சு எங்களை கொண்டு வந்து விடும் பொது எங்களுக்கு அரை மணி நேரம் தான் இருந்துச்சு......

நேரா AirIndia manager கிட்ட போனேன்/....."Hello I have an emergency"-ன்னேன்

ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கன்னார் ....அடேய் என்னங்கடா விளையாடுறீங்களா ...என் விமானம் இன்னும் அரை மாநில போக போகுது..நான் emergencyனு சொல்றேன்...5 நிமிஷங்குரன்னு கத்த ஆரம்பிச்சேன்...

அந்த ஆளும் கடுப்பாயிட்டான்....இங்க பாருங்க...இந்த குறைந்த இடைவெளில என்னால ஒன்னும் பண்ண முடியாது.....என்ன பண்ணனுமோ பண்ணிக்கொங்க...

நான் ஒரு airline ஊழியர்ந்குரதுனால எனக்கு ஒரே ஆச்சர்யம்..எப்டி ஒரு வாடிக்கையாளர் கிட்ட இப்படி பேச முடியும்? நான் சொன்னேன்...இனிமே என் வாழ்க்கைல AirIndia-la ஏறவே மாட்டேன்னு...அதுக்கு அந்தா ஆள் சொல்றான். அது உங்க இஷ்டம் மேடம் அப்டின்னு.....இப்படி கூட இருப்பாங்களான்னு நான் வாய் அடச்சு போயிட்டேன்....நான் அங்க கழுதை மாதிரி கத்துறதை ஒரு ஊரே பார்த்துச்சு..

அப்புறம் அந்த மேலாளர் வந்து எங்கள தாஜா பண்ணி ஹோட்டல் ரூம் போட்டி குடுத்து மறு நான் வர சொன்னது வேற கதை.....

இப்போ நம்ம கத்தியோட கரு இனிமே தான்...

மறு நாள் 2 மணி நேரம் முன்னாடியே வந்துட்டோம்...எங்க கிட்ட அமெரிகாக்குள்ள நுழைய தேவையான எல்லா Documents இருந்துச்சு...

வரிசைல நின்னோம்....எங்க முறை வந்தததும் ஒரு கேன கிறுக்கன் கிட்ட போயி மாட்டினோம்....இந்த Immigration officers என்னமோ கடவுள்னு நினைப்பு ....முகத்தை இறுக்கமா வச்சுகிட்டு நாம எல்லாம் என்னமோ கிரிமினல்ஸ் மாதிரி தான் நம்ம பாஸ்போர்ட் பார்ப்பாங்க

அந்த ஆள் ஒன்னு ஒண்ணா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்டான்...எங்க படிச்ச...உங்க ஊர்ல இருந்து அந்த ஊர் எவ்ளோ தூரம் இந்த ஊர் எவ்ளோ தூரம் அப்டின்னு...நானும் மனசுக்குள்ள அடேய்..நான் என்ன highway contract-எ எடுத்துருக்கேன்.....அப்டின்னு வஞ்சுகிட்டு பதிலை சொன்னேன்...

சரி அதெல்லாம் இருக்கட்டும்..போலீஸ் verification லெட்டர் இருக்கா?அப்டின்னு கேட்டான் ...நாங்க விடுமுறைக்கு தானே வந்துருக்கோம்..அதுவும் ரெண்டு வாரம் தானே வந்துருக்கோம்...எதுக்கு போலீஸ் லெட்டர் வேணும்னு நான் கேட்டேன்

அந்த கேள்வி எலாம் என் கிட்ட கேக்காதீங்க ...இருக்கா இல்லையா?..இது அவன்


நான் சொன்னேன்...அது தேவைன்னு எனக்கு தெரியாது.. யாரும் கேட்டது இல்ல...

அவன் : அப்படின்னா உங்களை அனுப்ப முடியாதே...என்ன பண்ணலாம்

அதுக்குள்ளே எங்க வீட்டுக்காரர் ....சார் , நாங்க ஏற்கனவே ஒரு நாள் மிஸ் பண்ணிட்டோம்...எப்டியாவது போகணும் சார்.

நம்ம ரமணா பட dialog தான் ஞாபகம் வந்துச்சு....எப்டியாவது காப்பாத்திடுங்க சார்.

அவன் : உங்களை நான் அனுப்பணும்னா ரிஸ்க் எடுத்து தான் அனுப்பனும்....என்ன பண்ணலாம்...

எனக்கு அப்போ தான் பொறி தட்டுச்சு....ஓஹோ இவன் பிச்சை எடுக்குற சாதி போல இருக்கேன்னு

அவன் தொடர்ந்தான் :..சரி நேரடியா கேக்குறேன்...எவ்வளோ குடுக்க முடியும் உங்களால...

[இந்த உரையாடல் எல்லாமே தமிழ்ல நடந்துச்சு...நாங்க தமிழர்கள்ன்னு தெரிஞ்சுகிட்டு தான் இந்த மிரட்டல்..அவன் பெங்களூர் காரன் தமிழ் தெரிஞ்சது வசதியா போயிடுச்சு அவ்னுக்கு ]

அவன் : ஒரு அம்பது டாலர் குடுங்க ...நான் போட்டு குடுத்துடுறேன்...ஆனா அடுத்த தடவை வரும் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து வாங்கன்னு......

கரிசனம் அய்யாவுக்கு எங்க மேல...

அதென்ன அம்பது டாலர்னா அவ்ளோ சாதரணமா.....அந்த அம்பதை வச்சு நான் ரெண்டு வாரத்துக்கு சாப்பிடுவேன்....

என் வீட்டுக்காரர் என்கிட்டே டாலர் இருக்கான்னு தெரியல....இருங்க பாக்குறேன்னு...ரெண்டு பெரும் கீழ உக்காந்து குசுகுசுன்னு பேசினோம்...எனக்கு ஆத்திரம் ஆதங்கம்..இயலாமை .....அப்டியே கத்தி ஊரை கூட்டிடலாமன்னு இருந்துச்சு

சரின்னு ஒரு 1500/- எடுத்து நீட்டினோம்....அவன் பதில் எதுவும் பேசல...வாங்கிட்டு சிரிச்சுட்டு நல்லபடியா போயிட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சான்

திட்டிகிட்டே வந்தேன்....பார்த்துகிட்டே இரு இந்த காசை நீ உருப்படியா செலவழிக்க முடியாது....உனக்கு வாந்தி பேதி தான் வர போகுதுன்னு...

இப்படி எல்லாம் சம்பாதிச்சு தான் இவங்க எல்லாம் ஊரெல்லாம் இடம் வாங்கி போடுறாங்களோ...எப்டி இவங்களால நிம்மதியா துங்க முடியும்...

இதெல்லாம் விட...அந்த ஆளை இழுத்து போட்டு கேள்வி கேக்க முடியலியேன்னு தான் எனக்கு வருத்தம்....வெளிய தான் வாய் நீளுது...ஒன்னும் செயல்ல காமிக்க காணும்...

இங்கே வந்து இந்த கதைய சொன்னப்போ என்னோட பங்களாதேஷ் நண்பனுக்கும் இதே கூத்து நடந்துருக்கு கேட்டதும் தூக்கி வாரி போட்டுச்சு...அவன் immigration check எல்லாம் அவன் ஊர்லே முடிச்சுட்டு....connecting flight-க்காக மும்பை வந்துருக்கான்...அங்க அவனை மிரட்டி காசு வாங்கிருக்காங்க...எங்க இருந்து வருது இவங்களுக்கு தைரியம்....நாம பேச மாட்டோம்னு நம்பிக்கையா...ல்லை எங்க முஞ்சில எழுதி ஒட்டிருக்கா..கேளுங்கள் தரப்படும்னு


இருடி...அடுத்த தடவை இருக்கு உனக்கு....


இப்டி தான் நம்ம சுயநலத்துக்காக நாட்டை நாசப் படுத்துகிறோம்... ஒரு குறு குறுப்பு இருக்க தான் செய்யுது...

இனிமே எந்த காரணத்தைக் கொண்டும் இந்த மாதிரி மனுஷங்களை விட்டு வைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் ....

வாயைப் பொத்திக் கொண்டு
பொன்னாத்தா

33 comments:

நசரேயன் said...

நம்ம ஊரு அதிகாரிங்க பொழைப்பு இப்படித்தான் போகுது.. வேற என்ன செய்ய !!!!

sakthi said...

இதெல்லாம் விட...அந்த ஆளை இழுத்து போட்டு கேள்வி கேக்க முடியலியேன்னு தான் எனக்கு வருத்தம்....வெளிய தான் வாய் நீளுது...ஒன்னும் செயல்ல காமிக்க காணும்...


யதார்தமா சொல்லியிருக்கீங்க நிலா அம்மா

sakthi said...

எனக்கு இருந்த லோ பிரஷர் எல்லாம் அன்னிக்கு சரியா போச்சு.

படிக்கும் போதே கஷ்டமா இருக்கு....

sakthi said...

இப்படி எல்லாம் சம்பாதிச்சு தான் இவங்க எல்லாம் ஊரெல்லாம் இடம் வாங்கி போடுறாங்களோ...எப்டி இவங்களால நிம்மதியா துங்க முடியும்...

நியாயமான கேள்வி...

நட்புடன் ஜமால் said...

எதார்த்த நிலையை சொல்லியிருக்கீங்க

இது மாதிரி நிலைகளில் நமக்கு ஒன்றும் செய்ய இயலாமல் தான் இருக்கின்றது.


\\இனிமே எந்த காரணத்தைக் கொண்டும் இந்த மாதிரி மனுஷங்களை விட்டு வைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் ...\\

அடுத்த வாய்ப்பு வரும் வரை இப்படித்தான் ...

ராசுக்குட்டி said...

அடடடடா... ரொம்ப தான் அலைய வைச்சுட்டானுக.

நம்மளையே இப்படி எமாத்துரானுகளே... பாவம் வெளி நாட்டுகாரங்களை எல்லாம் என்ன பாடு படுத்தரானுகளோ.. இப்படி வாங்கற காசு எல்லாம் நீங்க சொல்லற மாதிரி ஏதாவது ஒரு வழியிலே ஒரு நாளைக்காவது அவனுகளுக்கு தண்டமா தான் போகும்.

நட்புடன் ஜமால் சொன்ன மாதிரி, அடுத்த வாய்ப்பு வரும் வரை தான் நாம் எல்லாரும் இப்படி கொடுக்க கூடாதுன்னு உறுதியா இருப்போம். ஆத்திரம் அவசரம்னா தொலைஞ்சு போறானுகன்னு சொல்லிட்டு குடுத்துட்டே தான் இருப்போம். அவனுகளும் வாங்கிட்டே தான் இருப்பானுக. என்னைக்கு தீர போகுதோ இந்த குளறுபடிகள்.

Muniappan Pakkangal said...

Intha maathiri manushangalai vittu vakka koodathu-athu nadakkura kaariyamaa ?

Truth said...

எனக்கும் ஒரு முறை துபாய் ல கனக்டிங் ப்ளேன் மிஸ் பண்ணிட்டேன். ஆனா அது எமிரேட்ஸ் அதனால அவங்க உடனே அடுத்த ப்ளேன்ல என்ன அனுப்பிட்டாங்க. பக்கதுல எங்கயும் போலீஸ் இல்லையா?

குடந்தை அன்புமணி said...

விடுமுறையை நிம்மதியா அனுபவிக்க முடியாம இப்படியெல்லாம் நடந்தா என்ன செய்யறது? உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் இனிமே பயணம் போறவங்களுக்கு ஒரு பாடமா எடுத்துக்குவாங்க!

வேத்தியன் said...

என்னங்க பண்றது???
வெறும் பணத்துக்கு...

இதுக்கு எதுக்கு யூனிஃபோர்மும் தலையில தொப்பியும்???
கிழிஞ்ச வேட்டியைக் கட்டிகிட்டு வந்து இருக்க வேண்டியது தானே...

வேத்தியன் said...

இது பொதுவாக எல்லா நடுகள்லயும் நடக்கிறது தான்...
:-(

ivingobi said...

INDIA vanthuttu ethavathu nalla visayam solluvinga nu paarthen... ipdi feel panna vachuttingalae pons..... sari vidunga inga ellarum ipdi thaan.... periya arasiyal vaathingalae ipdi thaan naama yaarkita poai solla ?

புன்னகை said...

//நான் ஒரு airline ஊழியர்ந்குரதுனால//
இப்படி இருந்துமா நீங்க Air India-ல போக முடிவு பண்ணீங்க? நானும் கூட Travel industry-ல தாங்க இருக்கேன். Air India-ல உங்க அனுபவம் ஒன்னுமே இல்லீங்க! என்னோட clients கிட்டத்தட்ட அழாத குறையா கெஞ்சுவாங்க, Air India flights வேணாம்னு! National carrier-னு நாம தாங்க கிடந்து அடிச்சுக்கிறோம், ஆனா அங்க வேலை செய்றவங்க கிட்ட இந்த உணர்வே கொஞ்சம் கூட இல்லைங்கற மாதிரி தான் இருக்கு. யாரையும் குறை சொல்றதுக்கு இல்ல, நிறைய மாற்றம் தேவைப்படுது, அவ்ளோ தான் சொல்ல முடியும்.

நிலாவும் அம்மாவும் said...

ஆமாங்க நசரேயன்..என்னத்தை செய்ய..

வாங்க சக்தி....எப்டி இருக்கீங்க

ஜமால்...அடுத்த தடவை கண்டிப்பா பண்ண தான் போறேன்....பதிவும் போடா தான் போறேன்

ராசுக்குட்டி....இதெல்லாம் இந்திய மக்கள் தொகை மாதிரி தீராத விஷயம்.....

முனியப்பன்...அவங்களும் மனுசக்ங்க தானே......படத்துல பார்க்குற விஷயங்கள் நடத்தி தான் பார்ப்போமே

நிலாவும் அம்மாவும் said...

@Truth ..போலீஸ் இருந்தார்..அவரும் இந்த கள்ள கூட்டத்துல ஒருத்தரா தான் இருப்பாருன்னு தோனுச்சு...
-----------------------------
@ குடந்தை அன்புமணி

வாங்க அன்பு...ஆமா ஆமா..நான் நண்பர்கள் கிட்ட எல்லாம் சொல்லிட்டே தான் இருக்கேன்..எங்க போனாலும் மும்பை வழிய போயிடாதேங்கன்னு

நிலாவும் அம்மாவும் said...

வேத்தியன் said...

கிழிஞ்ச வேட்டியைக் கட்டிகிட்டு வந்து இருக்க வேண்டியது தானே...///////

சரியா சொன்னீங்க

நிலாவும் அம்மாவும் said...

@புன்னகை ..நான் வேலை பாக்குற விமான கம்பெனி இந்த ஊர்ர்ல customer சர்வீஸ்-ல முதல் இடம் ...அதுனால எனக்கு இது அதிர்ச்சியான விஷயம் தான்...


----------------------

நேசமித்ரன் said...

பார்த்துஙக பாம்பே ஏர்போர்ட் ல தான் பாஸ் போர்ட் ல இருந்து ப்ரெண்டு மூணு பக்கத்த கிழிச்சு அனுப்பி இருக்கனுங்க

ஒரு நண்பனுக்கு

விடக் கூடாதுங்க இவனுங்கலஎல்லாம்

நிலாவும் அம்மாவும் said...

வாங்க நேசமித்ரன்....இப்டி எல்லாம் வேற பண்றாங்களா? இவனுங்களை எல்லாம் என்ன பண்ணலாம் ?

பழமைபேசி said...

துயரத்தையும் நகைச்சுவையா சொல்லி.... பொன்னாத்தா, சக்கைப் போடு போடாத்தா...

நட்புடன் ஜமால் said...

ஜமால்...அடுத்த தடவை கண்டிப்பா பண்ண தான் போறேன்....பதிவும் போடா தான் போறேன்\\


இப்படி ஒரு நிலையே உங்களுக்கு(ம்) வராமல் இருக்க பிரார்த்திக்கிறேன்

வந்துவிட்டால் அதனை எதிர்க்கும் சக்தி நமக்கு கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்

MayVee said...

இதற்க்கு நீங்க "பிச்சை எடுக்கும் அதிகாரி" என்று பெயர் வைத்து இருக்கலாம்.....

பாவம் ....

வீட்டில் என்ன கஷ்டமோ .... இப்படி பிச்சை எடுக்கறாங்க .....


இந்த மாதிரி பிச்சை எடுப்பவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும் .....

vasan said...

1. நாம பைசா கொடுத்து பழக்கப் படுத்த கூடாது.
2. நாம பைசா கொடுக்கறத சர்வைலன்ஸ் விடியோ எடுத்துட்டா, நமக்கு தான் பிரச்சனை.
3. இந்த மாதிரி இடத்துல எப்படியும் நம்ம வேல நடந்துடும், என்ன பைசா கொடுக்கலன்னா லேட் பண்ணுவானுக அவ்ளோ தான்.
சில சமையம் நாம முகத்த சீரியசா வச்சிகிட்டு (பயம் காட்டாம) பேசினா, அவனுக பயப்புடுவானுக.

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

kovamaa varuthu..

aana yenna panrathu...

yellorum sernthu oru vazhi pannanum

மின் முகம் said...

Enna kodumai ithu. Namma oorula thaan ipdi ellam nadakkum.

Vera enna seya mudiyum nammalaalae? we could scream? but would that work? how would it work? illae, Police koopidalaam. Avungha nammaku help pannuvaanghala, illae avunghalukum paisa tharanuma? illae, complaint eluthi podalaam on that person. will that be effective? Ethavathu plan pannanum intha maathiri scenario-ku that would work and teach them a hard lesson.

But, sorry for what you had to go through. just reading it makes me so upset, I could imagine how you both would have felt.

ஹேமா said...

நிலா அம்மா உங்க பாட்டை பாடிப் பாடிச் சொல்லியிருக்கிறீங்க.என்ன செய்யலாம்.நம்ம நாடுகளின் தலைவிதியே இப்படித்தான்.

குடந்தை அன்புமணி said...

தங்களுக்கு ஒரு விருது... என் கடைக்கு வரவும்...
http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_21.html#links

அப்புச்சி said...

ஐயோ அக்கா நான் ஒரு ஈழத் தமிழன் புலம் பெயர் வாழ்வு,கன நாளாக தமிழ்நாடு செல்ல ஆசை சென்றேன் சென்னை விமான நிலையம் தான்,,,தமிழர்கள் தான் ஆனால் 2 மணி நேரம் அவர்கள் என்னை படுத்திய பாடு இருக்கே வாரத்துக்கு ஒரு பதிவாக போட்டாலும் 7 வாரம் போடலாம்,ஆனா கடைசியாக ஒரே ஒரு கேள்வி மாத்திரம் கேட்டார்கள் தம்பி உனக்கு இன்னும் புரியலையா ஏன் தாமதப்படித்திறம் என்று?உங்களுக்கே இந்த கதியா??????எதுக்கும் முன் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்

நட்புடன் ஜமால் said...

எங்கங்க ஆளை காணோம்

பதிவு போடுங்க ...

தேவன் மாயம் said...

இது இங்கே ரொம்ப நாள் ஓடுதுங்க... இவனுங்களை விட்டுட்டு 50, 100 வாங்குரவனுங்களை பிடிச்சி பேப்பரில் போடுவானுங்க!!

Anonymous said...

பழமையண்ணே உங்களை வலைச்சரத்தில அறிமுகப்படுத்தியிருக்காங்க. அது வழியா உங்களைப்புடிச்சிருக்கேன். நல்லா எழுதறீங்க.

cheena (சீனா) said...

சண்டைக்கோழி - கோழிக்கொளம்பு - நல்லாத்தான் இருக்கு பொன்னாத்தா

இது மாதிரி அனியாயங்கள் நடக்குதே இன்னும் - இதுக்கெல்லாம் விடிவு காலமே இல்லையா


நானும் பாத்துட்டேன் - இந்த இமிகிரேஷன்ல இருக்கவனுங்கல்லாம் சிரிக்கவே மாட்டானுங்களா - எப்பப் பாரு ஒரு இறுக்கமான முகம் - அய்யே

நிலாவும் அம்மாவும் said...

வாங்க சின்ன அம்மணி...

வாங்க சீனா....ஆமாங்க...எந்த ஊருக்கு போனாலும் இஞ்சியை வாயில ஒதுக்கிட்டு தான் பேசுவாங்க..