Monday, March 09, 2009

என் கேள்விக்கென்ன பதில் ?

1.உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
-என் பெயர் பொன்னரசி. என்னோட தாத்தா பேரு பொன்னுசாமி . அவர் பேரை வைக்கனும்னு வச்சாங்க.
-கண்டிப்பா...எத்தனை பேர் பாராட்டி இருக்காங்க தெரியுமா

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நிலாவை எங்க அம்மா கூட அனுப்பி வச்சப்போ.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இப்போ இப்போ கொஞ்சம் கொஞ்சம் தேறிகிட்டு இருக்கு...அதுனால பிடிக்கும்...பள்ளிக் கூடம் படிக்கும் போதெல்லாம் கோழிக் கிறுக்கல் தான்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
வேற என்ன...கல்யாண சாப்பாடு தான்....சாம்பார், ரசம், ஒரு நாலஞ்சு பொரியல்..ஹி ஹி

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கொஞ்சம் கஷ்டம் தான். முதல்ல நண்பி ஆயிடுவேன்....ஆனா தொடர்ந்து நட்பு பாரட்டுவேனான்னு சந்தேகம் தான்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா
கடல்ல குளிக்குறது நல்ல விளையாட்டு....அருவியில் குளிக்குறது சுகம்...ஆத்துல குளிக்குறது ரொம்ப பிடிக்கும்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

உடை, கண்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது-தைரியம் , எல்லாத்தையும் தெரிஞ்சக்கனும்ன்குற ஆர்வம்...சோர்ந்து போகாமை
பிடிக்காதது-முன் கோபம், பொறுமையின்மை
9.உங்க "சரி பாதி" கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்சது - பொறுமை
பிடிக்காதது- எப்போ பார்த்தாலும் TV பார்ப்பது...[ யப்பா... எப்டி தான் முடியுதோடா சாமி ]

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
தற்க்காலிகமாக நிலா, எப்பொழுதும் குடும்பம்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
பச்சை

12.என்ன கேட்டு கொண்டு இருக்குறீங்க ?
குக்கர் சத்தம் , TV சத்தம்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை ?
அடர்ந்த ரோஜா வர்ணம்

14.பிடித்த மனம்
-மழை பெய்றதுக்கு முன்னாடி வரும் மண்வாசம்
-துவைத்த போர்வையில் முதல் நாள் படுக்கும் போது வீசும் சோப் மனம்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்க காரணம் என்ன ?
அவரின் கவிதைகளும் வார்த்தை உபயோகங்களும். ......அவரின் வரிகள் ஒவ்வொன்றும் அவர் எவ்வளவு எளிமையனவர்னு காட்டுது...சிலோன் தமிழர்கள்னாலே எனக்கு பிடிக்கும்....இவரை பற்றியும் தெரிந்து கொள்ள அவா..[ யார் அவர்....கீழே பாருங்க ]

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு எது?
எனக்கு என்னோட நண்பர் ஒருத்தர் "face book"-ல அனுப்பினார்...அவரை ரொம்ப எல்லாம் தெரியாது

17. பிடித்த விளையாட்டு..
நேற்று வரை வாலி பால் ; நேற்றில் இருந்து பெயின்ட் பால் [ அந்த கதை தனி பதிவில்]

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்.
கதை இல்லாவிடினும், கருத்து இல்லாவிடினும் ..விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் படங்கள் ...

20.கடைசியாப பார்த்த படம்
வெண்ணிலா கபடிக் குழு

21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம் - ஊரே பூக்காடாய் இருக்கும்
இலையுதிர் காலம் -வண்ண வண்ணமாய் பூக்களின் அழகையும் மிஞ்சும் இலைகள்.
22/என்ன புத்தகம் படித்து கொண்டு இருக்கீங்க ?
Beneath the Marble Sun.

23.உங்கள் desktop-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு
ஒரு நாள் மாற்றுவீர்கள் நிலாவோட படங்கள் தன் இருக்கு...வாரத்துக்கு குறைந்த பட்சம் ஒரு முறை மாற்றுவேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
வீணை சத்தம் பிடிக்கும்....குழந்தை அழும் சத்தம் என்னால கேக்கவே முடியாது....வேறு யார் குழந்தையானாலும் தேற்ற முயற்சி செய்வேன்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு ?
இப்போ இருக்குறதே தூரம் தானே....நியு யார்க்-ல ....இதையும் விட தூரம்னா கலிபோர்னியா போனது தான்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ஹ்ம்ம்..ஆட தெரியாது, பாட தெரியாது....அனால் நன்றாக (!) ஓவியம் வரையத் தெரியும்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.
ஏமாற்றம். ...ஆனா தினம் தினம் ஏதோ ஒரு விஷயத்துல ஏமாந்துட்டு தான் இருக்குறேன்....கொஞ்ச நேரத்துல சரி ஆயிடுவேன்...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம், எரிச்சல்
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஜெய்ப்பூர் , ஆக்ரா கோட்டை .....மறுபடி போகனும்னு ஆசை
30.எப்படி இருக்கணும்னு ஆசை
எதுக்குமே அலட்டிக்காம நடக்குறது நடக்கட்டும்னு இருக்கணும்னு ஆசை....ஹ்ம்ம்....முடியலியே

31.கணவர் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்
ஷாப்பிங் [ ரொம்ப கஷ்டம் ]

விதி முறை
  • ஒரே ஒருவரை மட்டுமே அழைக்கலாம்.
  • இந்த அழைப்பு மணி எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்க, உங்களுக்கு முன்னால் அழைக்கப்பட்ட 5 பேரின் பெயரை போட வேண்டும்.

நான் அழைப்பது : ஹேமா - வானம் வெளித்த பின்னும்

பதில் தேடிய படி

பொன்னாத்தா [எ] பொன்னரசி

21 comments:

RAD MADHAV said...

Me the first

RAD MADHAV said...

//3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இப்போ இப்போ கொஞ்சம் கொஞ்சம் தேறிகிட்டு இருக்கு...அதுனால பிடிக்கும்...பள்ளிக் கூடம் படிக்கும் போதெல்லாம் கோழிக் கிறுக்கல் தான்.//

கோழி ரொம்ப பிடிக்கும்னு சொல்லாம சொல்லிடீங்க....
கோழி கிறுக்கல், சண்டக்கோழி.... :-)

RAD MADHAV said...

//நான் அழைப்பது : ஹேமா - வானம் வெளித்த பின்னும்//


சபாஷ், சரியான தேர்வு... வாழ்த்துக்கள்.

Anonymous said...

ரொம்ப நல்ல பதிவு. இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு. நானும் எழுதலாம்ன்ணு நினைக்கிறேன். தப்பா எடுத்துக்கொள்ளாதீர்கள். இது போன்ற பதிவை எழுத வேண்டும் என்று பல நாட்கள் நான் யோசித்தது உண்டு.

உங்கள் பதிவை பார்த்ததும் திரும்பவும் நினைவுக்கு வந்து விட்டது. நனறி சகோதிரி.

அப்புறம் ஹேமா சரியான தேர்வு.

ஹேமா said...

நிலா அம்மா,ரொம்ப நன்றி.முதல் முதலா நான் தானா...!

"எனக்குப் பிடித்தவர்கள்"ன்னு மாட்டிவிட்டு ஆதாவா கூப்பிட்டு ஒரு மாதிரி மூணு நாளா முழி பிதுங்கி வர எழுதி முடிச்சேன்.இனி இதுவா!ஆனால் சுவாரஸ்யமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.எழுதுறேன்... எழுதுறேன்.

பாருங்க நான் படும் பாட்டைப் பாக்க மாதவ் ம் ஆனந்த் ம் எவ்ளோ ஆவலா இருக்காங்க.உங்களுக்கு எடுத்துக்குடுக்கிறாங்க.ம்ம்ம்...இருங்க இருங்க இரண்டு பேரும்.
கவனிச்சுக்கிறேன்.

தொடக்கி விடுவோம் வலைகள் கலக்க "என் கேள்விக்கு என்ன பதில்?"

ஹேமா said...

நிலா அம்மா,உங்கள் முழுக் கேள்வி பதிலையும் படித்தேன்.இந்தத் தொடர் விளையாடு சும்மா இல்ல.ஒருவரது குண-மன இயல்புகளை வெளியில் கொண்டு வந்து,நிலா அம்மா இப்படித்தான் இருப்பார் என்கிற மன உளச் சாத்திரமாக இருக்கிறது.

உங்களுக்கு ஓவியம் வரையத் தெரியுமா.நிலாக்குட்டியை ஓவியமாய் நீங்களே வரையலாமே!ஒரு ஞாபகத்தின் ஓவியமாய்.

நிலாவும் அம்மாவும் said...

ஆஹா......ஹேமா.....என்னை ரொம்ப கொகக்கரின்னு நினைக்காதேங்க....ரொம்ப எல்லாம் இல்ல..கொஞ்சம் கொஞ்சம்...

என் மனசு படிச்சா மாதிரி சொல்லிட்டேங்களே..நிலாவின் ஒஅவியம் இனும் சில தினங்களில் வெளியிடப்படும்.....வேலை ஆயிக்கினே இருக்கு...

-----------------------------------

ஆனந்த்...நான் ரொம்ப நாலா போடனும்னு நினச்சு நேரம் கிடக்கமலே போயிடுச்சு...

எழுதுங்க எழுதுங்க...எழுதுகிட்டே இருங்க....[ எந்த பேனா விளம்பாறம்னு தெரியல ]

அடுத்த தொடர் பதிவு தயார் ஆயிட்டு இருக்கு....உங்களை இழுத்துடுவோம்...

-----------------------------------

மாதவ்.....தங்கு தங்கு ( நிலா பாஷையில் தேங்க்யு ]......

ஆமா ஹேமா நல்ல தேர்வு....அவங்களை பற்றிய ரகசியம் எல்லாம் வெளிய வர போகுது...ஹி ஹி
-----------------------------------

Devi An said...

அட,..பொன்னாத்தாவைத் தெரிஞ்சுக்க இன்னொரு சந்தர்ப்பம்மா :))) ரொம்ப நல்லாருக்கு பதில்கள்

அப்பவே (சண்டக்)கோழி கிறுக்கல் ஆரம்பிச்சாட்ச்சா...

ஹேமாவுக்கு நீங்க எழுதின பதில பார்த்தேன்...
What a Surprise!

நான் recenta வருண் படத்த வரைய ஆரம்பிச்சிருக்கேன் :))

நிலாவும் அம்மாவும் said...

Wow..Devi..super..we are sailing in the same boat...but there is a big hole in there...he he

RAMYA said...

சூப்பர் கேள்விகள், நான் அப்புறம் வந்து பதில்கள் எழுதுகின்றேன்
அலுவலகத்தில் ஒரே ஆணி மற்றும் கடப்பாரை.

நீங்க என்னை அழைத்தீர்களே என்னை கவர்ந்தவர்கள் அது அனேகமாக இன்று வெளியிட்டு விடுவேன் இன்று
முடியவில்லை என்றால் நாளை வரும் பார்க்கவும்.

உங்கள் கேள்வியில் சிக்கிக் கொண்ட இருவருக்கும். என் வாழ்த்துக்கள்!!!

ராசுக்குட்டி said...

அடடடா... சும்மா தட்டி கிளப்பிருக்கீங்க போங்க... எனது விரிவான பின்னூட்டத்தை சீக்கிரம் போடறேங்க.

ராசுக்குட்டி said...

அட போங்க... இந்த பதிவுக்கே இன்னும் பின்னூட்டம் போடலை... அதுக்குள்ளே நீங்க அடுத்த பதிவு (மொக்கை) போட்டாச்சு... அதுனால நான் உங்க மொக்கை கவிதை பதிவுக்கே பின்னூட்டம் போடுறேன்...

சண்டைக்கு எங்காச்சும் வந்தராதீங்க சண்டைகோழி.

மின் முகம் said...
This comment has been removed by the author.
மின் முகம் said...

அருமையான கேள்விகள், அருமையான பதில்கள்.

வழக்கமான கலை நயம், குசும்பு, நகைசுவை எல்லாத்தையும் கேள்வி பதிலையும் கொண்டு வந்துடீங்க. சுவாரஸ்யமா இருந்தது படிக்க.

தாத்தா நினைவா உங்களுக்கு பொன்னரசி-னு பேரு வைச்சதுக்கு, பொன்னுசாமி-னே வைச்சுருக்கலாம். அது உங்களுக்கு இன்னும் பொருத்தமா இருந்து இறுக்கும்.

Sri said...

// 2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நிலாவை எங்க அம்மா கூட அனுப்பி வச்சப்போ

You only have 17-19 yrs to live with you nila abd you are wasting some of them and bragging/complaining on the blog?
Think what your priorities in your life....

நிலாவும் அம்மாவும் said...

Sri said...
// 2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நிலாவை எங்க அம்மா கூட அனுப்பி வச்சப்போ

You only have 17-19 yrs to live with you nila abd you are wasting some of them and bragging/complaining on the blog?
Think what your priorities in your life....
-------------------------

Thanks for your advice Sri....
but please do not judge people without understanding the complete fact. Thanks for visiting.

RAD MADHAV said...

//தாத்தா நினைவா உங்களுக்கு பொன்னரசி-னு பேரு வைச்சதுக்கு, பொன்னுசாமி-னே வைச்சுருக்கலாம். அது உங்களுக்கு இன்னும் பொருத்தமா இருந்து இறுக்கும்//

Repeated.... :-))

RAD MADHAV said...

//10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
தற்க்காலிகமாக நிலா, எப்பொழுதும் குடும்பம்//

Absence, make shaprpen love.

நிலாவும் அம்மாவும் said...

RAD MADHAV said...
//தாத்தா நினைவா உங்களுக்கு பொன்னரசி-னு பேரு வைச்சதுக்கு, பொன்னுசாமி-னே வைச்சுருக்கலாம். அது உங்களுக்கு இன்னும் பொருத்தமா இருந்து இறுக்கும்//

Repeated.... :-))///****

அது எப்டி ...கூட்டம் போட்டு திட்டம் போடுவீங்களோ...எங்கடா யார் காலடா வாரலாம்னு...நல்ல இருங்கப்பு

Ravee (இரவீ ) said...

உங்க ஓவிய படைப்பின் ஒரு புகைபடத்தை இணைத்திருக்கலாம் .
விரைவில் எதிர்பார்க்கின்றோம்.

டக்ளஸ்....... said...

ஐ..இந்த விளையாட்டு நல்லா இருக்கு அக்கா..
பாக்கலாம் இந்த விளையாட்டு எவ்வளவு தூரம் போகுதுன்னு.....