Tuesday, March 31, 2009

காலக் கடிகாரம்... கல்லூரிக்கு -விடாது தொடர்[ கருப்பு ]

நீங்க எல்லாரும் கல்லூரி முடிச்சு ஒரு 20 வருஷம் இருக்குமா....ஒ இல்லியா...நான் கூட நீங்க வயசானவர்னு நினச்சேன்....சரி சரி ..வயசுன்னு சொன்னது தேவா காதுல புகை வருது, ஆதவா, வேத்தியன் ரெண்டு பெரும் சின்ன பசங்க.....இளவட்டம்...ஊஞ்சல் ஆடுது....ஹ்ம்ம்...நமக்கு தான் வயசாகி போச்ச்சு


சரி மக்களே....நடு செண்டர்ல நான் என்ன சொல்ல வர்றேன்னா, அப்டியே நம்ம ஊட்ல இருக்குற சுவர் கடிகாரம், கைக் கடிகாரம், செல் பேசி, கணிப்பொறி,..அட என்னத்துக்கு எல்லாத்தையும் அடுக்கிக்கிட்டு, எந்த கன்றாவி எல்லாம் நேரம் காட்டுதோ அதே எல்லாம் அப்டியே reverse gear போட்டு பின்னாடி தள்ளி மீண்டும் கல்லூரி காலத்துக்கு போனா ..."ச்சே அப்படி பண்ணிருக்கலாம்....இப்டி பன்னிருக்கலாம்னு" நீங்க நினச்சு நொந்து போன விஷயங்கள் நிறைய இருக்கலாம்...மனசுல இப்போவும் நெறிஞ்சி முள்ளா குத்திட்டு இருக்கலாம்...அப்படி எதுனா இருந்தா இங்க வந்து ஒப்பிங்க ..

யாருப்பா அது....நான் நல்ல படிச்சு முதல் ரேங்க் வாங்குவேன்னு சொல்றது....இது தான வேனாம்குறது....நம்மால தான் முடியாதுன்னு நம்ம வாய் திறந்து சொல்லாட்டியும் நெத்தில எழுதி ஒட்டிருக்கே...இதெல்லாம் ஆகாது கேசுன்னு...அதெல்லாம் வேணாம் சரியா...அதுனால சும்மா டமாசு எல்லாம் பண்ணாம என்னை மாதிரி சீரியஸா யோசிச்சு தெளிவா சொல்லணும் ..

சரி என்னோட கல்லூரி வாழ்க்கைன்னா ரெண்டு விதம்
-பொறியியல் படிச்ச கல்லூரிக்கு பேரே பால்வாடி....கல்லூரி பேரை சொல்லி கப்பல் ஏத்த மனசு வரலப்பா..விட்ருங்க....
-மேலாண்மை கல்வி படிச்ச பல்கலை கட்டுப்பாடே கிடையாது...தெளிவா சொல்லனும்னா அவுத்த விட்ட கழுதைகள் மாதிரி ...

சரி ..இப்போ மட்டும் நான் கல்லூரியில் இருந்தா .........சொய்ங் சொய்ங் ..அதான்ப்பா தலை சுத்தி அப்டியே தானே பின்னாடி போவோம்...

- குருவி, காக்கா, வவ்வால் இப்படி பறவைகள் பேரா எல்லா பசங்களுக்கும் பட்ட பேரு வச்ச நாங்க எப்டியோ மயிலுன்னு யாருக்கும் வைக்காம விட்டுடோம்...அது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்....அட அம்புட்டு கூட்டத்துல யாருக்குமேவா மயில் தோகை மாதிரி முடி இல்லாம போச்சு...- அந்த பால்வாடில நான் எழுதின apology லெட்டர் - மன்னிப்புக் கடிதம்னு சொன்ன என்னமோ ரொம்ப மோசமா இருக்குல்ல ...எப்டியும் வாரத்துக்கு ரெண்டு எழுதுவேன்....செஞ்ச தப்பு ..செய்யாத தப்பு, பக்கத்தில இருக்குறவங்க செஞ்சது செய்யது எல்லாத்துக்கும் நான் எழுதிருக்கேன்...கடைசி வருஷம் எனக்கு தியாகி பட்டம் குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன் .....இப்போ மட்டும் கல்லூரிக்கு போனா, முதல்லையே சான்றிதழ் அடிக்குற மாதிரி ஒரு நூறு லெட்டர் அடிச்சு வச்சுக்கணும்..."template" கூட யோசிச்சு வச்சுருக்கேன்....தேதி, நடந்தது என்ன ..இது மட்டும் தான் நான் எழுதனும்......எம்புட்டு நேரம் மிச்சம் ஆகும் இல்ல?

-கல்வி சுற்றுலான்னு ஒன்னு போவோம் பாருங்க.....ஒவ்வொரு இண்டஸ்ட்ரிக்கும் பசங்க கஷ்டப்பட்டு ஆள் பிடிச்சு எல்லாம் ரெடி பண்ணி வைப்பாங்க.....என்னமோ வாழ்க்கைல சிங்காரிக்க எங்களுக்கு கிடைக்குற ஒரே வாய்ப்பு சுற்றுலா மட்டும்குற மாதிரி ஒரு 10 நாளைக்கு முன்னாடியே லிப்ச்டிச்க் , சுடிதார்னு எல்லாம் கடன் வாங்க ஆம்பிச்சுடுவோம்....ஆமா ஆமா...எங்க சுடிதார் முந்தின வருஷ சுற்றுலா போட்டோல இருக்குல்ல...அதையே போட்டு மறுபடி யாரவது போட்ட எடுப்பாங்களா ? இப்போ மறுபடி சுற்றுலா போக வாய்ப்பு கிடைச்சதுன்னா, கறாரா சொல்லிடுவேன் அவங்க சுடிதார் துவச்சு குடுக்கனும்னு .....ஆமா பின்ன...எத்தனை ஒசி சுடிதார் தான் துவைக்குரது .


-தினம் 8-10.30 study hour...என்னமோ பிறந்ததே சங்கீத குடும்பம் மாதிரி 8.45-க்கு சிலோன் ரேடியோல ஒரு 3 பாட்டு போடுவான்...அதைக் கேட்டு எத்தனை தடவை என் ரேடியோ வார்டன் ரூமுக்கு போயிருக்கு தெரியுமா.....தப்பு செய்யுறது தப்பு இல்ல...ஆனா அதை தப்பாம செய்யனுமே....அதுனால இந்த தடவை மூலைக்கு மூலை "SPY" வச்சுப்பேன்

-தமிழ் மீடியத்துல இருந்து போன நமக்கு மட்டும் இல்ல நமக்கு பாடம் சொல்லித் தர்ற வாத்தியார்கள் யாருக்குமே ஆங்கிலம் சரியா தெரியாதுன்னு தெளிவா புரிஞ்சுட்டு போயிருப்பேன்...

- கெமிஸ்ட்ரி லேப்ல " ஏம்மா 12th-ல கெமிஸ்ட்ரி-ல இவ்வளவு மார்க் வாங்கிருக்கியே ..இப்போ மட்டும் ஏம்மா தப்பு தப்பா டெஸ்ட் பண்றன்னு தினம் பாட்டு பாடுற லேப் assisstant கிட்ட .." சார்..அது அப்போ...இது இப்போ- நு தலைவர் ஸ்டைல்ல டயலாக் விட்ருப்பேன்.


- திமிர் பிடிச்ச மாதிரி இருந்தா தான் பசங்க மதிப்பாங்கன்னு என் தோழி சொன்னதை தெய்வ வாக மதிச்சுருப்பேன்....பொண்ணு சிரிச்ச போச்சுன்னு இப்போ புரியுது.....அந்த கதையா ?..அது ஒரு பெரிய மலை....அதுல ஒரு குருவி...

-9மணி வகுப்புக்கு அவசர அவசரமா கிளம்பி டான்னு 9.10-க்கு போயி நின்னா கொஞ்சம் கூட யோசிக்காம " யு மே கம் டூ த நெக்ஸ்ட் கிளாஸ் " நு பல்லுல நாக்கு (!) "படமா பேசுற வாத்தியார் கிட்ட "10 நிமிஷத்துல என்னத்த பெரிசா பாடம் எடுத்திட்டீங்க...எந்த கிளாஸ்ல இருக்கோம்....என்ன சொல்லி தரணும்னு தெரியாம குழம்பி போயி தலைய தானே சொரிஞ்சுட்டு இருந்தீங்க...நாங்க அடுத்த கிளாஸ்க்கு வந்தா மட்டும் உங்களுக்கு எங்க பாடம் புரிஞ்சுடவா போகுதுன்னு கேட்ருப்பேன்


- கடைசி வரைக்கும் முதல் ஆளா பரிச்சை பேப்பர் [ பரிச்சை ஆரம்பிச்சு 5 நிமிஷம்] குடுப்பேன்....பேப்பரை வாங்கி வச்சுட்டு வெளிய போக கூடாதுன்னு உக்கார வச்சுடுவாங்க.....இப்போ தான் புரியுது..முதல்ல எந்திரிச்சா பலி கடா அப்படின்னு.....இனிமே ரெண்டாவதா பொறுமையா 10 நிமிஷம் பொறுத்து தான் பேப்பர் குடுப்பேன்

- மெக்கானிக்கல் லேப்ல பேசிக்கிட்டே இருக்குறை உன் வாய்க்கு M Seal வாங்கி போடுறேன்னு சொல்ற வாத்தியாருக்கு சார்..பழைய காலத்துல இருந்து வெளிய வாங்க..இப்போ ஸ்ட்ராங்கான க்ளு கொரில்லா க்ளு தான்னு வாங்கியே குடுத்துருப்பேன்.....

சரி இப்போ நான் 5 பேரை கல்லூரிக்கு தள்ளி விடனும்ல..அட அதான் படிக்க வேண்டாம்னு சொல்லிடோம்ல..அப்புறம் என்ன பம்முறீங்க.....
தேவாவிதிமுறை
-ஒரே ஒரு விதி முறை தான்..நீங்க தற்போது கல்லூரியில் படிப்பவராக இருக்க கூடாது...ஆமா ...இது முதியோர் கல்லூரி தான்...அட ஏன்யா நீங்க வேற..சோகத்தை துடுப்பு போட்டு கிளறிக்கிட்டு

-கற்பனைக்கு ஏது கட்டுப்பாடு..... அடிச்சு கிளப்புங்க

கடிகார முள்ளை கல்லூரிக் காலத்தில் இறுகப் பிடித்தபடி ,,,,,
பொன்னாத்தா

81 comments:

நட்புடன் ஜமால் said...

ஆத்தா

நான் பாஸாயிட்டேன் ...

நட்புடன் ஜமால் said...

\\நடு செண்டர்ல நான் என்ன சொல்ல வர்றேன்னா,\\

ஏன் ஆத்தா!

நட்புடன் ஜமால் said...

\\இப்போவும் நெறிஞ்சி முள்ளா குத்திட்டு இருக்கலாம்...\\

அட ஆமாங்க!

ஒரு ஃபிகரு கைவிட்டு போச்சி

அதான் ரொம்ப வருத்தமாக்கீது

நிலாவும் அம்மாவும் said...

வாங்க வாங்க

பாஸ் ஆயிட்டீங்களா...எந்த மடயன் பேப்பர் திருத்தினான்

நிலாவும் அம்மாவும் said...

நட்புடன் ஜமால் said...
\\இப்போவும் நெறிஞ்சி முள்ளா குத்திட்டு இருக்கலாம்...\\

அட ஆமாங்க!

ஒரு ஃபிகரு கைவிட்டு போச்சி

அதான் ரொம்ப வருத்தமாக்கீது
/////

அடடடா .....நெறிஞ்சி முள்ளா

நட்புடன் ஜமால் said...

\\பாஸ் ஆயிட்டீங்களா...எந்த மடயன் பேப்பர் திருத்தினான்\\

நல்லவருங்க

நட்புடன் ஜமால் said...

\\அடடடா .....நெறிஞ்சி முள்ளா\\

ஆமாங்க

ரொம்ப பீலீங்க்ஸ்

ஆனாலும் சுகமான முள்ளு தான் போல

நட்புடன் ஜமால் said...

\\அவுத்த விட்ட கழுதைகள் மாதிரி ...\\

ஹா ஹா ஹா

ஏன் இன்று உண்மைகள் சொல்லனுமுன்னு ஏதும் முடிவா

நட்புடன் ஜமால் said...

\\தியாகி பட்டம் குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன்\\

ஆத்தா!

தியாகி ஆத்தா வாழ்க வாழ்க

நட்புடன் ஜமால் said...

\\"template" கூட யோசிச்சு வச்சுருக்கேன்....தேதி, நடந்தது என்ன ..இது மட்டும் தான் நான் எழுதனும்......எம்புட்டு நேரம் மிச்சம் ஆகும் இல்ல?\\

கல்லூரி அலுமினி கிடைக்கும்

கண்டு பிடிச்சி போடுங்க

நட்புடன் ஜமால் said...

\\கைல சிங்காரிக்க எங்களுக்கு கிடைக்குற ஒரே வாய்ப்பு சுற்றுலா மட்டும்குற மாதிரி ஒரு 10 நாளைக்கு முன்னாடியே லிப்ச்டிச்க் , சுடிதார்னு எல்லாம் கடன் வாங்க ஆம்பிச்சுடுவோம்.\\

அப்பத்துலேர்ந்தேவா!

நட்புடன் ஜமால் said...

கோழி வருது சண்டை போட

ஓடிடு ........................

நட்புடன் ஜமால் said...

ஆனாலும் மாட்டிக்கிட்டமா!

குடந்தைஅன்புமணி said...

//கடைசி வருஷம் எனக்கு தியாகி பட்டம் குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன் .....//

பென்ஸன் எல்லாம் வருதா?

Anonymous said...

கல்லூரி நினைவுகள் தொடர் பதிவா? அசத்துறீங்க போங்க. எப்டிங்க உங்களுக்கு மட்டும் இவ்வளவு அழகான தலைப்பா கிடைக்குது?
//
சரி இப்போ நான் 5 பேரை கல்லூரிக்கு தள்ளி விடனும்ல..அட அதான் படிக்க வேண்டாம்னு சொல்லிடோம்ல..
//
ஆனா இப்போம் செமஸ்டர் நேரமாச்சே? எக்சாம் அது இதுன்று சொல்லக்கூடாது.

Anonymous said...

அழைப்புக்கு நன்றி அம்மா. விரைவில் எழுதுகிறேன்.

புல்லட் பாண்டி said...

//கல்வி சுற்றுலான்னு ஒன்னு போவோம் பாருங்க.....ஒவ்வொரு இண்டஸ்ட்ரிக்கும் பசங்க கஷ்டப்பட்டு ஆள் பிடிச்சு எல்லாம் ரெடி பண்ணி வைப்பாங்க.....என்னமோ வாழ்க்கைல சிங்காரிக்க எங்களுக்கு கிடைக்குற ஒரே வாய்ப்பு சுற்றுலா மட்டும்குற மாதிரி ஒரு 10 நாளைக்கு முன்னாடியே லிப்ச்டிச்க் , சுடிதார்னு எல்லாம் கடன் வாங்க ஆம்பிச்சுடுவோம்../

ஹிஹி! அங்கேயுமா?

நல்ல பதிவு! :)

RAD MADHAV said...

//நீங்க எல்லாரும் கல்லூரி முடிச்சு ஒரு 20 வருஷம் இருக்குமா....ஒ இல்லியா...நான் கூட நீங்க வயசானவர்னு நினச்சேன்..//

திருப்பி விடருதுனு கேள்விபட்டுருப்பீன்களே:-) அது இதுதான்..
இது உங்களபாத்து நாங்க கேக்குற கேள்வி :-))

RAD MADHAV said...

//அதே எல்லாம் அப்டியே reverse gear போட்டு பின்னாடி தள்ளி மீண்டும் கல்லூரி காலத்துக்கு போனா ..."ச்சே அப்படி பண்ணிருக்கலாம்....இப்டி பன்னிருக்கலாம்னு" நீங்க நினச்சு நொந்து போன விஷயங்கள் நிறைய இருக்கலாம்...மனசுல இப்போவும் நெறிஞ்சி முள்ளா குத்திட்டு இருக்கலாம்..//

அருமை. கல்லூரி நினைவுகளை ரிவைண்ட் செய்வது என்பது நம்முடன் ஊறிப்போன ஒன்று. மறக்க முடியுமா அவ்வளவு எளிதில்.

RAD MADHAV said...

//.ஹ்ம்ம்...நமக்கு தான் வயசாகி போச்ச்சு//
எப்படிங்க இது... உண்மைய இவ்வளவு சுலபமா பப்ளிக்கா சொல்றீங்க??? :-)

RAD MADHAV said...

//அதுனால சும்மா டமாசு எல்லாம் பண்ணாம என்னை மாதிரி சீரியஸா யோசிச்சு தெளிவா சொல்லணும் ..//

இதுதான் சூப்பர் டமாசு... :-)

RAD MADHAV said...

//சரி என்னோட கல்லூரி வாழ்க்கைன்னா ரெண்டு விதம் -//

சரிதான். அட்மிஷனுக்கு முன்னாலே. அப்புறம் பெயிலானதுக்கு பின்னாலே .... சரிதானுங்களா? :-)))

RAD MADHAV said...

//அவுத்த விட்ட கழுதைகள் மாதிரி ...//குருவி, காக்கா, வவ்வால்,மயிலுன்னு//

உண்மைய சொல்லுங்க... நீங்க மேனகா காந்தி கட்சி தானே :-)

RAD MADHAV said...

//தப்பு செய்யுறது தப்பு இல்ல...ஆனா அதை தப்பாம செய்யனுமே.//

Arumai. Arumai. Arumai.

RAD MADHAV said...

Me the 25th. 'Quarter' Century. :-)

தீஷு said...

உங்க எழுத்து நடை நல்லாயிருக்கு பொன்னாத்தா.. படிக்க இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு.

Truth said...

சூப்பர். :-)

ராசுக்குட்டி said...

அட்ரா சக்கை... அட்ரா சக்கை...

ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்லை... நீங்க கலக்குங்க சண்டைகோழி... எப்படி தான் நேரம் கிடைக்குதோ உங்களுக்கு.... சூப்பரா எழுதிருக்கீங்க. கல்லூரி நினைவுன்னாலே அருமை தான்... நல்லா கொசுவர்த்தி சுத்த வைச்சுட்டீங்க.

ஆனா நான் என்னமோ, கல்லூரியை விட பள்ளியிலே தான் ரொம்ப அனுபவிச்சுருக்கேன். அனுபவம் பல வகை... ஒவ்வொன்றும் ஒரு வகை. கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்தா என்னோட அனுபவம் வேற மாதிரி இருந்திருக்குமோ என்னமோ.

வேத்தியன் said...

ஐ ஜாலியா கீதே....
படிச்சுட்டு வரேன்...

வேத்தியன் said...

குஜாலா கீது...
நம்மளா மாதிரி தான் நிலாவோட அம்மாவும்...

வேத்தியன் said...

வயசுன்னு சொன்னது தேவா காதுல புகை வருது, //

இது வேறயா???

வேத்தியன் said...

ஆதவா, வேத்தியன் ரெண்டு பெரும் சின்ன பசங்க.....இளவட்டம்...ஊஞ்சல் ஆடுது....ஹ்ம்ம்...நமக்கு தான் வயசாகி போச்ச்சு//

ஆதாவா கமோன் எஞாய் தி பார்ட்டி...
ஐ நாம சின்னப் பசங்களாம்ல...
சந்தோஷம் தான்...

வேத்தியன் said...

நடு செண்டர்ல நான் என்ன சொல்ல வர்றேன்னா,//

நீங்க மேஜர் சுந்தர்ராஜன் கிட்ட க்ளாஸ் எதுவும் போனீங்களோ???
:-)

வேத்தியன் said...

மேலாண்மை கல்வி படிச்ச பல்கலை கட்டுப்பாடே கிடையாது...தெளிவா சொல்லனும்னா அவுத்த விட்ட கழுதைகள் மாதிரி ...//

யூ மீன் டாங்கீஸ்???
அய்யய்யோ...

வேத்தியன் said...

கல்வி சுற்றுலா எத்தினை நாள் போனாலும் நமக்கு ப்ராப்ளமே இல்லைங்க...
எத்தினை நாளானாலும் ஒரே டெனிமும் ஒரே ஒரு த்ரீ குவார்ட்டரும் தான் கொண்டு போவோம் நாம...
ஒரு டீ-சேர்ட்...
அவ்ளோ தான்...
:-)
தோய்க்குற செலவு மிச்சம் பாருங்க...

thevanmayam said...

கல்லூரியில நடந்ததா? நெனச்சிக்கிட்டே இருந்தேன்!!!

thevanmayam said...

இது நான் போட்டா கொஞ்சம் தேனீர் மாதிரி 50 பதிவுக்கு மேலே தாண்டுமே?

thevanmayam said...

ஓகே!! ஓகே !!! எப்படியோ கோர்த்து விட்டுட்டீங்க!

thevanmayam said...

ஜமாலுக்கு 10 வரி ----------------க்கே பாஸ் குடுத்திருப்பாங்க ஆத்தா!!

வேத்தியன் said...

நீங்களாவது 9 க்ளாசுக்கு 9.10க்கு போனீங்க...
நாம எல்லாம் 9 க்ளாஸ்னா சரியா சொல்லி வச்சா மாதிரி 9.30 தாண்டி தான் அட்டென்டென்ஸ் வைப்போம்...
பன்ச்சுவாலிட்டியை நம்ம கிட்ட தான் கத்துக்கனும்...

வேத்தியன் said...

நல்ல முயற்சி தான்...
:-)

வேத்தியன் said...

thevanmayam said...

இது நான் போட்டா கொஞ்சம் தேனீர் மாதிரி 50 பதிவுக்கு மேலே தாண்டுமே?//

அதுக்குப் பேர் கொஞ்சம் தேநீர் இல்ல..
ரொம்ப தேநீர்...
:-)

thevanmayam said...

ஆதவா, வேத்தியன் ரெண்டு பெரும் சின்ன பசங்க.....இளவட்டம்...ஊஞ்சல் ஆடுது....ஹ்ம்ம்...நமக்கு தான் வயசாகி போச்ச்சு//

ஆதாவா கமோன் எஞாய் தி பார்ட்டி...
ஐ நாம சின்னப் பசங்களாம்ல...
சந்தோஷம் தான்..///

பசங்க இப்பவே ரொம்பத் தெளிவுங்கோ!!

ஆதவா said...

ஆதாவா கமோன் எஞாய் தி பார்ட்டி...
ஐ நாம சின்னப் பசங்களாம்ல...
சந்தோஷம் தான

இருக்காதா பின்னே!!! Lets enjoy the party.. at பொன்னாத்தா'ஸ் வீடு!

அப்படியே கொஞ்சம் பின்னாடி போய் கல்லூரியில படிச்சாப்ல இருக்குனு சொன்னா நீங்க நம்பாதீங்க. (இன்னிக்கி ஏப்ரல் 1) ஏன்னா, நான் கல்லூரியை தியேட்டர்லதா பார்த்தேன்!! (அது சினிமா!)

எப்படியோ, நம்மளை இளவட்டம்னு ஒத்துகிட்ட பொன்னாத்தாவுக்கு ஒரு ஓ!

நிலாவும் அம்மாவும் said...

@ நட்புடன் ஜமால் said...
கோழி வருது சண்டை போட

ஓடிடு ........................
////////
அது ....கோழி முட்டும்ல

---------------

நட்புடன் ஜமால் said...
\\கைல சிங்காரிக்க எங்களுக்கு கிடைக்குற ஒரே வாய்ப்பு சுற்றுலா மட்டும்குற ///////

அப்பத்துலேர்ந்தேவா!
////////

ஹி ஹி...பிறந்ததுல இருந்தே அம்மா கண்மை பவுடர் எல்லாம் போட்டு கத்து குடுத்துட்டாங்க .....

நிலாவும் அம்மாவும் said...

குடந்தைஅன்புமணி said...
//கடைசி வருஷம் எனக்கு தியாகி பட்டம் குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன் .....//

பென்ஸன் எல்லாம் வருதா?
/////////////////

அது வச்சு தான் தம்பி தினம் ஒரு வேலை கஞ்சி குடிக்குறேன்

நிலாவும் அம்மாவும் said...

@கடையம் ஆனந்த் said...
கல்லூரி நினைவுகள் தொடர் பதிவா? அசத்துறீங்க போங்க. எப்டிங்க உங்களுக்கு மட்டும் இவ்வளவு அழகான தலைப்பா கிடைக்குது?
///////////

அலுவலகத்துல மீட்டிங்க்னு ஒன்னு வைக்குறாங்களே.....அது எதுக்கு....நம்ம கற்ப்பனை குதிரை அப்போ தான் வேகமா ஓடும்

நிலாவும் அம்மாவும் said...

புல்லட் பாண்டி said...
//ஹிஹி! அங்கேயுமா?

நல்ல பதிவு! :)
/////

எங்கேயும் சிவ மயம்......ஹி ஹி ....
நன்றி

நிலாவும் அம்மாவும் said...

RAD MADHAV said...

திருப்பி விடருதுனு கேள்விபட்டுருப்பீன்களே:-) அது இதுதான்..
இது உங்களபாத்து நாங்க கேக்குற கேள்வி :-))//////
------------
RAD MADHAV said...
//.ஹ்ம்ம்...நமக்கு தான் வயசாகி போச்ச்சு//
எப்படிங்க இது... உண்மைய இவ்வளவு சுலபமா பப்ளிக்கா சொல்றீங்க??? :-)

1/4/09
/////////////////
நான் எப்பயும் இப்டித்தான்.....அரிச்சந்திரன் பரம்பரை
/////////////////////

நிலாவும் அம்மாவும் said...

50

நிலாவும் அம்மாவும் said...

தீஷு said...
உங்க எழுத்து நடை நல்லாயிருக்கு பொன்னாத்தா.. படிக்க இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு.

//////////

வாங்க தீஷும்மா ...பிரயாணம் எல்லாம் நல்லா இருந்துச்சா.....நம்ம ஊர்ல வெயில் அடிச்சு கிளப்புதுன்னு கேள்வி பட்டேன்.....
வருகைக்கு நன்றி

நிலாவும் அம்மாவும் said...

@ Truth

வாங்க .....நல்லா இருக்கீங்களா ...நாக வள்ளி எப்டி இருக்காங்க

-------------------------------
@ ராசுக் குட்டி.......பதிவு போட்ட நேரம் நாடு சாமம் ௧ மணி......அப்போ எல்லாம் சமைக்க வேண்டாம், அலுவலக வேலை பார்க்க வேணாம்....இது ரொம்பா நாலா எழுதனும்னு நினச்சு தள்ளி போட்டுட்டே இருந்தேன்

என்னோட பள்ளி காலம் கூட மறக்க முடியாத காலம்...அது பின்னாடி போயி அனுபவிப்பேன் தவிர, மாத்த மாட்டேன்

நிலாவும் அம்மாவும் said...

வேத்தியன் said...
எத்தினை நாளானாலும் ஒரே டெனிமும் ஒரே ஒரு த்ரீ குவார்ட்டரும் தான் கொண்டு போவோம் நாம...
////////////

கொஞ்சம் 10 அடி தள்ளி நில்லுங்க

நிலாவும் அம்மாவும் said...

thevanmayam said...
ஓகே!! ஓகே !!! எப்படியோ கோர்த்து விட்டுட்டீங்க!
/////////////////

வேற பொழப்பு ?

நிலாவும் அம்மாவும் said...

ஆதவா said...

இருக்காதா பின்னே!!! Lets enjoy the party.. at பொன்னாத்தா'ஸ் வீடு!
///////////////

டிக்கட் அனுப்புறேன்...வந்துருங்க

நட்புடன் ஜமால் said...

\\thevanmayam said...

ஜமாலுக்கு 10 வரி ----------------க்கே பாஸ் குடுத்திருப்பாங்க ஆத்தா!!
\\

ஹா ஹா ஹா

Suresh said...

duck pathivula unga pinnotam parthu romba raichan ... athan unga pathiva parkka vanthutaen.. romab arumaiya eluthuringa...

Suresh said...

//யாருப்பா அது....நான் நல்ல படிச்சு முதல் ரேங்க் வாங்குவேன்னு சொல்றது....இது தான வேனாம்குறது....நம்மால தான் முடியாதுன்னு நம்ம வாய் திறந்து சொல்லாட்டியும் நெத்தில எழுதி ஒட்டிருக்கே...//

ha ha nan enga teacher a correct pani irupaen .. appo ellathayum thozhia akkava parthutaen...

aana nalla pottam :-) aatam nan arrear kanu sonna unga kozhi sethupoidum ... one short for 50 BE than..

Suresh said...

paal vadiya he he ana enna paal uthuvangala .. nalla irukae peru .. unga pathivu nalla nagaichuvai ... kalakunga..

Suresh said...

ponnunga pinadi sutha kudathu endru enga vutula sollluvanga .. paravillai ..unga pinadi suthuran athanga.. follower ayutan

sakthi said...

நீங்க எல்லாரும் கல்லூரி முடிச்சு ஒரு 20 வருஷம் இருக்குமா....ஒ இல்லியா.

athu aachunga oru 20 k kum mela

sakthi said...

nalla pathivu

hahahaha

sakthi said...

வேத்தியன் said...
எத்தினை நாளானாலும் ஒரே டெனிமும் ஒரே ஒரு த்ரீ குவார்ட்டரும் தான் கொண்டு போவோம் நாம...
////////////

கொஞ்சம் 10 அடி தள்ளி நில்லுங்க

hahahahaha

sakthi said...

குருவி, காக்கா, வவ்வால் இப்படி பறவைகள் பேரா எல்லா பசங்களுக்கும் பட்ட பேரு வச்ச நாங்க எப்டியோ மயிலுன்னு யாருக்கும் வைக்காம விட்டுடோம்...அது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்....அட அம்புட்டு கூட்டத்துல யாருக்குமேவா மயில் தோகை மாதிரி முடி இல்லாம போச்சு...

varuthamana vishayam than

hahahhaha

gayathri said...

nalla than eluthi irukenga akka

gayathri said...

குருவி, காக்கா, வவ்வால் இப்படி பறவைகள் பேரா எல்லா பசங்களுக்கும் பட்ட பேரு வச்ச நாங்க எப்டியோ மயிலுன்னு யாருக்கும் வைக்காம விட்டுடோம்...அது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்....அட அம்புட்டு கூட்டத்துல யாருக்குமேவா மயில் தோகை மாதிரி முடி இல்லாம போச்சு...

ithekellam fell panna kudathu pa

Muniappan Pakkangal said...

Eppadi ithanai naal intha patiiva naan paakkama vitten.Nalla pathivu.Your time machine,your paalvaadi,ur mannippu kaditham,u've had excellent days.

RAD MADHAV said...

//தேவா

ஜமால்

பூர்ணிமா

கடையம் ஆனந்த்
மாதவ்//

முதல் நான்கு பேரை எனக்கு தெரியும். ஐந்தாவது ஆள்... யாருங்க அவரு....பேரு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு????? :-)))

நிலாவும் அம்மாவும் said...

RAD MADHAV said...

முதல் நான்கு பேரை எனக்கு தெரியும். ஐந்தாவது ஆள்... யாருங்க அவரு....பேரு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு????? :-)))
///////////

ஒ..அவரா?...அவர் நல்லவரு வல்லவரு பதிவுலகத்துக்கு உளைச்ச உத்தமரு

நிலாவும் அம்மாவும் said...

Muniappan Pakkangal said...
Eppadi ithanai naal intha patiiva naan paakkama vitten.Nalla pathivu.Your time machine,your paalvaadi,ur mannippu kaditham,u've had excellent days.
////////////////
என்னது excellent days?..நொந்து போயி பழி வாங்க போறேன்னு சொல்றேன்...நீங்க வேற...ஹி ஹி
வருகைக்கு நன்றி

நிலாவும் அம்மாவும் said...

gayathri said...

ithekellam fell panna kudathu pa
///////////

முடியலியேம்மா..... :0)

வாங்க ..நல்ல இருக்கீங்களா

நிலாவும் அம்மாவும் said...

Suresh said...
ponnunga pinadi sutha kudathu endru enga vutula sollluvanga .. paravillai ..unga pinadi suthuran athanga.. follower ayutan
//////////////////

வாங்க சுரேஷ்....பின்னாடி சுத்த போறீங்களா?என்னோடமுந்தைய பதிவு படிச்சு பாருங்க.....ஹி ஹி...

நிலாவும் அம்மாவும் said...

sakthi said...
nalla pathivu

hahahaha
//////////

வாங்க சக்தி நல்ல சிரிச்சுட்டு போயிருக்கேங்க போல இருக்கே
என் பொழைப்பு சிரிப்பா சிரிக்கு

Sasirekha Ramachandran said...

yr way of writting is superb!i like it very much.and also i've seen yr paintings in orkut.awesome pictures.y dont u publish here?

சந்தனமுல்லை said...

hi..orkut-la paartheengalaa..unga profile peru enna..therinja add reqest anupi irupeney?!! :( neengalavathu hallo solli irukalamay rey!

ivingobi said...

நான் நல்ல படிச்சு முதல் ரேங்க் வாங்குவேன்னு சொல்றது....இது தான வேனாம்குறது....நம்மால தான் முடியாதுன்னு நம்ம வாய் திறந்து சொல்லாட்டியும் நெத்தில எழுதி ஒட்டிருக்கே...இதெல்லாம் ஆகாது கேசுன்னு...அதெல்லாம் வேணாம் சரியா... Sariiiii vidunga ithellam periya matter a ? Naama ellam appdi thaan.........

ivingobi said...

9மணி வகுப்புக்கு அவசர அவசரமா கிளம்பி டான்னு 9.10-க்கு போயி நின்னா கொஞ்சம் கூட யோசிக்காம " யு மே கம் டூ த நெக்ஸ்ட் கிளாஸ் " நு பல்லுல நாக்கு (!) "படமா பேசுற வாத்தியார் கிட்ட "10 நிமிஷத்துல என்னத்த பெரிசா பாடம் எடுத்திட்டீங்க...எந்த கிளாஸ்ல இருக்கோம்....என்ன சொல்லி தரணும்னு தெரியாம குழம்பி போயி தலைய தானே சொரிஞ்சுட்டு இருந்தீங்க...நாங்க அடுத்த கிளாஸ்க்கு வந்தா மட்டும் உங்களுக்கு எங்க பாடம் புரிஞ்சுடவா போகுதுன்னு கேட்ருப்பேன்...

உங்க பதிவுல நான் விழுந்து விழுந்து சிரித்த இடம் இது தான்....
சத்தம் போடாம எனக்கு மருந்துக்கு காசு குடுத்துடுங்க.... சொல்லிப்புட்டேன் ஆமா...
அப்புறம் இந்த பதிவுக்கு வர்ரவங்க‌ கண்டிப்பா வயிறு புண்ணாகுறது மட்டும் நிஜம்.....

நிலாவும் அம்மாவும் said...

ivingobi said...


உங்க பதிவுல நான் விழுந்து விழுந்து சிரித்த இடம் இது தான்....
சத்தம் போடாம எனக்கு மருந்துக்கு காசு குடுத்துடுங்க.... சொல்லிப்புட்டேன் ஆமா...
அப்புறம் இந்த பதிவுக்கு வர்ரவங்க‌ கண்டிப்பா வயிறு புண்ணாகுறது மட்டும் நிஜம்...../////////

இது என்ன வம்பா போச்சு...
சரி வீட்ல கொஞ்சம் பேதி மாத்திரை இருக்கு அனுப்பி வைக்கட்டா

நிலாவும் அம்மாவும் said...

Sasirekha Ramachandran said...

yr way of writting is superb!i like it very much.and also i've seen yr paintings in orkut.awesome pictures.y dont u publish here?
/////////////

ஆஹா....இதுலயும் போடணுங்க சசி.....வந்ததுக்கும் வாழ்த்தினதுக்கும் நன்றி

பிரியமுடன் பிரபு said...

////
நீங்க எல்லாரும் கல்லூரி முடிச்சு ஒரு 20 வருஷம் இருக்குமா....ஒ இல்லியா...நான் கூட நீங்க வயசானவர்னு நினச்சேன்....
////

ய்யாரப்பாத்து என்ன கேள்வி கேட்டுபுட்டீங்க
அனக்க்கு வயசே 20 தான்

Poornima Saravana kumar said...

விரைவில் போடுகிறேன்....