Monday, March 23, 2009

திருப்புற சுந்தரி!!

கல்லூரில கூத்தடிக்குறதுக்கு நமக்கு எல்லாம் காரணமா வேணும்...ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு எல்லாம்..இஹ்ஹி இஹ்ஹி தான்....அதுவும் விடுதின்னா கேட்கவே வேண்டாம்..." Study hour"-ல தான் நமக்கு புதுசு புதுசா ஜோக் தோணும்....


தோழி ஒருத்திக்கு [ நம்ம திருப்புற சுந்தரி ] புடிச்ச விஷயம் என்னன்னா எல்லாரோட பேரையும் திருப்பி போட்டு கூப்பிடுறது...அந்த வேலைய அவ கொஞ்சம் கூட பிழை இல்லாம செய்யுவா.....திருப்பின்னா எப்டின்னா...உதாரணத்துக்கு 'தேவி' அப்டிங்குற பேரை 'விதே'; 'கவிதா - தாவிக' ..தாவிக்க தாவிக்கனு கூப்பிட்டா கடுப்பு வராதா? ஷெர்லீயை லீர்ஷெஃ ....சங்கீதாவை தாகீங்ச ...பிருந்தாவைத் திருப்பிப் போட்டா "தாந்த்ருபி"...சில பேரைத் திருப்பி போட்டா நல்லா தான் இருக்கும்...சில பேரைத் திருப்பி போட்டா அந்த பேருக்கு சொந்தக் காரிக்கு காது மூக்கு எல்லாம் புகை வரும்...
இவளோட அட்டகாசம் தாங்க முடியாம எல்லாரும் சேந்து ஒரு முடிவுக்கு வந்தோம்...அவ வழியில அவளை அடக்குறது தான் சரி, எளிதும் கூடன்னு ..

நாங்க அந்த முயற்ச்சியை செயல் படுத்தின அதே நாள்ல அவ எங்களை எல்லாம் திருப்பி போட்டு கூப்பிடுறதை விட்டுட்டா....எப்டின்னு கேக்குறீங்களா... ரொம்ப எளிது....அவ பேரு சீதா....திருப்பி போட்டா என்ன வரும்... அவ்ளோ தான் அம்மணி கப் சிப்..
சீதாவின் நினைவுகளை திருப்பியபடி

பொன்னாத்தா

27 comments:

வேத்தியன் said...

ஐ மீ த பர்ஷ்ட்டு...

வேத்தியன் said...

" Study hour"-ல தான் நமக்கு புதுசு புதுசா ஜோக் தோணும்....//

ஆமாங்க...
சரிதான்...

வேத்தியன் said...

அவ பேரு சீதா....திருப்பி போட்டா என்ன வரும்... அவ்ளோ தான் அம்மணி கப் சிப்.. //

ஆஹா ஆஹா...
கலக்குங்க...
ஹிஹி..
ஐடியா யாரோடது???
:-)

RAD MADHAV said...

மீ த பர்ஸ்ட்:-)
(வழக்கம் போல) 'திரிபுர சுந்தரி' என்பதை அறியாமல் 'திருப்புற சுந்தரி' என்று எழுதி விட்டீர்கள் என்று நினைத்தேன். படிச்சதுக்கு அப்புறம்தான் தெரிந்தது இது மேட்டர் வேற என்று.

'அடி' யின் வலி கொடுக்கும்போது யாருக்கும் தெரியாது. ஆனால்
வாங்கும் பொது நன்றாகத் தெரியும்.


சீதாவின் நினைவுகளை திருப்பியபடி
பொன்னாத்தா - சூப்பர்.
ஒரு பாடம் கிடைத்தால் இவர்கள் திருந்தி விடுவார்கள்.

குடந்தைஅன்புமணி said...

சரியான பதிலடிங்க! ஆனாலும் அவங்க மனசு ரொம்ப நொருங்கியிருப்பாங்க... பாவம்...

நட்புடன் ஜமால் said...

கடைசி போட்டா நல்லாக்கீதே!

அது எப்போ!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

he he he

Poornima Saravana kumar said...

:)))

படங்கள் செம அழகு!

Ravee (இரவீ ) said...

பாவம் பொன்ஸ் அவங்க...
நல்ல வேல அவங்க பேரு சுகுணா னு இல்ல.

நிலாவும் அம்மாவும் said...

ஒரே நேரத்துல மொத வந்த வேத்த்யனுக்கும் தம்பி மாதவ்க்கும் இலந்தை கோட்டை இரண்டாக பிரித்து பரிசாக தரப்படுகிறது...

நிலாவும் அம்மாவும் said...

@வேத்தியன் said...

ஆஹா ஆஹா...
கலக்குங்க...
ஹிஹி..
ஐடியா யாரோடது???
:-)

இதுக்குன்னு தானே "Study Hour" இருக்கு...கூட்ட போட்டு திட்டம் போட

நிலாவும் அம்மாவும் said...

@RAD MADHAV said...
மீ த பர்ஸ்ட்:-)
(வழக்கம் போல) 'திரிபுர சுந்தரி' என்பதை அறியாமல் 'திருப்புற சுந்தரி' என்று எழுதி விட்டீர்கள் என்று நினைத்தேன்/////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..கவுத்திட்டியே பரட்டை

நிலாவும் அம்மாவும் said...

@குடந்தைஅன்புமணி said...
சரியான பதிலடிங்க! ஆனாலும் அவங்க மனசு ரொம்ப நொருங்கியிருப்பாங்க... பாவம்...

ஹாஸ்டல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ங்க....அவ நோகடிச்சவங்க தான் நிறைய....அருணாவை நாறுவ நாருவன்னு குப்பிட்டு கடுப்பேத்தினா..

நிலாவும் அம்மாவும் said...

@நட்புடன் ஜமால் said...
கடைசி போட்டா நல்லாக்கீதே!

அது எப்போ!

எப்போனாலும் ...
------------------------

வாங்க பூர்ணிமா, நன்றி
வாங்க ராஜலக்ஷ்மி

நிலாவும் அம்மாவும் said...

@Ravee (இரவீ ) said...
பாவம் பொன்ஸ் அவங்க...
நல்ல வேல அவங்க பேரு சுகுணா னு இல்ல.///

இப்போ பொன்னாத்தா கப் சிப் :-|

RAD MADHAV said...

//நிலாவும் அம்மாவும் said...

@RAD MADHAV said...
மீ த பர்ஸ்ட்:-)
(வழக்கம் போல) 'திரிபுர சுந்தரி' என்பதை அறியாமல் 'திருப்புற சுந்தரி' என்று எழுதி விட்டீர்கள் என்று நினைத்தேன்/////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..கவுத்திட்டியே பரட்டை//

ஹ ஹ ஹா.... நன்றி நன்றி ஸ்டைலு....ஸ்டைலு.... ரஜனி ஸ்டைலு..... :-)

ராசுக்குட்டி said...

அம்மாடியோவ்வ்வ். நீங்க என்ன சாமானியப்பட்டவங்களா என்ன? எதிர் பார்த்த மாதிரியே ஒரு பதிலடி குடுத்திருக்கீங்க... என்ன இருந்தாலும் உங்க நண்பி பாவம் தான். முள்ளை முள்ளாலே எடுத்துட்டீங்க.

செய்திக்கு தக்க மாதிரி இருந்த படங்கள் அருமை...

ஆதவா said...

நல்ல ரிவிட்டு... பாவம் அவங்க...

ஆனா, சில சமயங்களில் நமக்கு அந்த பெண் ஏன் திரும்பவும் கூப்பிடவில்லை என்ற சோக உணர்வு ஏற்படும்!!!

ஹேமா said...

நிலா அம்மா நீங்க ரொம்ப வாலோ...!சிலநேரங்களில் இப்படியானவர்கள் தேவைப்படும் வகுப்பறைகளில்.

தாத்னான்பொ....இல்ல சொல்லிப்பாத்தேன்.

நிலாவும் அம்மாவும் said...

வாங்க ஆதவா, அதுக்கப்புறம் சீதா அது மறந்து போனாலும் நாங்க கவிதாவை தவிக்கொன்னும் அருணாவை நாறுவ'ன்னும் தான் குப்பிட்டோம்

ஹேமா என்னைப் பார்த்தா வாழு மாறியா இருக்கு.....நான் எல்லாம் சமத்தாக்கும்

புல்லட் பாண்டி said...

அடடே புதுசா ஒருத்தர சநதிக்கிறதில பெரிய சந்தோசம்... மிச்ச பதிவுகளை மெதுமெதுவாதான் வாசிக்கோணும்... புதுவருச லீவுக்க ஒரு கோர்ஸ் வேக்கா போட்டிடுவம்.. :)

ம்ம் நீங்க ஹொஸ்டலில உப்பிடியெல்லாம் அலுப்படிக்கிறிங்களா? பொம்பளைங்கள்ளாம் புத்தகத்தை வச்சு இரவிரவா கும்முவாங்க நம்ம கம்பஸில... நாசமாப்போவாளையள் உவளயளால நாங்கள் எடுக்கிற மாக்சுகள வச்சு கொண்டு வெளில தலைகாட்டேலாம தவிச்சனாங்கள்... உங்கள மாதிரி எல்லாரும் இருந்ாதிட்டா நல்லம்தானே...


இன்னும் சில ஹாஸ்டல் கல கல மற்றும் கிளுகிளு அனுபவங்களை பகிரவும் நிலாவின் அம்மா... ஹிஹி

Natchathraa said...

ஹா ஹா ஹா ஹா.... சிரித்து ரசித்தேன்.. ரசித்து சிரித்தேன்.. எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்.. ஆனா முடிவா விவிசி தான்....

குசும்பன் said...

//என்னன்னா எல்லாரோட பேரையும் திருப்பி போட்டு கூப்பிடுறது//

தீபா என்கிற பெண்ணை சைட் அடிக்கும் நண்பனை என்னடா இப்ப எல்லாம் உனக்கு ”பாதீ பாதீ”யா தெரியுது என்று கிண்டல் அடிப்போம்!

MayVee said...

" Study hour"-ல தான் நமக்கு புதுசு புதுசா ஜோக் தோணும்"

athane....
study hour la enakkum ippadi thaan thonum...
study hour la padichi iruntha naan bill gates oda irunthirppen...
enna seiya bill gates escape....

pavamunga avanga...
friendyai ippadi ellama ragging doing?

ithe ideavai en namekkum try panninga.... ana avangala mudiyavillai

MayVee said...
This comment has been removed by the author.
MayVee said...

"நிலாவும் அம்மாவும் said...

ஹேமா என்னைப் பார்த்தா வாழு மாறியா இருக்கு.....நான் எல்லாம் சமத்தாக்கும்"

namba mudiyavillai....
irunthalum
obamakkaga nambitten

நிலாவும் அம்மாவும் said...

வாங்க நட்சத்திரா!!
-------------

புல்லட்டு .....இது துப்பாக்கி புல்லட்டா..இல்ல மோட்டார் பைக் புல்லட்டா ?

------------------
வாங்க குசும்பன்...பாதீ பாதீ நல்லா இருக்கே...

-------------------

Mayvee..என்ன நம்ப முடியலை...எங்க காலேஜ்ல நம்ம ஒழுக்கத்தைப் பாராட்டி பெரிய பதக்கமே குடுத்தாங்கங்குறேன்