ஐ தலைப்பை படிச்சுட்டு என்ன எல்லாமோ நினச்சு வந்தீங்கன்னா இங்க இன்னும் நிலா மட்டும் தானுங்கோவ்
ஓவியம்
புகைப்பட மாதிரி
படத்தை க்ளிக்கி பெரிதாக்கி பாருங்க
உன்னை ஈன்றெடுத்த பொழுதினில்
பெற்ற சந்தோசம்
மீண்டும் அடைந்தேனடி
என் சின்ன கண்மணி
-----------------------------------------------------------------------------------------------
கேள்விக்கென்ன பதில் பதிவு போடும் பொது தனித் திறமை என்னங்குற கேள்விக்கு "நன்றாக [!] ஓவியம் " வரையத் தெரியும்னு சொல்லிருந்தேன்...சில நண்பர்கள் முயற்சி பண்ணலாமே, பதிவா போடலாமேன்னு நம்ம மண்டைக்கு மேல 60 வாட்ஸ் பல்பு எரிய வச்சாங்க....அப்போ தான் நிலாவோட ஓவியம் பண்ணிட்டு இருந்ததுனால, கொஞ்சம் தைரியமா சரின்னு சொல்லி வச்சேன்......சொல்லிட்டேனே ஒழிய கொஞ்சம் இதயத் துடிப்பு திக்கி திக்கி தான் இருந்துச்சு...ஆஹா.. நெருங்கின நண்பர் வட்டாரம்னா அப்டி இப்டின்னு எதுனா சாக்கு சொல்லி சமாளிச்சுடலாம் ஒருவேளை ஓவியம் சரியா வரலன்னா....நம்ம பதிவு உலகத்துக்கு இன்னான்னு சொல்றதுன்னு ......
என் தாயி மகராசி நிலா எப்போவும் போல இப்போவும் சமத்துக் குட்டியா ஒத்துழைப்பு குடுத்துட்டா...
எனக்கு நானே கற்பனை செஞ்சு கொஞ்சம் கொஞ்சம் கிறுக்க தான் தெரியுமே தவிர முழுசா கற்பனைல ஒரு ஓவியத்தை உருவாக்க தெரியாது...
இதவரைக்கும் மற்ற ஓவியங்களை பார்த்து தான் நகல் எடுத்துருக்கேனே தவிர ஒரு நிஜ உருவத்தை வரஞ்சது கிடையாது...
இதுல செண்டிமெண்டா வேற ஒரு பயம்..ஆஹா நம்ம புள்ளை படம் முயற்சி பண்றோமே, நல்ல வரலன்னா என்ன பண்றதுன்னு....
முகம் மட்டும் வரைய ஒரு இரண்டு மணி நேரம் தான் ஆச்சு...அதுக்கப்புறம் ஒரு ஒரு வாரத்துக்கு போகும் போதும் வரும் போதும் பார்த்து வயிறு ஒரே கலக்கல்.....ஏன்னு கேளுங்க.....சுருட்டை முடிய எப்படி வரையுரதுன்னு தான்...இது வரைக்கும் பெண்கள் ஓவியம் நிறைய வரஞ்சுருக்கேன்...ஆனா முடிக்கு முக்கியத்துவம் வர்ற மாதிரி எதுவும் வாய்ச்சது இல்லை....கொஞ்சமா தான் முடி தெரியும்...இல்லன்ன ஜடை பின்னாடி போயிரும்......இந்த படத்துல முடி தானே முக்காவாசி ...என் அசட்டு தைரியத்து மேல எனக்கு கோவம் கோவமா வந்துச்சு...என்ன பண்றது புலி வாலைப் புடிச்ச விட்டுற முடியுமா ..இறுக்கமா புடிச்சுக்கிட்டேன்
எப்டியோ முடிச்சாச்சு...... இனி எல்லாம் உங்கள் கைகளில்
தூரிகையை கழுவியபடி,
பொன்னாத்தா

37 comments:
ரொம்ப காலமா எழுத்தனுபவம் பேசுகிரது
வாங்க சுரேஷ்....
காலை வணக்கம்....ஐ..நீங்க பழனியா...அங்க தான் நிலாவுக்கு அடுத்த மாசம் மொட்டை .......
Me the first, (Enga oorla 3 nu solla maattom. 1 nu nu thaan solvom)
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
//உன்னை ஈன்றெடுத்த பொழுதினில்
பெற்ற சந்தோசம்
மீண்டும் அடைந்தேனடி
என் சின்ன கண்மணி//
தாய்ப்பாசம் விவரிக்க வேண்டியதில்லை,
முல்லைப்பூ போல, வாசம் தானாக வரும்
//நம்ம மண்டைக்கு மேல 60 வாட்ஸ் பல்பு எரிய வச்சாங்க.//
இது கம்மீங்களே. ஒரு அறுநூறு வாட்ஸ் ஆவது வேண்டாமா? :-)
//என் தாயி மகராசி நிலா எப்போவும் போல இப்போவும் சமத்துக் குட்டியா ஒத்துழைப்பு குடுத்துட்டா...//
சமத்து குட்டிக்கு பாராட்டுக்கள்
//..என்ன பண்றது புலி வாலைப் புடிச்ச விட்டுற முடியுமா ..இறுக்கமா புடிச்சுக்கிட்டேன்
எப்டியோ முடிச்சாச்சு...... இனி எல்லாம் உங்கள் கைகளில் //
புலி வால எங்க கைல கொடுத்துட்டு நீங்க தப்பிக்க பாக்குறீங்களே?
//இதவரைக்கும் மற்ற ஓவியங்களை பார்த்து தான் நகல் எடுத்துருக்கேனே தவிர ஒரு நிஜ உருவத்தை வரஞ்சது கிடையாது...
இதுல செண்டிமெண்டா வேற ஒரு பயம்..ஆஹா நம்ம புள்ளை படம் முயற்சி பண்றோமே, நல்ல வரலன்னா என்ன பண்றதுன்னு....//
முழு நேர ஓவியர் போல் அழகாக வரைந்திருக்கின்றீர்கள்.
கலக்குங்க மேடம் கலக்குங்க.... பாராட்டுக்கள்.
கலக்கல் ஓவியம்ங்க. நல்லா வரைந்திருக்கீங்க.
ஓவியம் அப்படியே அசலை ஒரு நகல் எடுத்த மாதிரி இருக்கு... இன்னும் நிறையா வரைங்க. அப்படியே அம்மா கிட்ட சொல்லி நிலா பாப்பாக்கு சுத்தி போடா சொல்லுங்க. கண்ணு பட்டற போகுது.
சீக்கிரம் நிலா பாப்பாக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ வரணும்னு நினைக்கறேன்... நீங்க படற ஆசைக்கு நிலா பாப்பா மட்டும் போதாதுங்க... :) :) :) (இது நிலா பாப்பவோட வலைப்பூவில் போட நினைத்த பின்னூட்டம்ங்க)
பொன்சக்கா,
நான் கூட நீங்க வீடு, மரம், மலை அப்படீனு ஏதாவது வச்சிருப்பீங்கன்னு பாத்தா ...
இவ்ளோ தெரமய உள்ளுக்குள்ள வச்சிருக்கீங்க,
மிக மிக அழகா இருக்கு, வாழ்த்துக்கள்.
தொடர்து நிறைய தீட்டுங்கள், பதிவிலும் போடுங்க.
நீங்க கோப்பி பேஸ்ட் பண்ணுறத பாத்தா ...
சில பல குட்டிநிலா நிச்சயம்னு நெனைக்கிறேன்.
Ravee (இரவீ ) said...
நீங்க கோப்பி பேஸ்ட் பண்ணுறத பாத்தா ...
சில பல குட்டிநிலா நிச்சயம்னு நெனைக்கிறேன்.//////******
ஏன் ஏன்...மத்தவங்கள பிரச்சனைல மாட்டி விட்டு வேடிக்கை பாக்குறதுல அவ்ளோ சந்தோஷமா ?
-----------------------------
ராசுக்குட்டி said...
(இது நிலா பாப்பவோட வலைப்பூவில் போட நினைத்த பின்னூட்டம்ங்க)////*********
இது அலுவினி ஆட்டம்....சேத்துக்க மாட்டேன்
--------------------------
RAD MADHAV said...
இது கம்மீங்களே. ஒரு அறுநூறு வாட்ஸ் ஆவது வேண்டாமா? :-)///*********
எதுக்கு முடியெல்லாம் கருகி மொட்டையாகுரதுக்கா ?
ரொம்ப அருமையான ஓவியம்.. உங்களிடம் அழகான ஓவியத் திறம் அடங்கியிருக்கிறது. இதற்கு நீங்கள் எந்த வர்ணக்கலவை உபயோகித்திருக்கிறீர்கள்?
ஆயில் பெயிண்டிங் போலத் தெரிகிறது.. நன்கு நேரமெடுத்து வரைந்திருக்கிறீர்கள்...
பிரமாதம்
நன்றி ஆதவா....ஒரு ஓவியர் கிட்ட இருந்து வர்ற பாராட்டு பெரிய விஷயம் தான்.....இது ஆயில் பெயிண்டிங் இல்லை....வாட்டர் கலர் ......
நிலா அம்மா,இப்போதான் பார்க்கிறேன்.அம்மா....டி இவ்ளோ திறமை இருக்கு உங்களுக்கு.
கை குடுங்க முதல்ல.
பாராட்டுக்கள்.
அதோட குட்டியம்மாவுக்கும் பாராட்டு இருக்கு.உங்களுக்கு ஒத்துழைச்சு இருக்கிறாவே !
உண்மையிலே தலைப்பும் அசத்தல்."மீண்டும் பிரசவம்".
//நண்பர்கள் முயற்சி பண்ணலாமே, பதிவா போடலாமேன்னு நம்ம மண்டைக்கு மேல 60 வாட்ஸ் பல்பு எரிய வச்சாங்க...//
யாரைச் சொல்றீங்க.
என்னையும்தானே !அடுத்த முறை கொஞ்சம் கூட எரிய வச்சாப் போச்சு !
நான் முதல்லே உங்க நிலா ஓவியம் பார்த்தும் ஆஹா-ன்னு நினைச்சதே அந்த முடிய பார்த்துத்தான். நல்லா ஒரு pattern மாதிரி போட்டிருக்கீங்க. ஆனா அதே identity கொண்டு வந்தது மூக்கு தான். நேருல பார்க்குறா மாதிரியே இருக்கு. குடிய சீக்கிரம் எங்க படம் அனுப்பறேன், படம் போட்ருங்க. ரேட் கூட கொறைச்சு இருந்தாலும் பரவால்லே தந்தறோம். என்ன சொல்றீங்க? ;)
ஆத்தா ரொம்ப அழகா எழுதிபுட்டிய
\\தூரிகையை கழுவியபடி,
பொன்னாத்தா\\
இது ஜூப்பரு ...
இனி இப்பகுதியில் முதலிடம் பிடிக்க முயலுகிறேன் ...
வலைச்சரத்தின் உதவியால் எனது வருகை. படம் நன்றாகவே வந்திருக்கிறது.மேலும் மேலும் முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துகள்.
எங்க ஏரியாக்கு வந்ததுக்கு நன்றி குடந்தை மணி.....நேரம் கிடச்சா கண்டிப்பா முயற்சி பண்ணிட்டே இருப்பேன்...ஊக்கத்திற்கு நன்றி
----------------
நன்றி ஜமால்...நீங்க வந்தாலே திருவிழா தான்...முதல்ல வந்தாலும் சரி முடிவுல வந்தாலும் சரி
-----------------------
நன்றி ஹேமா....
ஆஹா...அடுத்த முறை அதிகமா பத்த வைக்கப் போறேங்களா...நான் ஜூட்
நிலாவும் அம்மாவும் said...
நன்றி ஆதவா....ஒரு ஓவியர் கிட்ட இருந்து வர்ற பாராட்டு பெரிய விஷயம் தான்.....இது ஆயில் பெயிண்டிங் இல்லை....வாட்டர் கலர் ...
இது எப்ப இருந்துனஙக.....
சகோதரி.... எனக்கு உண்மையாவே ஓவியம் வரையத் தெரியாது... கிறுக்கினா ஓவியம்னு நினைச்சா அப்ப நான் ஓவியன் தான்....
நீங்க அருமையா வரைஞ்சிருக்கீங்க... இந்த அளவுக்கெல்லாம் நம்மலால சத்தியமா முடியாது!!
ஆதவா said...
சகோதரி.... எனக்கு உண்மையாவே ஓவியம் வரையத் தெரியாது... கிறுக்கினா ஓவியம்னு நினைச்சா அப்ப நான் ஓவியன் தான்....
///////////
ஆஹா...அப்போ வரை கலைன்னா?
Nice :) :)
ஓவியம் நீங்க வரைந்ததா?
நம்ப முடியலியே?
இதவரைக்கும் மற்ற ஓவியங்களை பார்த்து தான் நகல் எடுத்துருக்கேனே தவிர ஒரு நிஜ உருவத்தை வரஞ்சது கிடையாது...//
சுப்பர்//
இதுல செண்டிமெண்டா வேற ஒரு பயம்..ஆஹா நம்ம புள்ளை படம் முயற்சி பண்றோமே, நல்ல வரலன்னா என்ன பண்றதுன்னு....///
வரும் வந்திருக்கு..
முகம் மட்டும் வரைய ஒரு இரண்டு மணி நேரம் தான்///
பரவாயில்லை/ நேரம் கம்மிதான்..
இது வரைக்கும் பெண்கள் ஓவியம் நிறைய வரஞ்சுருக்கேன்...ஆனா முடிக்கு முக்கியத்துவம் வர்ற மாதிரி எதுவும் வாய்ச்சது இல்லை....///
முடியில்லாதா பெண்ணா?
ன் அசட்டு தைரியத்து மேல எனக்கு கோவம் கோவமா வந்துச்சு...என்ன பண்றது புலி வாலைப் புடிச்ச விட்டுற முடியுமா ..இறுக்கமா புடிச்சுக்கிட்டேன்//
புலியே மாடிக்கிச்சு
எப்டியோ முடிச்சாச்சு...... இனி எல்லாம் உங்கள் கைகளில்
///
உண்மையில் அருமை..
ஆஹா...லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேங்குற மாதிரி, தேவா கலக்கிட்டேங்களே...நன்றி நன்றி நன்றி....
வாங்க ராஜலக்ஷ்மி....வருகைக்கு நன்றி
ரொம்ப முயற்சி செஞ்சு வரைஞ்சு இருக்கீங்க.. நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்! நிலாவுக்கும் சேர்த்து...
உண்மையில் அழகு.....
சுவற்றின் அடியில் இருக்கும் அந்த பேஸ் கூட சரியாக அமைந்துள்ளது....
சுருட்டை முடி அழகுக்கு அழகு....
குட்டி மூக்கு....
இன்னும்.....
ஆகா..மிக அழகாக வரைந்திருக்கிறீர்கள்! வாழ்த்துகள்! கொள்ளை அழகு உங்கள் நிஜ ஓவியமும், நகலோவியமும்! :-)
உங்கள் வலைப்பூவை இங்கே இணைத்திருக்கிறேன்!
http://ammakalinpathivukal.blogspot.com/
நன்றி தமிழ் பிரியன்...வாழ்த்துக்கும் வருகைக்கும் ..
----------
நன்றி கூல்ஸ் ...அந்த சுருட்டை முடி தான் கொஞ்சம் பீதியை கிளப்புச்சு...
-----------
நன்றி முல்லை......மறுபடியும் நன்றி வலைப்பூவில சேர்த்ததுக்கு ..
நிஜத்தை விட நிழல் அருமை....சூப்பர் டச்
Post a Comment