Friday, March 20, 2009

கணவர்கள் விற்பனைக்கு..



ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.


2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.


இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது" ..


  • முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

  • இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

  • மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு.

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

  • நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

  • நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

  • ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் . எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு.

இது கதையில சொல்லப்பட்ட நீதி...ஆனா இந்த கதை எழுதினவங்களுக்கு நான் சொல்ல நினைக்குறது என்னன்னா, கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இப்டி தான் ஆண்கள் பிதற்றுவார்கள்..அதுக்கப்புறம் எல்லா தகுதியும் காணாம போயிடும்..இதுக்கெல்லாம் மசியுற பெண்மணிகள் நாங்கள் இல்லை.....

அதுனால கனவான்களே வேற ஏதாவது புதுசா முயற்சி செய்யுங்க .

மறந்த மறக்கப்பட்ட பழைய வாக்குகளை அசை போட்ட படி

பொன்னாத்தா

37 comments:

நட்புடன் ஜமால் said...

எப்புடி எப்புடி

நட்புடன் ஜமால் said...

விற்பனைக்கா!

நட்புடன் ஜமால் said...

\\கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்\\

அப்படின்னா போயிடவா!

இராகவன் நைஜிரியா said...

// "கணவர்கள் விற்ப்பனைக்கு.." //

இது ஒன்னும் புது இல்லீங்க...

என்னிக்கு வரதட்சனை வாங்க ஆரம்பிச்சாங்களோ... அன்னைக்கே விற்பனை ஆயாச்சு

நட்புடன் ஜமால் said...

\\கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்\\

இரண்டு தளம் தானே தெரியும்

இராகவன் நைஜிரியா said...

// கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும். //

ரொம்ப நல்ல விசயம்...

இது மாதிரி ஒரு கடை இருந்தா தங்ஸ் அழைச்சுகிட்டு போகும் போது சௌகர்யமாக இருக்கும்

நட்புடன் ஜமால் said...

ஆஹா! அண்ணே இப்படி ஒரு தத்துவம் இருக்கா

நட்புடன் ஜமால் said...

தளம் என்பது

வலைதளம் அல்லவா!

நட்புடன் ஜமால் said...

\\கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது" ..
\\

அது சரி ...

ஆதவா said...

இதே கதையை வேறு வடிவத்தில படிச்சிருக்கேங்க... இருந்தாலும் பொண்ணுங்கள இப்படி நினைச்சுப்புட்டு போட்டுட்டீங்களே!!!!

இம்கும்.....இம்ஹும்...

Arasi Raj said...

இராகவன் நைஜிரியா said...
// "கணவர்கள் விற்ப்பனைக்கு.." //

இது ஒன்னும் புது இல்லீங்க...

என்னிக்கு வரதட்சனை வாங்க ஆரம்பிச்சாங்களோ... அன்னைக்கே விற்பனை ஆயாச்சு

---------------------

வரதட்சணை நீங்க தானே வாங்குனீங்க.....வாங்கும் பொது என்ன எல்லாம் சொன்னேங்க ....மறந்து போச்சுல்ல இப்ப

Arasi Raj said...

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்ல விசயம்...

இது மாதிரி ஒரு கடை இருந்தா தங்ஸ் அழைச்சுகிட்டு போகும் போது சௌகர்யமாக இருக்கும்
////////

ஆதங்கம் புரியுது ...நல்லா தான் இருக்கும்

Arasi Raj said...

நட்புடன் ஜமால் said...
\\கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது" ..
\\

அது சரி ...
-------------------------------

உண்மை தானே ஜமால்?...கஷ்டமா என்ன?

Arasi Raj said...

ஆதவா said...
இதே கதையை வேறு வடிவத்தில படிச்சிருக்கேங்க... இருந்தாலும் பொண்ணுங்கள இப்படி நினைச்சுப்புட்டு போட்டுட்டீங்களே!!!!

இம்கும்.....இம்ஹும்...

-------------------

ஆதவா...பொண்ணுங்களை தப்ப நினச்சுடதீங்கன்னு தான் சொல்ல வர்றேன்..என்ன சொன்னாலும் நாங்க ஏமாற மாட்டோம்..அந்த காலம் மலை ஏறிப் போச்சு ..

priyamudanprabu said...

யம்மோவ் சரியான கதை
ஏற்க்கனவே எனக்கு தெரியும்

பெண்களை சரியா புரிந்து கொண்ட எதோ ஒரு புண்ணியவான் எழுதியது என்று நினைக்கிறேன்

/
இது ஒன்னும் புது இல்லீங்க...

என்னிக்கு வரதட்சனை வாங்க ஆரம்பிச்சாங்களோ... அன்னைக்கே விற்பனை ஆயாச்சு
//
அதே அதே

ஹேமா said...

நிலா அம்மா,நான் கதை படிச்சுக் கொண்டிருக்கும்போதே இந்தப் பெண் ஆறவது தளம் வரைக்கும் போய் ஒன்றுமே இல்லாத ஒரு கணவனிடம்தான் மாட்டப்போகிறா என்றுதான் நினைச்சேன்.சரி பரவாயில்லை.ஒண்ணுமே இல்லாம வெளில போய்ட்டாங்களே.சந்தோஷம்.

நிலா அம்மா ஆண்களை ஏன் குறை சொல்லணும் நாங்க.என்னைப் பொறுத்த வரை எங்க ஆசைகளை ஒரு அளவோட வச்சிருக்கலாமே.
கிடைச்சதை வச்சு திருப்திப் படலாமே.இது என் மனமும் கருத்தும்.

(என்னைத் திட்டாதீங்க.நிறையப் பெண்கள் இப்பிடித்தான் வாழ்றாங்க.)

Arasi Raj said...

வாங்க பிரபு....என்ன அதே அதேன்னு ஒத்து ஊதுறீங்க...

ஹேமா...நீங்க சொல்றது சரி தான்....திருப்திப்படுத்த முடியாத சில பெண்கள் இருக்க தான் செய்யுறாங்க.....ஆனா விட்டுக் குடுக்குறதுல முதல் பெண்கள் தான்...
இது காமேடிக்காகவே எழுதப்பட்ட பதிவு....

- இரவீ - said...

//நிலா அம்மா,நான் கதை படிச்சுக் கொண்டிருக்கும்போதே இந்தப் பெண் ஆறவது தளம் வரைக்கும் போய் ஒன்றுமே இல்லாத ஒரு கணவனிடம்தான் மாட்டப்போகிறா என்றுதான் நினைச்சேன்.சரி பரவாயில்லை.ஒண்ணுமே இல்லாம வெளில போய்ட்டாங்களே.சந்தோஷம்.

நிலா அம்மா ஆண்களை ஏன் குறை சொல்லணும் நாங்க.என்னைப் பொறுத்த வரை எங்க ஆசைகளை ஒரு அளவோட வச்சிருக்கலாமே.
கிடைச்சதை வச்சு திருப்திப் படலாமே.இது என் மனமும் கருத்தும்.
//

பெரிய ரீப்பீட்டு ...

என் கருத்து என்னன்னா...
பெண் விடுதலைன்னு சொல்லுறதே ஒரு பெரிய பொய் ...
உண்மையா ஆண்விடுதலை தான் தேவை ...

ஏன்னா,
அன்பான தாய்க்கு அடிபணியாத மகவே கிடையாது,
அதையும் மீறினால் பாசத்தில் கட்டிபோடும் சகோதரி,
எல்லாத்துக்கும் மேல - உயிரோடு உயிராய் கலக்கும் மனைவி,
பின்பு மகள், பேத்தி என நீளும் இந்த தொடரில் ...
கட்டுண்டு இருப்பது யார் ???? யார்??? யார் ???

நசரேயன் said...

என்ன பீதியை கெளப்புறீங்க

நசரேயன் said...

என்னையெல்லாம் விலை கொடுத்து வாங்கியாச்சு

Arasi Raj said...

வாங்க ரவீ .....யார் யார் யார்னு வசந்த மாளிகை படைத்தள சிவாஜி கத்துற மாதிரி கத்துறீங்களே......யார்னு உங்களுக்கே தெரியலியா ..

அப்டி அம்மா, அக்கா, மனைவி, மகள், பேத்தின்னு எல்லா காலகட்டத்துளையும் உங்களை கட்டி தான் போடா வேண்டிருக்கு...

------------------------------
நசரேயன்...வாங்க...நலமா.....ஒ..உங்களை வாங்கியாச்சா..தங்கமணி எந்த தளத்துல இருந்து தேர்வு செஞ்சாங்க....ஹி ஹி

பழமைபேசி said...

விற்பனையா? அவ்வ்வ்வ்....

Arasi Raj said...

வாங்க பழமை...பழைய ஞாபகமோ?

உங்கள் ராட் மாதவ் said...

//இது கதையில சொல்லப்பட்ட நீதி...ஆனா இந்த கதை எழுதினவங்களுக்கு நான் சொல்ல நினைக்குறது என்னன்னா, கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இப்டி தான் ஆண்கள் பிதற்றுவார்கள்..அதுக்கப்புறம் எல்லா தகுதியும் காணாம போயிடும்..இதுக்கெல்லாம் மசியுற பெண்மணிகள் நாங்கள் இல்லை.....//


அப்படி போடுங்க?????
சரிதாங்க, கல்யாணம் ஆனாலே பாதி ஆம்பளைங்க காணாம போய்டுவாங்க?

பேச்சலர் தாங்க ரொம்ப நல்லவங்க :-))

உங்கள் ராட் மாதவ் said...

//"மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது" .. //


அறிவில்லாத ஆண்கள் சங்கம் சார்பாக இதை வன்மையாக (உண்மை என்று)
கண்டிக்கிறோம். ஹி. ஹி. ஹி.,

உங்கள் ராட் மாதவ் said...

Akhaaaaa... Me the 25th.

நாகராஜன் said...

நல்ல காமெடிங்கோவ்வ்வ்வ்...

இரவீ நல்லா அருமையா சொல்லியிருக்காருங்க...
அன்பான தாய்க்கு அடிபணியாத மகவே கிடையாது,
அதையும் மீறினால் பாசத்தில் கட்டிபோடும் சகோதரி,
எல்லாத்துக்கும் மேல - உயிரோடு உயிராய் கலக்கும் மனைவி,
பின்பு மகள், பேத்தி என நீளும் இந்த தொடரில் ...
கட்டுண்டு இருப்பது யார் ???? யார்??? யார் ???

அப்படியே ஒரு சின்ன திருத்தும்... அது விற்பனைக்கு not விற்ப்பனைக்கு ங்க. எங்க தமிழாசிரியர் வல்லின மெய் எழுத்துக்கு அடுத்து ஒரு ஒற்றெழுத்து வரக்கூடாதுன்னு சொல்லி குடுத்திருக்காங்க. நீங்க சும்மா காமெடிக்காக போட்டிருந்தீங்கன்னா சரி, இல்லாட்டி மாத்திக்குங்க.

Arasi Raj said...

20 போட்ட தம்பி மாதவ்க்கு ஒரு "OOO"

--------
வாங்க ராசுக்குட்டி ...எனக்கும் ஒரு சந்தேகமா தான் இருந்த்துச்சு....திருத்திட்டேன்...
உங்க தமிழாசிரியர் கிட்ட நிறைய அடி வாங்கி படிச்சுருப்பீங்க போல இருக்கே...இப்டி மறக்காம வச்சுருக்கீங்க

வேத்தியன் said...

அட..
அசத்தல் பதிவு போட்டு கலக்குறேள் போங்கோ...
:-)

Poornima Saravana kumar said...

தலைப்பே டெர்ரரா இருக்கே:)))

Poornima Saravana kumar said...

கதை நல்லா இருக்குங்க...

Poornima Saravana kumar said...

நான் எல்லாம் ரொம்ப சமத்துப்பா:)))

உங்கள் ராட் மாதவ் said...

//நிலாவும் அம்மாவும் said...
20 போட்ட தம்பி மாதவ்க்கு ஒரு "OOO"//


//கோழி ரொம்ப பிடிக்கும்னு சொல்லாம சொல்லிடீங்க....
கோழி கிறுக்கல், சண்டக்கோழி.... :-)//

இது நான் ஏற்கனவே போட்ட கமெண்ட்.
"கோழி கிறுக்கல், சண்டக்கோழி.... இப்ப முட்டை... அதுவும் மூணு..."
ஐய்யா...., ஐய்யா....
ப்ரூவ் பண்ணிட்டீங்களே..... வாழ்த்துக்கள்.... :-)

உங்கள் ராட் மாதவ் said...

உங்களது இந்த பதிவை கண்டு வீராவேசம் கொண்டு, (இன்னம் எவ்வளவு நாளைக்கு எங்கள தாக்கிக்கிட்டு இருப்பீங்க???) நான் இந்த பதிவை http://simpleblabla.blogspot.com/2009/03/blog-post_22.html வெளியிட்டேன்.
உண்மையில் நீங்கள் ஒரு முன்னோடி..... வாழ்த்துக்கள். :-))

நாகராஜன் said...

//வாங்க ராசுக்குட்டி ...எனக்கும் ஒரு சந்தேகமா தான் இருந்த்துச்சு....திருத்திட்டேன்...
உங்க தமிழாசிரியர் கிட்ட நிறைய அடி வாங்கி படிச்சுருப்பீங்க போல இருக்கே...இப்டி மறக்காம வச்சுருக்கீங்க//

அடடடா... இங்கே பாருங்கப்பா... அடி வாங்கி படிச்சிருந்தா மறந்திருப்பேனோ என்னமோ... அடி வாங்காம அன்பால எங்க ஆசிரியரிடம் படிச்துனால தான் இன்னும் நல்லா நியாபகம் இருக்குது...

அது ஆச்சுங்க 21 வருஷம் (10 ம் வகுப்பு படிக்கும் போது இன்னொரு மாணவனுக்கு (அவன் ரொம்ப எழுத்து பிழையோட எழுதுவான்) இதை சொல்லிட்டு இருந்தாங்க... ) ... ஆனா இன்னும் நல்லா நியாபகம் இருக்குது... நான் கடந்த முறை இந்தியா போன போது அந்த ஆசிரியர் காலமாயிட்டாங்கன்னு கேட்டு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. ஹ்ம்ம்ம்ம்ம்..... பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விட்டுட்டீங்க...

தேவன் மாயம் said...

ஏங்க நான் மாஞ்சு மாஞ்சு மயக்குவது எப்படின்னு எழுதிக்கிருக்கேன்!!.................
நீங்க..........எங்களைப் பின்னுறீங்களே !!ஞாயமா?

தேவன் மாயம் said...

சும்மா ஜோக்குத்தான்!