Monday, August 10, 2009

Creativity / Recycle

என்ன மக்கா எல்லாரும் நல்லா இருக்கீங்கல்ல...நல்லா தான் இருப்பீங்க...

இந்த பக்கம் எட்டி பார்க்க கூட நேரம் இல்ல.....கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க...பதிவு போடுறதையும் பின்னூட்டம் போடுறதையும் முழு நேர வேலை ஆக்கிடுறேன்...
உங்க வீட்டு ஆணி எங்க வீட்டு ஆணி இல்லீங்க...ஊர்ப்பட்ட ஆணியை , துருப்புடிச்ச ஆணியை செம்மை பார்த்துட்டு இருக்கேன் ... .அதுனால மக்கள் எல்லாம் தயவு செஞ்சு கோச்சுக்க கூடாது சரியா....


இதுல நான் பெத்த மகராசி வீட்டுக்கு வந்து ஒரு ஆசைக்கு கணினியை தொட்டா கூட.....என்ன செய்யுற....ஏன் செய்யுற....எதுக்கு செய்யுற.. நீ மட்டும் தான் செய்வியா....நான் செய்ய கூடாதா...அது ஏன்?.....இம்புட்டு கேள்விக்கு பயந்து நான் அந்த பக்கம் தலை கூட வச்சு படுக்கலைங்குறேன்....

சரி இப்போ மட்டும் என்னத்துக்கு வந்தன்னு கேக்குறீகளா...
சும்மா நம்மளை யாரவது சுகம் விசரிசுருக்காகலன்னு எட்டி பார்த்தா, புதுசா நாலு பேரு நலம் விசரிச்சுருந்தங்க...என்னடா அதிசயமா இருக்கேன்னு அலசிப் பார்த்தா தான் தெரிஞ்சது,.....நம்ம பழமை அண்ணாச்சி நம்மளை அறிமுகம் செஞ்சு வச்சுருக்காக...வலைசரத்துல....நல்லதுங்கன்னே...


சரி வந்தததுக்கு தலைப்புக்கு ஏத்த மாதிரி என்னத்தையாவது சொல்லனும்ல..சொல்லிட்டு போறேன்...
நம்ம மக்கள் creativity-க்கு ஒரு அளவே கிடையாதுங்க.....நான் அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் வெறும் வாயை மெல்லுறது கிடையாது....அட..வாயில சூயிங்கம் போட்டு தான் மெல்லுவென்னு சொல்றேன்...
ஊர்ல இருக்கும் பொது நான் சூயிங்கும் திங்கும் போதெல்லாம் பக்கத்து வீட்டு ஆச்சி வந்து..."தாயீ...நீ நல்லா மென்னுட்டு துப்பிடாத...எனக்கு குடு தாயீ" அப்படிம்பாக....ச்சே....அது எதுக்கு உங்களுக்குன்னு கேட்டா...பிளாஸ்டிக் குடத்துல சின்ன ஓட்டை இருக்கு....ஓட்டை அடைக்குறவன் அஞ்சு ரூவா சொல்லுவான்.....இந்த சூயிங்கம் ஒரு நாலு நாள் தாங்கும் தாயீ...அதான் கேட்குறேன்ம்பாக.....அட..இது கூட நல்லா இருக்கே.....


ஏத்தா ஆச்சி...நான் உனக்கு புதுசா ஒன்னு வாங்கி தரேன்...நீயே மென்னு நீயே ஒட்டிக்கோன்னு சொன்னேன்.....அதுக்கு அவங்க ..எ போடி கிருக்கச்சி...நானே பல்லு இல்லாத கிழவி..நான் எப்போ அத மென்னு...துப்பி...;போ...கீழ போடுற கழுதைய என்கிட்டே குடுன்னா...குடுத்துட்டு போயேன்....
எல்லாம் என் நேரம்த்தா..என் நேரம்...ஐயோ, கிழவி நம்ம எச்சியை கைல தொட வேண்டாம்னு பார்த்த நீ ரொம்ப தான் பேசுற...சரி இந்தா போ.....அறையும் குறையுமா தின்ன சூயிங்கம் ஒரு நாலு நாள் அவங்க குடத்துல ஓட்டிகிட்டு இருந்துச்சு.....
என்ன இதை Creativity-ன்னு சொல்றதா...இல்ல Recycling-நு சொல்றதா...நீங்களே சொல்லுங்க
வந்ததுக்கு ஏதோ மொக்கைய போட்டாச்சு..வர்ட்டா


வெறும் வாயை மென்னபடி
பொன்னாத்தா


19 comments:

நட்புடன் ஜமால் said...

வந்தாச்சா ஆத்தா!

வருக வருக

நட்புடன் ஜமால் said...

இந்த பக்கம் எட்டி பார்க்க கூட நேரம் இல்ல

8ட்டி பார்க்காட்டி என்னா

6றியாவது பார்த்தீங்களா

நட்புடன் ஜமால் said...

உங்க வீட்டு ஆணி எங்க வீட்டு ஆணி இல்லீங்க...ஊர்ப்பட்ட ஆணியை ]]


சர்தான் சர்தான்

எங்க வூட்டு ஆணி அங்கே எப்படி வரும்

நட்புடன் ஜமால் said...

உங்களுக்கு ரிசைக்கிளிங்

பாட்டியோடி கிரியேட்டிவிட்டி

Truth said...

ஹி ஹி...

RAD MADHAV said...

//
வெறும் வாயை மென்னபடி
பொன்னாத்தா //

He he he he he :-)))

குடந்தை அன்புமணி said...

இப்படி ஒரு இடுகையைப் போட்டா கொஞ்ச நாளைக்கு தாங்கும்னு நினைப்பா... நடத்துங்க...

ராசுக்குட்டி said...

நீங்க பக்கத்து வீட்டு ஆச்சிகிட்ட புதுசா ஒரு குடம் வாங்கி தர்றேன்னு சொல்லியிருந்தா சரின்னு சொல்லியிருப்பாங்களோ என்னமோ... ஆவ்வ்வ்வ்வ்...

தேவன் மாயம் said...

என்ன இது? வந்து கலகலப்பாக்குங்க!! வலையுலகம் ரொம்ப வறட்சியா இருக்கு!

இரவுப்பறவை said...

என்ன சொல்ல வர்றீங்க?

Ravee (இரவீ ) said...

உங்களுக்கு ஒரு விருது
வாழ்த்துக்கள்.
.http://blogravee.blogspot.com/2009/08/blog-post_26.html.

ஹேமா said...

நிலா அம்மா ஆணி அடிச்சு களைச்சுப்போய் இருப்பீங்க.நீங்களும் நிலாக்குட்டியும் சுகம்தானே.சீக்கிரமாப் பதிவு போடுங்க.ஆணி எப்பிடி அடிக்கிறது.துருப்புடிச்ச ஆணியை எப்பிடி சரிப்படுத்துறதுன்னு அதையே போடலாமே!

டம்பி மேவீ said...

creative recycling nnu sollalam ....


illati

recycling in a creative way nnu kuda sollalam

மின் முகம் said...

தப்பு பண்ணிடீங்க பொன்னி. அறையும் கொறையுமா மென்னு குடுத்தா சீவிங்கம்ல சக்கரை இன்னும் இருக்கும். அப்போ கொடத்துல சீவிங்கும் ஒட்டாது. பாட்டி பிளான் கெட்டுது போங்க

Truth said...

சில்ஹவுட் காம்பெட்டிஷன்ல கலந்துகிட்டீங்க போல இருக்கு :-) வாழ்த்துக்கள்

RAD MADHAV said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

நட்புடன் ஜமால் said...

எங்கே எப்படி இருக்கீங்க

யாவரும் யாவையும் நலம் தானே!!!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in