Thursday, February 19, 2009

என்னை கவர்ந்த ஆத்மா யார்?

என்னோட அலுவலகத்தில என்னோட டீம் 18 பேர் கொண்ட டீம். எல்லாருமே ஓரளவுக்கு இளம் வயது தான். எப்போவுமே ஏதோ ஒரு டீம் activity இருந்துட்டே இருக்கும்.

ஒரு நாள் ஒரு meeting நடந்துகிட்டு இருந்தப்போ, உங்களை மிக கவர்ந்த மனிதர் யார்னு எல்லாரும் சொல்லனும்னு சொல்லிட்டாங்க....எப்போதும் போல என் மேலாளர்...பொன்னாத்தா எல்லார் பேரையும் போட்டு அவங்களுக்கு யாரை பிடிக்கும்.ஏன் பிடிக்கும்னு எழுதுன்னு சொல்லிட்டார்...
எப்போவுமே எனக்கு தான் இந்த வேலை வரும்னு தெரிஞ்சாலும் பெரிய பகுமான கோழி மாதிரி பேனா பேப்பர் எடுக்காம தான் போவேன்....அவசர அவசரமா பேனா பேப்பர் ஒசி வாங்கி எழுத ஆரம்பிக்கும் போது...ஆஹா நம்ம வாய்ப்பு வரும் போது நாமளும் ஒரு ஹீரோ பேரு சொல்லனுமே...யாரு நம்ம ஹீரோன்னு மண்டைய குடைய ஆரம்பிச்சேன்...

ஒரு சிலர் யோசிக்க அவகாசம் கேட்டு pass சொல்லி அப்டி இப்டின்னி என் முறை வந்துடுச்சு....இருந்த கூட்டத்தில பாதிக்கும் மேல சொன்ன பெயர் "பராக் ஒபாமா ".....என் பேர் சொன்னதும் , டக்னு நான் சொன்னது இந்திரா காந்தி....நான் பள்ளிகூடம் சேர்ந்த புதுசுல இந்திரா காந்தி சுட்டு கொன்னுட்டங்கன்னு ஸ்கூல் விடுமுறை விட்டதும் சந்தோஷமா தான் வீட்டுக்கு போனேன்...ஆனா தீவிர காங்கிரஸ்வாதியான என் தாத்தா பட்ட வருத்தத்தையும், ஆத்திரத்தையும் பார்த்து தான் எனக்கு இந்திரா காந்தி ரொம்ப முக்கியமானவங்க போல இருக்குன்னு புரிஞ்சது....

சத்தியமா எனக்கு இந்திரா காந்தி பற்றி பெரிசா எதவும் தெரியாது.....ஆனா என்னை பொறுத்த வரைக்கும் ஒரு தைரியமான பெண். அவங்களோட ஒளி நகல்கள் பார்க்கும் போது...எவ்ளோ தைர்யமா இவ்ளோ ஆண் மக்களுக்கு நடுவில தலை நிமிர்ந்த நிக்குறாங்களேன்னு இப்போ மட்டும் இல்லை, அந்த விவரம் புரியாத வயசுலேயே நினச்சுருக்கேன்....

அப்போ இருந்து இப்போ வரைக்கும் எங்கயும் யாராவது ஒரு பெண் சாதனை செஞ்சா ஒரு கணம் மனசால அவங்களை வாழ்த்துறது உண்டு...
இந்திரா காந்தி மாதிரி வரணும்னு நினச்துனாலயோ என்னவோ இது வரைக்கும் வாழ்கையில எதுக்கும் பயந்தது இல்லை....
இந்திரா நூயி, காண்டலிசா , புராண காலத்தில அதிதி , ஜான்சி ராணி, இவங்க எல்லாம் தான் என்னை கவர்ந்தவர்கள்....

உங்களை கவர்ந்தவர்களை பகிர்ந்து கொள்ள நான் அழைப்பது....


டாக்டர்
தேவா
என் மகராசி நிலா
என் தம்பி IRAPEKE
Will to Live ரம்யா

விதிமுறைப்படி நீங்க குறைந்த பட்சம் 2 பேரை அழைக்கணும் ...

வாழ்க பதிவர் பனி, வளர்க எம் கூட்டம்
பேரு வச்ச ஆத்தா பொன்னாத்தா

12 comments:

நட்புடன் ஜமால் said...

நல்லாக்கீதே ஐடியா ...

தேவன் மாயம் said...

நம்மல
மாட்டி
விட்டீகளே
மக்கா!
இது
சரியா?
சரி
பாப்பம்!!

தேவன் மாயம் said...

என்னைக்கவர்ந்தவர்னு
சொல்லும் நபர்
எல்லோரையும்
கவர்ந்தவரா இருக்கணுமே!
தேவா...

Arasi Raj said...

டாக்டரே, ஐடியா நல்லக்கீதாம் ....அப்போ ஜமால் தூக்கி உள்ள போட்ருங்க...

உங்களுக்கு பிடிச்சவர் உங்க அப்பாவ கூட இருக்கலாம்...அவரை எல்லாருக்கும் பிடிக்கணும்னு இல்லியே...

அபி அப்பா said...

ஆகா! இப்ப தான் உங்க பிளாக் பக்கம் வரேன் பொன்னாத்தா! நல்லா இருக்கு எல்லா பதிவும். இந்திராவை எனக்கும் பிடிக்கும்.. ஆனால் இந்திரா அப்படி தைரியமா வளர காரணமாக இருந்தது நேருதான். அவர் எழுதிய கடிதங்கள் (சிறையில் இருந்து)புத்தகமாக வந்துள்ளது. முடிந்தால் படிக்கவும்.

எனக்கு பிடிச்ச நபர்ன்னு சொன்னா நிறைய பேர் இருக்காங்க. அதை அழகா ஒரு பதிவா போடலாம். நேரம் கிடைக்கும் போது போட்டுடுவோம்!

Arasi Raj said...

நன்னி ..... சரியா சொன்னிங்க அபி அப்பா.......எங்க அப்பா கூட நான் பையனா தன் பிறப்பேன்னு நினைச்சார்....பொண்ணா பிறந்துட்டதுனால, பையன் மாதிரி வளர்க்கனும்னு விபரீத ஆசை வச்சதுனால தான் நான் இன்னிக்கு சண்டை கோழியா மாறி நிக்குறேன்....ஹி ஹி ...அப்பா மேல பழியை போட்டாச்சு

நேருவோட கடிதங்கள் சில படிச்சுருக்கேன்...கண்டிப்பா அடுத்த தடவை ஊர் பக்கம் போகும் பொது வங்கி படிக்குறேன்

தேவன் மாயம் said...

2.ஆதவாகுழந்தை ஓவியம்!
5.வேத்தியன் வேத்தியனின் பக்கம்
இவர்கள் இருவரும் தொடர் பதிவிட்டு உள்ளனர்!
போய் பதில் தரவும்!

தேவன் மாயம் said...

அகராதிக்கு ஆங்கிலத்துல டிக்சனரினு அர்த்தமாம்,அப்போ அகராதி பிடிச்சவனா "டிக்சனரி பிடிச்சவளா தேவன்மயம்? இதுவும் ஒரு டவுட் தான் வேற என்ன???//
நல்ல டவுட்தான்!
நம்ம அம்மாட்டே கேட்டு விடுவோம்!!
தேவா..//

இப்படி ஒரு கேள்வி மிஸ்ஸ்.டவுட் கேட்டு உள்ளார்கள்! பதில் ?

RAMYA said...

நன்றி நிலாவும் அம்மாவும், உங்க ஆசைப்படி விரைவில் பதிவு போடறேன்.

எனக்கு கண்டுபிடிக்கவே இவ்வளவு நாள்
ஆகிடிச்சு, அப்போ எனக்கு கிச்சா
கிடையாதா நிலா???

Anonymous said...

அட இது என்ன புதுமுறை விளையாட்டா இருக்கு?
புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்களே

- இரவீ - said...

வணக்கம் அக்கா !!!
தொடர் பதிவின் பிறப்பிடம் இதுதானோ ?
உங்கள "பொன்ஸ்" அப்டீனு கூப்டலாமா ?

Arasi Raj said...

Ravee (இரவீ ) said...
வணக்கம் அக்கா !!!
தொடர் பதிவின் பிறப்பிடம் இதுதானோ ?
உங்கள "பொன்ஸ்" அப்டீனு கூப்டலாமா ?
///********
ஆமா ஆமா...ஆபீஸ்-ல ஆணி கடப்பாரை மூழ்கி போயிருந்தப்போ உதிச்ச ஞானோதயம்

பொன்ஸ்நு தான் நிறைய நண்பர்கள் கூப்பிடுவாங்க ...