Friday, February 27, 2009

குப்பைத் தொட்டி மனிதர்கள்

இது எனக்கு இ மெயிலில் ஆயிரக்கணக்கான ஃபார்வேர்டு பொத்தான்கள் அமுக்கப்பட்ட பிறகு வந்து சேந்துச்சு....படிச்சதும் என்னமோ ரொம்ப உண்மைன்னு தோணுச்சா..அதுனால சரி நம்ம மக்கள் கிட்ட பரிமாரிக்கலாமேன்னு...
[என்னமோ ஆயிரக்கானவங்க வந்து பதிவு படிச்சுட போற மாதிரி நினைப்புத் தேன் ...]
-----------------
ஒரு நாள் நண்பி ஒருத்தி வாடகை மகிழுந்துல ஏறி விமான தளத்துக்கு போறதுக்காக போயிட்டு இருந்தா....மகிழுந்து ஓட்டுனர் மிகவும் ஜாக்கிரதையா நிதானமா வண்டி ஓட்டிட்டு இருந்தார். திடீர்னு ஒரு பொந்துக்குள்ள இருந்து வந்த மாதிரி சந்துக்குள்ள இருந்து வந்துச்சு இன்னொரு மகிழுந்து ..
அப்டியே பிரேக் மேல ஏறி நின்னு இழுத்துப் பிடிச்சு ரெண்டு வண்டிக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாம நண்பியோட வண்டி ஓட்டுனர் வண்டியை நிறுத்திட்டார்.
இவர் வண்டிக்கு எந்த ஒரு சேதமும் குடுக்காம கிளம்ப எத்தனிக்கும் போது அந்த இன்னொரு ஓட்டுனர் வசை பாட ஆரம்பிச்சுட்டார். என் தோழிக்கு பயங்கர கடுப்பு....சரி ஊர் பேர் தெரியாத ஊர்ல நமக்கு ஏன் வம்புன்னு இவ வாயில ஸிப் இழுத்து போட்டா...

இருந்தாலும் இவளோட ஓட்டுனர் எதுவுமே நடக்காம ரொம்ப சாதரணமா இருந்தது பார்த்து இவளுக்கு ஆச்சர்யம்.அவர் கிட்டயே கேட்டா " என்னங்க..அந்த ஆள் தப்பும் பண்ணிட்டு என்னமோ நீங்க தான் தப்பு பண்ண மாதிரியும் அவன் ஏதோ லார்டு லபக்கு தாஸ் மாதிரியும் பேசுறானே..உங்களுக்கு கோபம் வரலியான்னு"...அதுக்கு ஓட்டுனர் சொல்லிருக்கார்...." கோபம் எல்லாம் வரலீங்க...எனக்கு அந்த ஆளை பார்த்தா பாவமா தான் இருக்கு...இவரை மாதிரி நம்மளை சுத்தி நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க ...இவங்க எல்ல்லாம் குப்பை வண்டி மாத்ரிங்க ..தினமும் கோப தாபங்க, ஏக்கம், இயலாமை, எரிச்சல் எல்லாத்தையும் சேர்த்து சேர்த்து வச்சுட்டு இருப்பாங்க....குப்பை வண்டி நிறைஞ்சதும் இறக்கி வைக்க இடம் தேடுவாங்க......நம்மளை மாதிரி ஆளுங்க மேல கொட்டி விட்டு போயிடுவாங்க நாம அவர் பேசினதுக்கு பதில் பேசினா நம்ம அவர் குப்பைய அள்ளுற மாதிரி ஆயிடும்...தூசி தட்டி விட்டா மாதிரி இதையும் தட்டி விட்ட போனா தான் நமக்கு நல்லது...இல்லன்னா இந்த குப்பையை அள்ளிட்டு போயி நாம வீட்ல நம்ம பிள்ளை குட்டிங்க இல்லாட்டி அலுவலகத்துல நம்ம கூட வேலை பாக்குறவங்க மேல கொட்டிடுவோம்.."

அப்போ தான் என் மர மண்டை நண்பிக்கு தோணிருக்கு..ஆஹா...எம்புட்டு பெரிய விஷயத்தை இவ்ளோ சாதரணமா சொல்ராறேன்னு....

---------------------- -----------------------------------------------------------------------

சரி....என்ன தான் சொல்ல வர்றன்னு நீங்கள்லாம் இடத்தை விட்டு எந்திருக்குறது தெரியுது....முடிச்சுடுறேன்..முடிச்சுடுறேன்..
# எக்காரணத்தைக் கொண்டும் உங்க மேல குப்பையை கொட்ட விடாதீங்க
#இருக்க போறது கொஞ்ச நாள்...அதுல ஏன் காலங்காத்தால எந்திரிக்கும் போதே குப்பை மூஞ்சியோட எந்திரிக்கனும்?
#உங்களை நல்ல படிய மதிக்குரவங்களை நீங்களும் மதிச்சு நடந்துக்கோங்க...
#உங்களை கேவலமா நடத்துரவங்களை மன்னிச்சு மறந்துடுங்க....[ போன வருஷ performance-க்கு review சரியா குடுக்காத மேலாளரையும் மன்னிப்போம்.மறப்போம்...]
#Life is ten percent what you make it and ninety percent how you take it!



சரி....எனக்கு ஒரு சந்தேகம்.....இப்போ என் கிட்ட இருக்குற குப்பையை கொட்டலாமா கூடாதா ? ...அவ்வ்வ்வ்வ்வ்வ்

குப்பையுடன்
பொன்னாத்தா

18 comments:

Dii said...

ஓட்டுனருக்கு ஒரு "ஓஓஓஓஓஓ...ஹோ" !!!
ஆத்தாடி! எம்புட்டு பெரிய விஷயத்த இப்படி இலகுவா சொல்லிட்டாரு..

அத எங்களுக்குச் சொன்ன பொன்னாத்தாவுக்கும் ஒரு "ஓஓஓஓ..."

Dii said...

ஓ..மீ த ஃப்ஸ்ட்டா???

ஓ மீ செகண்டுமா...? ஹி ஹி...

Arasi Raj said...

நன்றி வானவில் தேவி !!! நீங்க தான் முதலும் முற்றிலும் போல இருக்கு....ஹி ஹி

ஆதவா said...

[என்னமோ ஆயிரக்கானவங்க வந்து பதிவு படிச்சுட போற மாதிரி நினைப்புத் தேன் ...]////

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... நாங்க இருக்கிறோம்ல... ஆயிரத்தில ஒண்ணு!!

ஆதவா said...

சகிப்புத் தன்மை இருந்துட்டா.... சின்ன சின்ன விஷயங்களை ஈஸியா சமாளிச்சடலாம்....

பகிர்தலுக்கு நன்றி...

Arasi Raj said...

நன்றி ஆதவா ..இன்றைய பொழுது நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

இது உண்மைதாங்க!
நான் வண்டியில்
போகும்போது முன்னால்
பைக்கில் போன ஜோடி மேல்
மோதுவது போல் வந்த
பைக் பையன்களை,
பார்த்துப்போப்பா என்றார்.
அதற்கு கேட்கக்கூசும் இரண்டு
வார்த்தைகளைக்
கேட்டனர்.என்ன செய்வது?
ஒன்றும் சொல்லமுடியாமல்
போய்விட்டார்..

தேவா..

தேவன் மாயம் said...

நன்றி வானவில் தேவி !!! நீங்க தான் முதலும் முற்றிலும் போல இருக்கு....ஹி ஹி///

ஏங்க!
நாங்க இல்லையா?

ஹரிணி அம்மா said...

நல்ல விசயம்தான்!!

ஹரிணி அம்மா said...

குறிப்பாக
குடும்பத்துடன்
செல்பவர்கள்
ஜாக்கிறதையாக
பேச வேண்டும்!!

தேவன் மாயம் said...

இது உண்மைதாங்க!
நான் வண்டியில்
போகும்போது முன்னால்
பைக்கில் போன ஜோடி மேல்
மோதுவது போல் வந்த
பைக் பையன்களை,
பார்த்துப்போப்பா என்றார்.
அதற்கு கேட்கக்கூசும் இரண்டு
வார்த்தைகளைக்
கேட்டனர்.என்ன செய்வது?
ஒன்றும் சொல்லமுடியாமல்
போய்விட்டார்..

தேவா..

தேவன் மாயம் said...

இருந்தாலும் இவளோட ஓட்டுனர் எதுவுமே நடக்காம ரொம்ப சாதரணமா இருந்தது பார்த்து இவளுக்கு ஆச்சர்யம்.அவர் கிட்டயே கேட்டா " என்னங்க..அந்த ஆள் தப்பும் பண்ணிட்டு என்னமோ நீங்க தான் தப்பு பண்ண மாதிரியும் அவன் ஏதோ லார்டு லபக்கு தாஸ் மாதிரியும் பேசுறானே..உங்களுக்கு கோபம் வரலியான்னு"...அதுக்கு ஓட்டுனர் சொல்லிருக்கார்...."///

கோபத்தை அடக்கத்தான் வேண்டும்

தேவன் மாயம் said...

அமுக்கப்பட்ட பிறகு வந்து சேந்துச்சு....படிச்சதும் என்னமோ ரொம்ப உண்மைன்னு தோணுச்சா..அதுனால சரி நம்ம மக்கள் கிட்ட பரிமாரிக்கலாமேன்னு...
[என்னமோ ஆயிரக்கானவங்க வந்து பதிவு படிச்சுட போற மாதிரி நினைப்புத் தேன் ...]///

ஒரு ஆள் படித்தால் 1000 பேர் படித்தமாதிரி!
எப்படி ! பாட்சாவுக்கே பாஸ்!!!(BOSS)!!

ஹரிணி அம்மா said...

எக்காரணத்தைக் கொண்டும் உங்க மேல குப்பையை கொட்ட விடாதீங்க
#இருக்க போறது கொஞ்ச நாள்...அதுல ஏன் காலங்காத்தால எந்திரிக்கும் போதே குப்பை மூஞ்சியோட எந்திரிக்கனும்?///

நீங்க சொல்றது சரியாத்தான் இருக்கு!

ஹரிணி அம்மா said...
This comment has been removed by the author.
Suresh said...

[என்னமோ ஆயிரக்கானவங்க வந்து பதிவு படிச்சுட போற மாதிரி நினைப்புத் தேன் ...]///

nan 2

Arasi Raj said...

வாங்க ஹரிணி அம்மா..

வாங்க சுரேஷ்

நாகராஜன் said...

நல்ல விஷயத்தை சொல்லியிருக்கீங்க. நன்றி.

நானும் சில வேளைகளில் என்னுடைய குப்பையை கொட்டியிருக்கிறேன் அது குப்பை என்று தெரியாமலே!!!
ஆனால் இப்படி இருக்க எல்லாராலும் முடியுமா என்று தெரியவில்லை, இருப்பினும் ஒரு சின்ன முயற்சியாவது செய்யலாம்... செய்வேன்!!!