Thursday, March 26, 2009

சவலை பாஞ்சுடுச்சு!!

ஜீவன் வீட்டுக்குள் நுழைவது கூட தெரியாமல் , பிறை கம்ப்யூட்டரில் மூழ்கி இருந்தாள்.


ஜீவன் அவளருகில் போய் மெதுவாய் அவள் தலையைக் கோதவும், திடுக்கிட்டு திரும்பிய அவள், அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு மீண்டும் கனிப்பொறியை பார்த்து திரும்பினாள்.


ஜீவனுக்கு சற்றே வித்தியாசமான அனுபவம் இது. இவன் மாலையில் வீடு வந்து சேரும் முன் எப்படியும் பத்து முறையாவது இவனது செல் பெசி பிறையின் புகைப்படத்துடன் அதிர்ந்து விடும். வேலை அதிகம் இல்லாவிடில் இவனும் தவறாமல் அவளுடன் பேசி விடுவான்.


கடந்த சில நாட்களாக அதிகம் போன் செய்வது இல்லை.வீட்டுக்கும் வந்தாலும் பிறை அதிகம் பேசாமல் எதையோ யோசித்தபடியே இருந்தது ஜீவனுக்கு வேறுபட்டுத் தெரிய வில்லை.


ஜீவன் வந்ததும் விழுந்து விழுந்து கவனிக்கும் இவள் இன்று முகம் கூட குடுத்துப் பேசாதது ஜீவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் குடுத்தது.

அவள் கையைப் பிடித்து இழுத்து வரவெற்பறைக்கு கூட்டி வந்தான்.
பொதுவான குசலம் விசாரிப்பு நடந்தது.


ஜீவன் வரும் வாரம் அலுவலுக்காக வெளியூர் செல்ல‌ வேண்டிய‌ த‌க‌வ‌லையும் சொன்னான்.

அத‌ன் பின் ந‌ட‌ந்த‌ உரையாடல்....

ஜீவ‌ன்: அப்புற‌ம், உங்க‌ம்மா கிட்ட‌ பேசினியா ?


பிறை: இல்லீங்க‌..என‌க்கு நேர‌ம் கிடைக்க‌ல‌...[ நேர‌ம் கிடைக்க‌ல‌யா...அம்மா கூட‌ 2 ம‌ணி நேர‌ம் பேசுவதைத் தவிர‌ இவ‌ளுக்கு வேறு வேலை கிட‌யாதே..ம‌த்த‌ வேலை எல்லாம் வேலைக்காரி தானே செய்வா]




ஜீவ‌ன் : ஏன்? ச‌ரோஜா வ‌ர‌லியா?


பிறை: வ‌ந்தாளே...சாய‌ந்த‌ர‌ம் இருந்து பாத்திர‌ம் க‌ழுவிட்டு போறென்னு சொன்னா....நான் தான் ம‌திய‌மே போக‌ சொல்லிட்டேன்.[த‌னியா வீட்ல‌ இருந்தா பைத்திய‌ம் பிடிக்குற‌ மாதிரி இருக்குன்னு சொன்ன‌துனால‌ தான் அதிக‌மா ச‌ம்ப‌ள‌ம் குடுத்து ச‌ரோஜாவை சாய‌ந்திர‌ம் வ‌ரை இருக்க‌ வைத்தான்]


இவ‌ன் யோசிச்சுட்டு இருக்கும் போதே பிறை தொட‌ர்ந்தாள்

பிறை: ஏங்க‌ என்னை இப்போ 4 பேரு ஃபாலோவ் ப‌ன்றாங்க‌ங்க‌...

ஜீவ‌ன்: என்ன‌து....4 பேரு ஃப‌லோவ் ப‌ன்றாங்க‌ளா?.என்ன‌ த‌ங்க‌ம் சொல்ற‌? எங்க‌ போன‌? த‌னியா போனியா?யாரு அவ‌ங்க‌?சுத்தி யாரும் இல்லியா? என்ன‌ ஆச்சு..என‌க்கு ஏன் போன் ப‌ன்ன‌லை ?

பிறை:நான் எங்க‌ போற‌து? நீங்க‌ இல்லாம நான் எங்க‌ போயிருக்கேன்...எங்க‌யும் போக‌லீங்க‌


ஜீவ‌ன்:அப்புற‌ம் உன்னை யாரு எங்க‌ ஃபாலோவ் ப‌ன்னாங்க‌?


பிறை: அட‌ இருங்க‌....சொல்லி முடிச்சுக்க‌றேன்....இது வ‌ரைக்கும் யாருமே க‌ன்டுக்க‌வே இல்லியா....என‌க்கு ரொம்ப‌ க‌ஷ்டமா இருந்துச்சு.....இப்போ தான் ஃஃபாலோவ் ப‌ன்றாங்க‌.....என‌க்கு என்ன‌மோ பெரிசா சாதிச்ச‌ மாதிரி இருக்குங்க‌


ஜீவ‌ன் முடிவே செஞ்சுட்டான்....த‌னியா இருக்குற‌ பிறைக்கு என்ன‌மோ ஆயிடுச்சுன்னு..


தொட‌ர்ந்தாள் பிறை...


பிறை : அந்த‌ 4 பேரும் தின‌ம் வ‌ந்துடுறாங்க‌ங்க‌....நான் ஏதொ சொல்ல‌ அவ‌ங்க‌ ஏதொ சொல்ல‌ என்னைச் சுத்தி சுத்தி கும்மி அடிக்குறாங்க‌...

ஜீவ‌னுக்கு நிஜ‌மாக‌வே த‌லை சுத்திய‌து....

இவ‌ள் சொல்வ‌தையெல்லாம் ஜீவ‌ன் ஆர்வ‌மாய் கேப்ப‌தாய் எண்ணிக் கொண்டு பிறை தொட‌ர்ந்தாள்

பிறை: முக‌ம் தெரியாத‌ ஆளுங்க‌ ந‌ம்ம‌ளை பாராட்டும் போது ச‌ந்தோஷ‌மா இருக்குங்க‌...அவ‌ங்க‌ சொல்ற‌ க‌மென்ட் எல்லாம் நிறைய‌ ஊக்க‌ம் குடுக்குது...


ஜீவ‌ன்: என்ன‌து க‌மென்ட்டா ?

பிறை: ஆமாங்க‌...சில‌ர் ந‌ல்லாருக்குன்னு சொல்லுவாங்க‌...சில‌ர்..அது கொஞ்ச‌ம் மாத்தினா ந‌ல்லா இருக்கும்னு சுட்டிக் காட்டுவாங்க‌....அதுனால‌ நானும் இப்போ ம‌த்த‌வ‌ங்க‌ எல்லாம் என்ன‌ ப‌ன்றாங்க‌...நான் எப்டி இன்னும் ந‌ல்லா ப‌ண்ண‌லாம்னு இன்டெர்னெட்ல‌ நிறைய‌ ப‌டிக்குறேங்க‌...


முடிய‌ல‌ம்மா?....நினைத்துக் கொண்ட‌ ஜீவ‌ன்..


ஜீவ‌ன்: பிறை... நீ சொல்ற‌து எதுவுமே என‌க்கு விள‌ங்க‌லை...கொஞ்ச‌ம் தெளிவா சொல்லு கண்ணு....


பிறை....ஏங்க‌...இது கூட‌வா புரிய‌ல‌...நான் கொஞ்ச‌ நாளா ப‌திவு எழுதுறென்ல‌.... "என் ஜீவ‌ன்" அப்ப‌டீன்னு....அது தாங்க‌.. நான் எழுதுற‌து ந‌ல்லா இருக்குன்னு 4 பேரு ஃபாலோவ் ப‌ன்றாங்க‌....க‌மென்ட் மாத்தி க‌மென்ட் போடுறாங்க‌ ப‌திவுக்கு....நிறைய‌ க‌மென்ட் போடுற‌துக்கு பேரு தான் கும்மி அடிக்குற‌து....


ஜீவ‌ன்: அடியே..என் செல்ல‌க் கிறுக்க‌ச்சி ,,,இதை தெளிவா சொல்ல மாட்டியா, வ‌ர‌ வ‌ர‌ என் கூட‌ பேசாம‌ எப்போ பார்த்தாலும் க‌ம்ப்யுட்ட‌ரைக் க‌ட்டிக்குட்டு அழுதுட்டு இருக்கியே...பைத்திய‌ம் பிடிச்சு போச்சு,,,,கீழ்ப்பாக்க‌த்துல‌ வீடு பார்க்க‌னுமோன்னு நினைச்சேன்...


பிறை:..ம்க்க்ம்...நான் புதுசா எதுவும் பண்ணிட்டா பொறுக்காதே ..



சில‌ வார‌ங்க‌ள் க‌ழித்து....


பிறை அவ‌ளுடைய‌ ப‌திவுக்கு வ‌ந்த‌ க‌மென்ட் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். த‌ன்னையே சுற்றி வ‌ந்த‌ ஆசை ம‌னைவிக்கு வெறொரு விஷ‌ய‌த்திலும் ஆர்வ‌ம் வ‌ந்த‌தைப் பொறுக்க‌ முடிய‌ வில்லை ஜீவ‌னால்..


ஜீவ‌ன்: பிறை,....உன‌க்கு ஒரு செய்தி தெரியுமா?....ல‌ன்ட‌ன்ல‌ ஒருத்த‌ன் அவ‌னோட‌ மனைவி பொழுத‌ன்னிக்கும் "Face Book" பார்த்தாங்குற‌துக்காக‌ அவ‌ளை விவாக‌ர‌த்து ப‌ன்னிட்டானாம்....


பிறை:...அதுக்கு என்ன‌வாம் இப்போ? விவாக‌ர‌த்து ப‌ன்ன‌னும்னு நின‌ச்சுட்டா அதுக்கு கார‌ண‌ம் தேவையா?.....


ஜீவ‌ன்: ஆமா....இப்போ உன்னை எடுத்துக்கோ...முன்ன‌ எல்லாம் நான் வ‌ர‌ முன்னாடி வாச‌ல்ல‌ வ‌ந்து காத்து இருப்ப‌....இப்போ நான் வ‌ந்த‌ பிற‌கும் கூட‌ கண்டுக்காம‌ க‌ம்ப்யுட்ட‌ர்ல‌ தான் க‌ண்ணா இருக்க‌..


பிறைக்கு புரிந்த‌து....க‌ண‌வ‌னுக்கு ச‌வ‌லை பாஞ்சுடுச்சுன்னு.....


[ ச‌வ‌லை: இர‌ன்டாவ‌து குழ‌ந்தைக்கு அதிக‌ க‌வ‌ன‌ம் செலுத்தினால் முத‌ல் குழ‌ந்தை ஏங்கி மெலிந்து விடும்...]

பொன்னாத்தா க‌தை எழுதிட்டா....பொன்னாத்தா க‌தை எழுதிட்டா
ச‌வ‌லை பாய்ந்த‌ பிள்ளையை தாலாட்டிய‌ப‌டி

பொன்னாத்தா

32 comments:

நட்புடன் ஜமால் said...

எங்கே!

நட்புடன் ஜமால் said...

ஆரம்பமே புரிஞ்சிடிச்சி

\\ஏங்க‌ என்னை இப்போ 4 பேரு ஃபாலோவ் ப‌ன்றாங்க‌ங்க‌...\\

இங்கே சிரிச்சிட்டேன் ...

Arasi Raj said...

நட்புடன் ஜமால் said...
எங்கே!/////

வந்துட்டாருய்யா வந்த்ட்டாருய்யா

Arasi Raj said...

நட்புடன் ஜமால் said...
ஆரம்பமே புரிஞ்சிடிச்சி

\\ஏங்க‌ என்னை இப்போ 4 பேரு ஃபாலோவ் ப‌ன்றாங்க‌ங்க‌...\\

இங்கே சிரிச்சிட்டேன் ...
/////////
உங்களுக்கு தெரியும்...ஜீவனுக்குத் தெரியணுமே

வேத்தியன் said...

ஆத்தா பொன்னாத்தா...
சூப்பர்ங்க சூப்பர்...
நான் எந்த விசயத்த வச்சி எழுதனும்ன்னு ரொம்ப நாளா நெனைச்சுட்டு இருந்தனோ அதை அப்பிடியே எழுதியிருக்கீங்க...
என்னை ரொம்ப கவர்ந்துள்ளது...
ஃபன்டாஸ்டிக்...

நட்புடன் ஜமால் said...

\\உங்களுக்கு தெரியும்...ஜீவனுக்குத் தெரியணுமே\\

அவருக்குள்ளும் ஒரு ஜீவன் இருக்கு அத நீங்க தெரிஞ்சிக்கங்க

(வந்துட்டாருடா கருத்து கண்ணாயிரம் - டேய் ஆத்தாவுக்கேவா)

குடந்தை அன்புமணி said...

ராகவன் அண்ணனோட பதிவையும், தேவா சார் பதிவையும் படிச்சி்ட்டு இப்படி ஒரு கதை உஙகளுக்கு தோணுச்சா... சூப்பர்தான். நானும் ஒரு பதிவு தேவா சார் எழுதியதை வச்சி போடப்போறேன். இன்னும் அரைமணி கழித்து வாங்க... கண்டிப்பா இந்த பதிவு பெண்களுக்கு மட்டும்.

தேவன் மாயம் said...

ரொம்ப நல்லா
எழுதியிருக்கீங்க!

தேவன் மாயம் said...

ராகவன் அண்ணனோட பதிவையும், தேவா சார் பதிவையும் படிச்சி்ட்டு இப்படி ஒரு கதை உஙகளுக்கு தோணுச்சா... சூப்பர்தான். நானும் ஒரு பதிவு தேவா சார் எழுதியதை வச்சி போடப்போறேன். இன்னும் அரைமணி கழித்து வாங்க... கண்டிப்பா இந்த பதிவு பெண்களுக்கு மட்டும்.////

அன்புமணி!!!
இப்படியொரு
விசயம்
நடக்குதா!!!

தேவா..

தேவன் மாயம் said...

ராகவன் அண்ணனோட பதிவையும், தேவா சார் பதிவையும் படிச்சி்ட்டு இப்படி ஒரு கதை உஙகளுக்கு தோணுச்சா... சூப்பர்தான். நானும் ஒரு பதிவு தேவா சார் எழுதியதை வச்சி போடப்போறேன். இன்னும் அரைமணி கழித்து வாங்க... கண்டிப்பா இந்த பதிவு பெண்களுக்கு மட்டும்.///

விடமாட்டோம்!!!
கண்டிப்பாக
வந்து
படிப்போம்!!

தேவன் மாயம் said...

பிறை அவ‌ளுடைய‌ ப‌திவுக்கு வ‌ந்த‌ க‌மென்ட் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். த‌ன்னையே சுற்றி வ‌ந்த‌ ஆசை ம‌னைவிக்கு வெறொரு விஷ‌ய‌த்திலும் ஆர்வ‌ம் வ‌ந்த‌தைப் பொறுக்க‌ முடிய‌ வில்லை ஜீவ‌னால்..////

ரெண்டையும் வச்சு சமாளிங்க!!

ஆதவா said...

பொன்னாத்தா.... டாப் க்ளாஸ் கதை இது!!

ஃபாளோ பண்றாங்கன்னு சொன்னதுமே புரிஞ்சு போச்சு.... கதையோட முடிவும் தான்.. ஆனா கலக்கலான சப்ஜெக்ட் அம்மா இது!

சில சமயம் எனக்கும் தோணும். கணீணி முன்னால கும்மியடிச்சுட்டு வேற ஒரு வாழ்க்கையை தொலைக்கிறோமான்னு.....

எனது ஒரு கவிதையில் (மறந்துவிட்டதாய்) தாயை மறந்துவிட்ட ஒரு மகனைப் பற்றி எழுதியிருப்பேன்... அது ஞாபகத்திற்கு வந்தது. இணையம் எனும் மனைவி கிடைத்தபின்னர், ரசித்து வாழும் வாழ்க்கையெனும் அம்மாவை மறந்துவிட்டோமா என்று!!!

புல்லட் said...

நீங்க எதை மனசுல வச்சு எழுதினீங்களோ தெரியாது... ஆனா எதற்கும் அடிமையாகிறது டேஞ்சர்தான்... முதல்ல பேஸ் புக்.. இப்ப ப்ளாக்கிங்... பொறுப்புள்ளாக்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது என்பத என் கருதது... நம்ம மாதிரி பொழுது போக்க ஆளில்லாம அலுப்படிக்க கேள் பிரண்டில்லாம வேலைக்ளப்போட வீட்ட வந்து வெட்டியா இரு்கிறவங்கள் எழுதலாம்... கும்மியடிக்கலாம்...

- இரவீ - said...

கதயாத்தா ???

எம்புட்டு பெரிய கத?

அட ஆமாங்க நான் கூட சில விஷயம் மிஸ் பண்ணிகிட்டிருக்கேன் ... நல்ல வேலை நியபகபடுத்தநீங்க ....

வால்பையன் said...

நல்ல காமெடி!

ரீடரில் பகிர்ந்து கொண்ட நட்புடன் ஜமாலுக்கு நன்றி!

நாகராஜன் said...

ஹா... கதை... கதை... கவிதை போயி இப்போ கதை எழுத ஆரம்பிச்சாச்சு... சூப்பர்... கலக்குங்க. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.

ஆரம்பத்துல கணினியில் மூழ்கியிருக்கும் போதே கதை இது தான்னு புரிஞ்சிருச்சு. ஆனாலும் நல்லா நகைச்சுவை சேர்த்து அருமையா எழுதிருக்கீங்க. இனி "balancing life and work" மாதிரி "balancing blogging and life" னு புதுசு புதுசா சட்ட திட்டங்கள் கொண்டுவர வேண்டுமுங்கோவ். வலைபதிவாளர்களுகெல்லாம் ஒரு புதிய தலைப்பு குடுத்திட்டனோ? இதை வைச்சும் ஒரு பதிவு எழுதுங்க சண்டைகோழி...

நாகராஜன் said...

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... கதையின் நாயகன் மற்றும் நாயகியின் பெயர்கள் அருமை... ஜீவன், பிறை... நாயகனின் பெயரைப்போலவே ஜீவனுள்ள கதைங்க.

எழுதுங்க எழுதுங்க எழுதிட்டே இருங்க... (ஆனால் கொஞ்சம் அந்த சவலை பாய்ந்த பிள்ளைக்கும் நிறைய நேரம் ஒதுக்குங்க)...

Ruyaj said...

கண்டிபாங்க பொன்னாத்தா, அங்கீகாரம் ஒரு மனிதனுக்கு ரொம்ப முக்கியம். அது கிட்டத்தட்ட ஒரு அடிப்படை தேவை மாதிரி. அதே மாதிரி அன்பும். ரெண்டுக்கும் போட்டி வந்தா என்ன செய்ய? பிறை மேலும் மேலும் ஜீவனோட அன்போடு சேர்ந்து அங்கீகாரமும் பெற வாழ்த்துக்கள். ;)

ஆமாம், கதை நீங்க எழுதினதா இல்லை ஜீவன், sorry, பாபு எழுதினதா? :D

நசரேயன் said...

நல்லா இருக்கு ஆத்தா

Arasi Raj said...

@ வேத்தியன்...நன்றிங்க....நல்ல வேலை நான் முந்திக்கிட்டேன்

@ஜமால் [எ] கண்ணாயிரம் ..அந்த ஜீவனைத் தான தாங்கிகிட்டு இருக்கோம்

Arasi Raj said...

@ அன்புமணி ...நான் தேவாவோட எல்லா பதிவும் படிப்பேன்...ராகவன் நைகீரியாவா சொல்றேங்க....சும்மா..தோனுச்சு..எழுதிட்டேன்...உங்க பதிவுக்கு வந்துகிட்டே இருக்கேன்

Arasi Raj said...

@தேவா....நன்றிங்க தேவா....சும்மா முயற்சி

ஆமா அமா அன்பு மணி உங்களை எங்கயோ கவுத்த போறாரு

தேவா, ரெண்டையும் வச்சு சமாளிச்சுகிட்டு தான் இருக்கோம்...இல்லன்னா ஒரு நாளைக்கு 4-5 பதிவுகள் தான் நடக்குமே தவிர அடுப்புல ஒரு வேலை நடக்காது

Arasi Raj said...

ஆதவா....சும்மா கோக் அடிக்காதேங்க...டாப் கிளாஸ் ?

நம்ம பதிவர் ஜாதிக்கு பாலோவ்னாலே வேற எதுவும் தோனாதே ...

உங்க தாய் கவிதையை கண்டிப்பா படிக்குறேன்

Arasi Raj said...

புல்லட்டு , மனசுல எதுவும் இல்லை...என் வீட்டுக்காரர் சும்மா மிரட்டுவார்...லண்டன்ல அது நடந்துச்சு இது நடந்துச்சுன்னு ...
அலுப்படிக்க கேள் பிரண்டு வேணுமா உங்களுக்கு ..சரித்தான்

Arasi Raj said...

@ரவீ....இத படிச்சா தன் எதையோ மிஸ் பண்றது தெரியுதா...போங்க..அத போயி கவனிங்க

Arasi Raj said...

@ வால் வாங்க வாங்க....சீரியஸா கதை எழுதினா காமெடின்னு சொல்றீங்க...இருக்கட்டும் இருக்கட்டும் கவனிச்சுக்கறேன்

Arasi Raj said...

@ ராசுக்குட்டி, எனக்கு மிகவும் பிடித்த பேர் பிறை , ஜீவன் ....அங்கீகாரத்துக்கு நன்றி
புது யோசனை குடுத்துருக்கீங்க....முயற்சி பண்றேன்

Arasi Raj said...

@ மின்முகம் ...யாருப்பா அது பாபு
கதை என்னோடது...கருத்துக் கர்த்தா அவர்

Arasi Raj said...

@நஸ் ..நன்றி மவனே

தமிழ் மதுரம் said...

இதை தான் பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதோ?

பதிவு அருமை...

தொடருங்கோ...

ஹேமா said...

ஆத்தா பொன்னாத்தா கொஞ்சம் வீட்டையும் கவனியுங்க.நம்ம அண்ணாச்சி பாவம்ல.இனி இப்பிடியேல்லாம் எழுதக் கூடாது.வீட்டுக்கு அப்புறம்தான் மத்தது எல்லாம்.

அந்த நாலு பேரில நான் இல்லதானே.கண்டிப்பா ஜமால்,தேவா,ஆதவா...வேற யாரு?

Muniappan Pakkangal said...

Savalai pillai,romba nalla irukku.Your comparison is nice.